Published:Updated:

வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும்! - நெகிழும் டி.ஆர் ரசிகை| My Vikatan

T. Rajendar

பாக்கியராஜ், டி ராஜேந்தர் ரசிகர்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். இருவரின் படங்களும் திரையரங்குகளில் ரிலீசானால் போதும். மறுநாள் கல்லூரியில் ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன்னர் அதைப் பற்றிய பேச்சு தான்..

Published:Updated:

வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும்! - நெகிழும் டி.ஆர் ரசிகை| My Vikatan

பாக்கியராஜ், டி ராஜேந்தர் ரசிகர்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். இருவரின் படங்களும் திரையரங்குகளில் ரிலீசானால் போதும். மறுநாள் கல்லூரியில் ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன்னர் அதைப் பற்றிய பேச்சு தான்..

T. Rajendar

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கல்லூரியில் படிக்கும்போது ரஜினி கமல் இவர்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு .. அவர்களுக்கு அடுத்தபடியாக பாக்கியராஜ், டி ராஜேந்தர் ரசிகர்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். இருவரின் படங்களும் திரையரங்குகளில் ரிலீசானால் போதும். மறுநாள் கல்லூரியில் ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன்னர் அதைப் பற்றிய பேச்சு தான்.. மகிழ்ச்சியாக விளையாட்டாக தொடங்கும் பேச்சுகள்/விமர்சனங்கள் சில நேரங்களில் சண்டையில் கூட முடிந்தது உண்டு. எனக்கு தனிப்பட்ட முறையில் டிஆரின் தமிழ் மேல் அளவில்லா காதல்.. அவரின் பாடல்கள் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து "பிஎச்டி" பண்ண வேண்டும் என்பது அந்த டீன் பருவத்தில் ஒரு கனவாகவே/லட்சியமாகவே இருந்தது.

பிடித்த பாடல்கள் ஒவ்வொன்றையும் ஸ்பீக்கரில் அலற விட்டு அதனுடனேயே பாடியதெல்லாம் கண் முன்னே அழகான நினைவுகளாய் ... கூடவே அதைப்பற்றி விவாதங்களும்

அடுக்கு மொழி கவிஞன்..

ஒவ்வொரு பாடல்களும் காதலர்களின் தேசிய கீதம்..

எனக்கு மிகவும் பிடித்த அவரின் பாடல்கள் மூலம்... அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேஇந்தப் பதிவு.

T. Rajendar
T. Rajendar

ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமாய்... (நவரசங்கள்) எப்படித்தான் எழுதி இருப்பாரோ எப்படித்தான் இசையமைத்திருப்பாரோ... அவரை படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒவ்வொரு பாடல்களுமே நெஞ்சில் பச்சை குத்தினாற் போல்..

பாடல்களின் கவிதை நயம்.. தாலாட்டும்.

சோகத்தை கூட சுகமாக்கும்.

"ஒரு தலை ராகம்"

"இது குழந்தைப் பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்..."முற்றிலும் முரணான வார்த்தைகளைக் கொண்டு அமைந்த பாடலிது.எதிர்மறை எண்ணங்களைக் கூட தன் எழுத்தோவியத்தில் நம்பிக்கை தரும் விதமாக எழுதியிருப்பார் டி.ஆர். உயிர்களின் உயிர்ப்பில் ஊசலாட்டம் தான் இந்த எதிர்மறை சொல்லாடல்... கண்களுக்கும், காதுகளுக்கும் உறுத்தல் இல்லாத ஒலி/ ஒளி. முரண்பாடுகள் ஒவ்வொன்றையும் பட்டியலிடும் விதம் அழகோ அழகு!

T. Rajendar
T. Rajendar

"சிறகுகள் இல்லா பறவை

ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்.."

உளமறிந்த பெண் தானோ

அவளை தான் நினைத்தது..' இலக்கியச் செழுமை மிக்க பாடல். எஸ்பிபி அவர்கள் அனுபவித்து(ரசித்து) பாடி இருப்பார். (டி ஆர் ஸார் நீங்க வேற லெவல் ஸார்")

*என் தங்கை கல்யாணி

தோள்" மீது தாலாட்ட

என் பச்சை கிளி நீ தூங்கு

தாய் போல தாலாட்ட

என் தங்கமே நீ தூங்கு

நிலவ கேட்டா புடிச்சு தருவேன் மாமன்

உலகக் கேட்டா வாங்கி தருவேன் மாமன்""

என்ன ஒரு அழகான தாலாட்டு. உயிரும் உருகும்!.' என் தங்கை கல்யாணி' படத்தில் டி. ஆரின் இந்த பாடல் அண்ணனின் பேச்சை மதிக்காமல் காதலித்து திருமணம் செய்து கஷ்டப்படும் ஒவ்வொரு தங்கைக்கும் புரியும்.! எஸ்பிபி பாடலின் சோகத்தை உள்வாங்கிக் கொண்டு அருமையாக பாடி இருப்பார்.

