Published:Updated:

ஓ.டி.டி தள அடல்ட் கன்டென்ட்ஸ்... டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் கவனத்துக்கு!

 OTT
OTT

ஓ.டி.டி தளங்களின் வழியே குழந்தைகள் அடல்ட்ஸ் ஒன்லி படங்களையும், சீரிஸ்களையும் பார்க்க நேரிடலாம். இது அவர்களின் மனநிலையை பாதிக்க நிறைய வாய்ப்புள்ளது.

ஓ.டி.டி தளங்கள்

கொரோனா லாக்டௌனில் தியேட்டர்கள் எல்லாம் மூடப்பட்ட பிறகு ஓ.டி.டி தளங்களில் படம் பார்ப்போர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. நீங்களும் ஓ.டி.டி-யில் படம், சீரிஸ் பார்க்கும் பெற்றோர்களாக இருந்தால் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

 OTT
OTT

அதாவது ஓ.டி.டி தளங்களில் அடல்ட்ஸ் ஒன்லி படங்களும், சீரிஸ்களும் பரவிக் கிடக்கின்றன. சாதாரணமாக தியேட்டர்களில் 18+ படங்களுக்குக் குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். பெற்றோர்களும் அழைத்துச்செல்ல மாட்டார்கள். ஆனால் ஓ.டி.டி-யில் யார் வேண்டுமானாலும் எந்தப் படத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது.

உங்கள் ஓ.டி.டி அக்கவுன்ட்டை குழந்தைகளுக்குப் படம் பார்க்கத் தரும்போது அவர்கள் அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் உட்பட எதை வேண்டுமானாலும் பார்க்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய கன்டென்ட் உள்ள படங்களைப் பார்க்கும்போது அவை அவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கின்றன. இதுவே பாய்ஸ் லாக்கர் ரூம்(Bois locker room) போன்ற வக்கிர மனநிலைக்கு இட்டுச் செல்கிறது.

ஓ.டி.டி தளங்களில் படம், சீரிஸ் பார்க்கும் பெற்றோர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

Children
Children
பெற்றோர்களும் குழந்தைகளின் கண்களுக்கு எதிரே தனியே அமர்ந்து ஓ.டி.டியில் படம், சீரிஸ் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்களைப் பின்பற்றக்கூடியவர்களே என்பதை மறவாதீர்கள். அவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க முயலுங்கள்.
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

பெற்றோர்களின் கவனத்துக்கு...

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

`ஓ.டி.டி தளங்கள்' என்பவை வியாபார நோக்கத்துக்காக உலகளவில் உள்ள அனைத்து மக்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. மக்களைக் கவர்வதற்கான வழிமுறைகள் அவற்றில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் அடல்ட்ஸ் ஒன்லி கன்டென்ட்கள். தெரிந்தோ, தெரியாமலோ நம் நாட்டில் உள்ள குழந்தைகள் அவற்றைப் பார்க்க நேரிடுகையில் அவர்களின் இயல்பான குழந்தை மனநிலை பாதிக்கப்படலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் 15 வயதுக் குழந்தைகளோடு இந்தியக் குழந்தைகளை ஒப்பிட்டால் நிறைய வித்தியாசங்களைக் காண முடியும். வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு 15 வயதிலேயே தங்களைத் தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதற்கேற்ப அவர்களின் மனநிலையும், பிரச்னைகளை சமாளிக்கும் திறனும் மேம்பட்டு இருக்கும். ஆனால், இந்தியக் குழந்தைகள் வளர்ந்து ஒரு வேலைக்குச் செல்லும்வரையிலும், திருமணமாகும் வரையிலும், ஏன்...? திருமணமான பிறகும் கூடப் பெற்றோர், உறவினர்கள் என்று ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள்.

Children
Children
Representational Image

இதனால் நம் குழந்தைகளுக்கு 15 வயதில் முடிவெடுக்கும் திறனும், பிரச்னைகளை சமாளிக்கும் திறனும் அந்த அளவுக்கு இருக்காது. இந்த நிலையில், தங்களைத் தூண்டக்கூடிய, கிளர்ச்சியூட்டக்கூடிய ஒரு காணொலியைப் பார்க்கும்போது அவர்களின் மொத்த கவனமும் அதில் திசை திரும்ப வாய்ப்பிருக்கிறது. இதனால் படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அவர்களின் மனநிலை வக்கிரமடைந்து வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபட வைக்கலாம்.

அடிமையாக்கும் ஓ.டி.டி தளங்கள்!

OTT
OTT
தொடரும் ஆன்லைன் வகுப்புகள்... பாதிப்படையும் குழந்தைகளின் கண்கள்! - பிரச்னைகளும் தீர்வுகளும்

சாதாரணமாக நாம் தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும்போது அந்தப் படம் மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால், ஓ.டி.டி தளங்களில் அப்படியல்ல. வரிசையாகத் தொடர்ந்து படங்கள் பார்க்கும் வசதி இதில் உள்ளது. இதில் கிடைக்கும் சீரிஸ்கள் ஒரு சீஸனுக்கே 20 எபிசோடுகளைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும். குழந்தைகள் தொடர்ந்து இதையே பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு, விளையாட்டு, தூக்கம் என எல்லாவற்றையும் மறந்து அதற்கே அடிமையாக வாய்ப்புள்ளது.

என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள்?

OTT ஸ்ட்ரீமிங் தளங்கள்
OTT ஸ்ட்ரீமிங் தளங்கள்

பெற்றோர்கள் தங்கள் மொபைலில் ஓ.டி.டியில் படம் பார்த்த பிறகு ஒவ்வொரு முறையும் லாக்அவுட் செய்ய வேண்டும். லாக்அவுட் செய்யாமல் மொபைலை குழந்தைகளிடம் தரும்போது அவர்கள் ஏதேனும் தவறான படங்களைப் பார்க்க வாய்ப்புள்ளது.

குழந்தைகளும் ஓ.டி.டியில் படம் பார்க்க ஆசைப்பட்டால் அவர்களுக்கென ஒரு தனி அக்கவுன்ட்டை ஏற்படுத்தித் தராமல், அவர்களுக்குத் தெரியாமல் நீங்களே பாஸ்வேர்டு போட்டு உங்களின் அக்கவுன்ட்டை பயன்படுத்திக்கொள்ளச் சொல்லலாம்.

சிறியவர்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை... நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது எப்படி?

மொபைல், ஐபேட் வழியே குழந்தைகள் தனியே அமர்ந்து ஓ.டி.டி-யில் படம் பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். ஓ.டி.டி அக்கவுன்ட்டை டிவியில் இணைத்து அதன் வழியே படம் பார்க்க வைக்கலாம். இதன் மூலம் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியும்.

பெற்றோர்களும் குழந்தைகளின் கண்களுக்கு எதிரே தனியே அமர்ந்து ஓ.டி.டியில் படம், சீரிஸ் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்களைப் பின்பற்றக்கூடியவர்களே என்பதை மறவாதீர்கள். அவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க முயலுங்கள்.

OTT
OTT

குழந்தைகளை எப்போதும் தனிமையில் விடாதீர்கள். குறிப்பாக டீன் ஏஜ் குழந்தைகளை! அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் எப்போதும் ஒருகண் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் கண்காணிப்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது" என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

ஓ.டி.டி தளங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மனநல மருத்துவர் கூறும் இந்த எச்சரிக்கை வழிமுறைகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் பெற்றோர்களே!

அடுத்த கட்டுரைக்கு