Published:Updated:

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?

குழந்தை கட்டுப்பாடு

“டாக்டர் எங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டாம். கலைச்சிடுங்க!” நீண்ட நாள்களாகக் குழந்தையில்லாமல் தவித்த தம்பதியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மருத்துவரே அதிர்ந்துவிட்டார். திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தைக்காகக் காத்திருந்து, தற்போது அது சாத்தியமாகியுள்ள நிலையில், வேண்டாம் என்று கூறுவது ஏன்... “இந்த நேரத்துல குழந்தை பிறந்து அதுக்கு கொரோனா வந்திருச்சுன்னா என்ன பண்றது... கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிச்சதும் குழந்தை பெத்துக்கிறோம்” என்ற பதிலைக் கேட்டு மருத்துவர் அதிர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல தம்பதியரின் மனநிலையும் இன்று இப்படித்தான் மாறியிருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலில் இந்தியா நாளுக்கு நாள் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நோய்ப் பரவலில் இந்தியா உச்சநிலையை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பு. அப்படியென்றால் நோயின் தாக்கம் இன்னும் சில மாதங்களோ பல மாதங்களோ நீடிக்கலாம். இந்தச் சூழலில் தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தைத் தள்ளிப்போடுவது சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது.

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?

குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தள்ளிப்போடுவதற்கான காரணங்கள்

1. குழந்தை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டால் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் என்ற எண்ணம்.

2. கொரோனா காலத்தில் கருச்சிதைவு ஏற்படும் என்ற பயம்.

3. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் குழந்தையை வளர்க்க சிரமம்.

4. குழந்தை பிறக்கும்போதே அதற்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம்.

5. தடுப்பூசி கண்டறிந்த பிறகே குழந்தை.

“கோவிட்-19 பரவத் தொடங்கியதிலிருந்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கை களையும் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மத்திய, மாநில அரசுகள் ஆகியவை வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவற்றில் இதுவரை கோவிட்-19 காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றோ குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தள்ளிப்போட வேண்டும் என்றோ எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. பயத்தில் தம்பதியர் தாங்களாகவே இதுபோன்ற முடிவுகளை எடுக்கின்றனர்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

 ஜெயஸ்ரீ ஷர்மா
ஜெயஸ்ரீ ஷர்மா

அதிகரிக்கும் திட்டமிடாத கர்ப்பம்!

“அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தற்போது மருத்துவமனைகள் சிகிச்சையளிப்பதால், குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை சாதனம் பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் நடைபெறுவதில்லை. அதன் காரணமாக லாக்டௌன் காலத்தில் திட்டமிடாத கர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே ஒன்றிரண்டு குழந்தைகள் இருப்பவர்கள் மீண்டும் திடீரென்று கர்ப்பம் தரிப்பதால் அதைக் கலைப்பதற்காக மருத்துவ மனையை நாடுகின்றனர்.

திருமணமாகி குழந்தைக்குத் திட்டமிடும் தம்பதியர் மகப்பேறு மருத்துவரிடம் அது தொடர்பான ஆலோசனைகளைக் கேட்பது வழக்கம். இப்படிப்பட்ட தம்பதியரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேநேரம் திட்டமிடப்படாத கர்ப்பத்தைக் கலைப்பதற்காக மருத்துவரை நாடுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

சிகிச்சையைத் தவிர்க்கும் தம்பதியர்!

குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட பல தம்பதியர் அதைக் கைவிட்டுவிட்டனர். சிகிச்சையின் தொடர்ச்சிக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் நோய் பரவிவிடுமோ என்ற அச்சம், போக்குவரத்தில் சிக்கல், லாக்டௌனால் சிகிச்சைக்குப் போதிய பணமில்லை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. லாக்டௌன், வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற மாற்றங்களைப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள தங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம். அதாவது, பருமனைக் குறைத்தல், நீரிழிவைக் கட்டுக்குள் வைத்தல், ஆரோக்கிய மான உணவுமுறைக்கு மாறுதல், உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். கோவிட்-19 பரவல் குறையத் தொடங்கிய பிறகு குழந்தைக்குத் திட்டமிடும்போது எளிதாகவும் உடலும் மனமும் தயாராகவும் இருக்கும்” என்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ.

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?

கருத்தரிக்கலாமா, கூடாதா?

சென்னையிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் இதுவரை கோவிட்-19 பாதிக்கப்பட்ட 3,000 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அவர்களில் 200 குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே தாயிடமிருந்து தொற்று பரவியது. தொற்று பரவிய குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் லேசான பாதிப்பு அல்லது அறிகுறிகளற்ற பாதிப்பே இருந்தது. அனைத்து அம்மாக்களும் குழந்தைகளும் பத்திரமாக வீடு திரும்பியிருக்கின்றனர். “தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவும் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தையைத் திட்டமிடுவதற்கு யோசிக்கவே வேண்டாம்; தாராளமாகத் திட்டமிடலாம்” என்பதே மருத்துவரின் ஆலோசனை.

குழந்தைகள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வரங்கள். நோயின் பெயரைச் சொல்லி வரங்களை வேண்டாம் என்பதா?

ஹேப்பி பேபி பிளானிங்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாமதிக்காதீர்கள்!

கோவிட்-19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான மருத்துவ காரணங்கள் எதுவும் இல்லை. பொருளாதார சிக்கல், போக்குவரத்தில் பிரச்னை, வேலையிழப்பு போன்ற காரணங்கள் இருக்கும்பட்சத்தில், 34 வயதுக்குட்பட்ட பெண், 40 வயதுக்குட்பட்ட ஆண் என்றால் ஆறு மாத காலம் திட்டமிடுவதைத் தள்ளிப்போடலாம். இந்த வயதைக் கடந்தவர்கள், பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் இருப்பவர்கள் தள்ளிப்போடக் கூடாது.

கோவிட் -19 காலத்தில் குழந்தைக்குத் திட்டமிடலாமா?

சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோயாளிகள், ஹெச்.ஐ.வி, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அப்படிப் பட்டோர், குழந்தைக்குத் திட்டமிடுவதைச் சற்று தள்ளிப்போடலாம்.

கோவிட்-19 நோயாளிகள் கருத்தரிக்கலாமா?

கொரோனாவுக்கும் கருத்தரித்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் கோவிட்-19 நோயாளிகள் தாராளமாகக் கருத்தரிக்கலாம். நோய்க்கான அறிகுறிகள் குணமாகி, தொற்று ஏற்பட்டு 28 நாள்களுக்குப் பிறகு, கருத்தரிப்புக்குத் திட்டமிடலாம். சிலருக்கு குணமடைந்த பிறகும்

நுரையீரலில் அதன் பாதிப்பு நீடிக்கலாம். அவர்கள் முழுவதும் குணமடைந்த பிறகு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குழந்தைக்குத் திட்டமிடலாம்.