T. Rajendar
T. Rajendar

"மண்ணுக்குதிரை அவன நம்பி

வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க

அம்மா நினைச்சாடா.. மாமன் தடுத்தேன்டா.. வார்த்தை மீறி போனாப்பாரு..

மனசு பொறுக்கலடா

.. என் மானம் தடுக்குதடா.."இந்த வரிகளை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் நம்மை அறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும் அதுதான் டி.ஆர் அதுதான் எஸ்பிபி! (டி.ஆருக்கும் எஸ்பிபிக்கும் போன ஜென்ம பந்தமோ.. இருவரின் காமினேஷனில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் இனிக்கும்)

எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் சோக கவிதை!

நெஞ்சில் ஒரு ராகம்

"நெஞ்சம் பாடும் புதிய ராகம்

தாளம் உன்னை தேடுதே..."டி ஆரின் இசையில் "நெஞ்சில் ஒரு ராகம்" படத்தில் இடம்பெற்ற அருமையான துள்ளல் இசை பாடல் . ஹம்மிங் மட்டுமே பாடலுக்கு இனிமை சேர்க்கும் பல பாடல்களுக்கு மத்தியில் இந்த பாடலுக்கு ஹம்மிங் தந்த எஸ்பிபி யை படத்தில் தியாகராஜன் தனது ட்ரம்ஸ் வாசிப்பின் மூலம் உச்சத்துக்கு கொண்டு செல்வார் .

"உன் குரல் கேட்கவே

குயில் கூட்டங்கள் தலைகுனிந்தன

தனை மறந்தன" என்ற பாடல் வரிகளில் ட்ரம்ஸ் துள்ளிக் குதிக்கும்.

இது பாடல் இல்லை.. குட்டி கலாட்டா! இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம்மை அறியாமல் நம் கால்கள் தாளமிடும்.வாய் பாட்டை முணுமுணுக்கும்.

*உறவைக்காத்த கிளி

கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே.. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே.. எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி... உன்னை பாராமலே.மனம் தூங்காதடி... என்ன ஒரு செரிவானப் பாடல்.. எதற்கும் அடங்காத ஒரு வகை இசையமைப்பு டி ராஜேந்தர் அவர்களுடையது.

. "பொய்கை தாமரையில்

புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா...

போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா.." காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் .டி .ஆரின் மெலடிகள் என்றும் கேட்க சுகமானவை.அதிலும் ஜேசுதாஸ், சசிரேகா இணைந்த இந்த பாடல் சுகமோ சுகம்.

T. Rajendar
T. Rajendar

"வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே..' வை கை நீ' என்றுன்னை சொல்கின்றேனே.."இசையை விடுங்க பாஸ்... அவரது பாடல் வரிகளில் துள்ளும் காதலைப் பாருங்கள் .இசைஞானி ,எம்எஸ்வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை பதித்த இசையமைப்பாளர் டி ஆர் என்றால் மிகையில்லை. இந்தப் பாடல் பாடாத எண்பதுகளின் இளைஞர்கள் இருந்திருப்பார்களா...?

*தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற "'தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது

நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்

உன்னை நானும் அறிவேன்

என்னை நீயும் அறியாய்

யாரென்று நீ உணரும் முதற் கட்டம்...

' இந்தப் பாடலின் வெற்றிக்கு அற்புதமான வரிகள் காரணமா ? ஆனந்த்பாபுவின் நடனம் காரணமா? இசை காரணமா?? பள்ளி பருவத்தில் மனப்பாடம் செய்து பாடும் அளவுக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும். தமிழில் விளையாடுவார் இந்த பாடலில் டி ஆர்.

"கவிதைகள் வரைந்தேன்

அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ கடிதங்கள் போட்டேன்

இதயத்தை பதிலாக்கி தருவாயோ..

