Published:Updated:

வீட்டிலேயே இருக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளுடன் இதெல்லாம் செய்யலாம்... மருத்துவர் வழிகாட்டல்!

பள்ளி, படிப்பு, டியூசன் அதற்கான நேரக் கட்டுப்பாடு என எதுவும் இல்லாத சூழல் அவர்களது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் நாமும் குழந்தைகளோடு அதிக நேரம் செலவு செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே அலறிக்கொண்டிருக்கிறது. தனிமைப்படுதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதில் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த மனநல மருத்துவர் பாலகுரு சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனநல மருத்துவர் பாலகுரு
மனநல மருத்துவர் பாலகுரு

''குழந்தைகளுக்குப் பொதுவாக இந்த நோயின் தீவிரத்தன்மை புரியவில்லை. அவர்களுக்கு இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர்கள் சரியாக இந்த நோயைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். தனிமைப்படுத்தல், கைகழுவுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். உலகமெங்கும் கொரோனா ஏற்படுத்தி வரும் விளைவுகள், அதனை எதிர்கொள்ளும் முறைகளைச் சொல்லித் தர வேண்டும். இதற்கு, செய்தி சேனல்கள், யூடியூப் ஆகியவை உதவியாக இருக்கும்.

'பயம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்' என்ற தாரக மந்திரம் அவர்கள் தலைக்குள் சென்றால் போதும்.
மனநல மருத்துவர் பாலகுரு
வீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்... உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே!

எதிர்மறையான விஷயங்களாக இதைப் பேசாமல் நேர்மறையாக, ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 'பயம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்' என்ற தாரக மந்திரம் அவர்கள் தலைக்குள் சென்றால் போதும். மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, தொடுதல் கூடாது. இருமும்போது வைரஸ் பரவும் என்பதைப் புரிய வைத்தால் போதும். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளின் மனநிலை இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளிக்கூடம் இல்லை. அம்மா, அப்பா உடன் இருக்கிறார்கள். பள்ளி, படிப்பு, டியூசன் அதற்கான நேரக் கட்டுப்பாடு என எதுவும் இல்லாத சூழல் அவர்களது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் நாமும் குழந்தைகளோடு அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கலாம். அதில் நாமும் இணைந்துகொள்ளலாம்.

குழந்தைகள்
குழந்தைகள்

காலையில் 10 முதல் 20 தோப்புக்கரணம் பொறுமையாகப் போடச் சொல்லுங்கள். குளியல் முடிந்ததும் சிறிய தியானம். எளிய வீட்டு வேலையைச் செய்யவிடுங்கள். சைக்கிள், வண்டி துடைப்பது, அவர்களது துணிகள், புத்தகங்கள் அடுக்குவது, செடி பராமரிப்பு. காலை (அ) மாலை வெயிலில் சிறிதுநேரம் விளையாட வேண்டும். சத்தான எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகள் அளியுங்கள். பழ வகைகள் மற்றும் இஞ்சி சேர்த்த மோர், இளநீர், நிலக்கடலை, வறுகடலை, அவல் பொரி வெல்லம், இப்படிக் கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள்.

புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதைகள் சொல்வது, கோலமிடுவது என அவர்கள் விரும்புவதைச் செய்ய ஊக்கப் படுத்துங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் வீட்டிலேயே காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுங்கள். கை, கால், முகம், கழுவப் பழக்கப்படுத்துங்கள், வெதுவெதுப்பான சீரகம் சேர்த்த நீரை அருந்தக் கொடுக்கவும். சிறிது துளசியைச் சாப்பிடலாம். தாயம், பல்லாங்குழி, பம்பரம், பரமபதம் எனச் சிறிய விளையாட்டுகளைக் கற்றுக் கொடுங்கள். வெளியில் செல்லும் முன்பு சிறிது தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெய் தடவி விடவும். மாலையில் தினமும் சாம்பிராணி போடுங்கள் அதில் சிறிது காய்ந்த வேப்பிலை போடலாம்.

இப்படிச் சொல்வதைச் செய்யும்பொழுது, அவர்களைப் பாராட்ட வேண்டும். சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்க வேண்டும். இதை நாம் செய்யும்பொழுது, இதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்குத் தோன்றும். பெற்றோர்களுக்குக் குழந்தைகளுடன் செலவு செய்ய இத்தனை நாள்கள் இனி கிடைக்குமா தெரியாது. கிடைத்த நேரத்தை முறையாகப் பயன்படுத்துங்கள். 21 நாள்கள் தனித்திருந்தாலே போதும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். பயப்பட வேண்டாம் என்பதை உணர்த்துங்கள். அவர்களது மகிழ்ச்சியான மனநிலையைப் பயன்படுத்தி, அவர்களிடம் உள்ள நல்ல குணங்கள், வேண்டாத பழக்கங்கள் ஆகியவற்றைப் புரிய வையுங்கள்.

குழந்தைகள்
குழந்தைகள்
கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!

இது காலம் கொடுத்திருக்கக்கூடிய அருமையான வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். இதைக் கொரோனாவுக்கு எதிரானதாகப் பார்க்காமல், குடும்பத்துடன் செலவு செய்யுங்கள். அதே நேரம் சமூகத்திடமிருந்து தனித்திருங்கள்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு