குழந்தை வளர்ப்பு என்பது பிரத்யேக கலை என்பார்கள். அனைவருக்கும் அந்தக் கலை வந்துவிடுவதில்லை என்பதே உண்மை. சவால்கள் நிறைந்த குழந்தை வளர்ப்பில் பெருந்தொற்றுக் காலம் என்பது வரமா சாபமா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.
பெருந்தொற்றால் கிடைத்த வொர்க் ஃப்ரம் ஹோமால் குழந்தை எப்போதும் பெற்றோரின் அரவணைப்பிலும் கண்காணிப்பிலும் இருக்க முடிவது ஒருவகையில் நல்ல விஷயம்.

ஆனால், குழந்தைகளை ரிலாக்ஸ்டாகவோ விளையாடுவதற்கோ வீட்டைவிட்டு வெளியே கொண்டு செல்ல முடிவதில்லை. டிவி, செல்போன் என கேட்ஜெட்டுகளில் மூழ்கிக் கிடக்க வேண்டிய சூழலில் குழந்தைகளுக்கு தொற்று பயம், மூன்றாம் அலை என்ற அச்சம் எனப் பல்வேறு சவால்களையும் ஒவ்வொரு நாளும் பெற்றோர் கடந்துகொண்டு இருக்கின்றனர்.
பெருந்தொற்றுக் காலத்திலும் குழந்தை வளர்ப்பை முழுக்க முழுக்க வரமாக மாற்றுவதற்காகவே அவள் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைந்து `பெருந்தொற்றும் பேரன்டிங் சவால்களும்' என்ற ஆன்லைன் வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. ஜூன் 26-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5.30 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும்.

பேரன்டிங் வல்லுநர், குழந்தை வளர்ப்புப் பயிற்சியாளர் மற்றும் ஹேப்பி மதர்ஹூட் நிறுவனத்தின் நிறுவனரான ஆனந்தி ரகுபதி நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனை வழங்குவதில் நீண்ட அனுபவம் பெற்ற ஆனந்தி ரகுபதி குழந்தை வளர்ப்பை எவ்வாறு இலகுவாக்குவது, பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் மனநல ஆரோக்கியத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் வளர்ப்பது எப்படி, குழந்தைகளை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிய ஆலோசனைகள் அளிப்பார்.
குழந்தை வளர்ப்பில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கும் நிகழ்ச்சியில் நேரடியாக அவரிடம் ஆலோசனை பெறலாம்.

கட்டணமில்லா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.