முல்லை உன்னை அடைய

முயற்சியைத் தொடர்வேன்..

மௌனமாகி போனால்

மனதினில் அழுவேன்..

பாவையின் பார்வையே அமுதமாம்...

தக தக தக....'எவ்வளவு ஒரு ரசனை மிகுந்த வரிகள் பாருங்கள்.

*மைதிலி என்னை காதலி

"ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்.. சலங்கை இட்டாள்ஒரு மாது

சங்கீதம் நீ பாடு.."

தடாகத்தில் மீன் இரண்டு

காமத்தில் தடுமாறி

தாமரை பூ மீது விழுந்தனவோ

இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ..

"இடையின்பின்னழகில்

இரண்டு குடத்தைக் கொண்ட

புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்"... எவ்வளவு அழகான விரசமில்லாத அருமையான வரிகள். இப்படி பெண்ணை வர்ணிக்க யாராலும் முடியாது டி ஆரைத் தவிர...

T. Rajendar
T. Rajendar

என்ன ஒரு அழகிய ரசனை சொல்வதற்கு வார்த்தைகளே தோன்றவில்லை.

இதே படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல்"

" எங்கும் மைதிலி

எதிலும் மைதிலி

எல்லாம் மைதிலி

என் உயிர் மைதிலி அம்மம்மா மைதிலி அன்பானேன் மைதிலி..

பார்க்கத் துடிப்பேன் மைதிலி

பேசத் துடிப்பேன் மைதிலி

நினைத்துப் பார்ப்பேன் மைதிலி

நெஞ்சில் சுமப்பேன் மைதிலி... இது ஒரு சின்னப் பாடல்தான். . ஆனால் பாடலைக் கேட்கையில் மனதை ஏதோ செய்யும்.

*உயிருள்ளவரை உஷா

"வைகைக் கரை காற்றே நில்லு

வஞ்சி தானே பார்த்தால் சொல்லு

மன்னன் மனம் வாடுதென்று

மங்கை தனைத் தேடுதென்று..

காற்றே பூங்காற்றே

என் கண்மணி

அவளைக் கண்டால் நீயும்

காதோரம் போய் சொல்லு..."

இலக்கியம் தரம் வாய்ந்த வரிகள்.நான்கே நான்கு இசைக் கருவிகளைக் கொண்டு 3 மணி நேரத்தில் உருவான பாடலுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் உயிர் கொடுத்திருப்பார்.

'கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம்'.. காதலின் ஆழத்தை இதைவிட அழகாக வேறு வரிகளில் சொல்ல முடியுமா என்ன? 'மேகம் அது விலகாதோ சோகம் அது நீங்காதோ'...

பாடலின் இடையில் வரும் வயலின் மற்றும் கிடாரின் தனி இசை கேட்டு மயங்கி நின்றதெல்லாம் அழகான காலம்.

காதலுக்கு காற்றையே தூது விட்ட மாபெரும் கவிஞன் டி ஆர்.

( இந்த காத்திருப்பும், தவிப்பும் இன்றைய காதலர்களுக்கு இல்லை என்பதால் இது போன்ற பாடல்கள் அந்நியமாகி விட்டதோ?)

*"கிளிஞ்சல்கள்"

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வைநாடகம் அரங்கில் ஏறுதாம்...ஓஓஓஓ..ஜூலி ஐ லவ் யூ..."ஜூலி ஐ லவ் யூ.. "ஐ லவ் யூ வை இதைவிட அழகாக இனிமையாக சொல்லிவிட முடியுமா? 'ஜூலி ஐ லவ் யூ' என்ற வரிகள் ஒலிக்கும் அழகே அழகு!காதலுக்கு புதிய முறையில் சான்று சொன்ன பாடல் வரிகள்

"மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம்ஆடும்

மயக்கம் தரும்

மன்னவனின் திருவுருவம். உன்நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட

தென்றலென வருகை தரும் கனவுகளே".. என்ன ஒரு அழகான கற்பனை. .டாக்டர் கல்யாண் மற்றும் ஜானகிம்மாகுரல்களில் பட்டைய கிளப்பிய பாடல். டாக்டர் கல்யாண் ஹம்மிங்கை பாலு சார் போலவே பாடியிருப்பார். ஜூலி ஐ லவ் யூ.. ஐ லவ் யூ என்ற வரிகளைச் சொல்லாத/ பாடாத (எண்பதில்) இளைஞர்களும் யுவதிகளும் இல்லை என்றே சொல்லலாம். காதலின் மென் உணர்வுகளை பாடலின் வரிகள் அழகாகசொல்லும்.டி.ஆரின் முத்திரை பதிந்த பாடல்களில் ஒன்று இது

T. Rajendar
T. Rajendar

*ராகம் தேடும் பல்லவி

"மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன் அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை..

"இரு விழி கவிதை தினசரி படித்தேன் பொருள் அதை அறிய வழியேதுமில்லை..."என்ன ஒரு கவித்துவமான வரிகள் .நிதானமான மெட்டு .ஆழ்ந்த அர்த்தம்... இனிய இசை ..மனம் உருகும்.இலங்கை வானொலியின் இதய கீதம் . டி.ஆரின் திறமை பாடும் பாடல். இயற்கை சார்ந்து எழுதப்பட்டிருக்கும்.ஆரம்ப இசை அபாரம்.. அற்புதமான வர்ணனை! எஸ்பிபி யின் குரல் இனிமையை என்னவென்று சொல்வது. "ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ.. செங்கரும்புச்சாறும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக் கொண்டது...ஹாஆஆஆ "பாடலின் கிடார்இசை வயலின் இசையோடு கலந்து பாடும்நிலா பாலு குழைந்து நெளிந்து இழைந்(த்)து பாடியதைக் கேட்கும்போது அந்த பௌர்ணமியை ரசிக்க யாருக்குத்தான் மனம் வரும்? மெலடி பாடலிலும் தனது ஏற்ற இறக்கபேச்சுநடையை அழகாக வடிவமைத்திருப்பார். ரம்யமானபாடல்.

*ரயில் பயணங்களில்

."அட யாரோபின் பாட்டு பாட

அடதாளம் நான் பார்த்து போட ஹோய்நையாண்டி மேளம் நான் கொட்டவா

நான் பார்த்த பூவே நீ ஆடவா மானே மயக்கம் தானே" 1981 ஆம் ஆண்டுவெளிவந்த 'ரயில் பயணங்களில்" இடம்பெற்ற பாடலிது. டிஆரின் மயக்கும் இசை ...அழகான பாடல் வரிகள்...எஸ்பிபி அவர்களின் கிறங்கடிக்கும் குரலில்... இன்றைக்கும் எழுந்து ஆடவைக்கும்! நம்மை பாடவைக்கும்!

" ஓரவிழியிலே சேர துடிச்சேன்

சேரன் வில்லிலே புருவம் அமைச்சே "என்ன ஒரு அழகான தமிழ். டிஆரால் மட்டுமே இப்படியெல்லாம் எழுதமுடியும். படத்தில் இன்னொரு பாடல் "வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா..."41 வருடங்கள் கழிந்தும் இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் புத்தம் புதிது போல் இருப்பதே இதனுடைய தனிச்சிறப்பு . ஹாட்குலோப் ஜாமுனுடன் ஜில்லுன்னு வெனிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிடும் மகிழ்ச்சி...

T. Rajendar
T. Rajendar

*ஒரு தாயின் சபதம்"

காதல் எப்படி உருவாகும் ...இதோ இப்படித்தான் பதில் சொல்கிறார் டி ஆர்

"சொல்லாமல் தானே

இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது

கண்ணால தானே இந்த காதல் வளருது

இந்த காதல் வளருதுஉள்ளமோ நினைக்குது

உதடு தான் மறைக்குது.."காதலை கண்கள் வழியாக இதயத்துக்கு கொண்டு செல்லும் வித்தை தெரிந்தவர். டிரம்ஸ், மிருதங்கம், வீணை என கலந்து கட்டி ஒலிக்கும் பாடலில்!"மூடி வெச்ச மொட்டு பூவுக்குள்ள

வண்டு வந்தா வழி கிடைக்குமா

வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டால்

மொட்டின் இதழ் விட்டு கொடுக்குமே "

."தினம் தினம் உன்ன பாக்கையிலேமனம் விட்டு பேச துடிக்கிறேன்...ஊரு கதை தானே நடக்குதுஉள்ளக் கதை உள்ளே மூழ்குது"

இப்படி.. பாடலின் வரிகள் காதலின் தவிப்பை அழகாய் கண்முன்னே காட்டும்.

இப்படி டூயட்டில் கூட காதலியைத் தொடாமல் காதலைப் பற்றி சொல்லிக் கொடுத்தவர் டி ஆர் .

காதல் சோகப்பாடல் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பாடல் "நூலும் இல்லை வாலும் இல்லை" என்ற பாடல்

அனுபவம் மிக்க வார்த்தைகள்,

தாள வாத்தியம் இசை ,

டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல், உயிரோட்டமான வரிகள்... இந்தப் பாடல் 1981ம் வருடம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது

"வசந்த ஊஞ்சலிலே ...

அசைந்த பூங்கொடியே ...

உதிர்ந்த மாயம் என்ன...

உன் இதய சோகம் என்ன..

உன் இதய சோகம் என்ன ..

நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா.'.. அற்புதமான பாடல் படத்தில் பாடல்களுக்கு மட்டுமல்லாமல் வசனங்களுக்கும் தியேட்டரில் விசில் பறந்தது. உதாரணத்துக்கு.."கைவிலங்கு மாட்டி டீட்டாங்கன்னு கவலைப்படுறியா?... ஒரு விலங்கு கிட்ட இப்படி மாட்டிகிட்டோம்ன்னுகவலைப்படுறீயா..?"

"மாப்பிள்ளை உன்னை சந்தோஷமா வச்சு இருக்கிறாராம்மா?அடிக்கடி போன் பண்ணும்மா.. அடிக்குஅடிதான் போன் பண்றேன்"ம்மா

"உனக்கு நல்ல வழிதான் சொல்ல வந்திருக்கேன்..

எந்த வழியும் சொல்ல வேணாம் வந்த வழியே போனா போதும்.."... இப்படி வசனங்கள்...

40 வருடங்கள்கடந்தும் மனதில் பதிந்து இருக்கிறது என்றால் வார்த்தைகளின்(வசனத்தின்) வீரியத்தை பாருங்கள். வசனம் மட்டுமல்ல பாடல்கள் ஒவ்வொன்றும் தேனில் தோய்த்த பலாச்சுளை..

'படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு... பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு'... அவளை நினைக்க வேண்டாம் என நினைத்து அவளையே நினைத்துக் கொண்டிருப்பது தான் காதல் எனும் அரிய தத்துவத்தை அளித்த பாடல் இது.

"பூத்தால் மலரும் உதிரும்

நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.."

"நிலவோதேய்ந்து வளரும் ..

அவள் நினைவோ தேய்வதில்லை"

"பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே...

என்ன ஆழமான வரிகள். உண்மை காதலை சுமப்பவர்களுக்கு இப்பாடல் ஒரு பொக்கிஷம். உண்மையான அன்பு கொண்ட இதயங்களில் ஏற்பட்ட காயங்களின்(ரணங்களின்) வெளிப்பாடு இந்தப் பாடல்.

*பூக்களை பறிக்காதீர்கள்

"மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ..

."உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்".. எவ்வளவு அழகான கவிதை நயம் பாடலில்.. டி ஆரின் பாடல்களுக்காகவேஓடிய படம் இந்த படம்.(நிச்சயதுக்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்.. இந்தப் பாடலை பாடாத 80'ஸ் பெண்கள் எவரேனும் உண்டா)

... இப்படி காலத்துக்கும் அழியாத பல பாடல்களை கொடுத்தவர் . இவரது ஒவ்வொரு பாடல்களும் மொழியின் சிறப்பினை பறைசாற்றும். இன்று கம்பர் இருந்திருந்தால் இவரைப் பார்த்து பெருமைப்பட்டு இருப்பார்.

T. Rajendar
T. Rajendar

இன்றும் பலர் வீட்டில் சுப்ரபாதம்இவர் இசையமைத்த பாடல்கள்தான்... பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் கொடுத்தவருக்கு

அழகான அன்பான இனிப்பானபிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

ஸார்.. வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ..உங்களது பாடல்களைப் பற்றி பேசவேண்டும்.. இது என்னுடைய கனவு ஆசை லட்சியம் நிறைவேறுமா?

நிறைவேறுமென்ற நம்பிக்கையுடன்

அன்புச் சகோதரி

ஆதிரைவேணுகோபால்.

மீண்டும் ஒருமுறை அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார். வாழ்க தமிழாய் வளமாய் நலமாய் !

நீர் ஆயுளும், நிறை செல்வமுமாய் பல்லாண்டு வாழி!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.