Published:Updated:

சிங்கிள் சைல்டு, லாக்டெளன் தனிமை... பெற்றோருக்கு 7 ஆலோசனைகள்!

single child
single child ( pixabay )

''அவர்களுடைய நெருக்கமான நண்பர்களின் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ போன் செய்து, பிள்ளைகளைப் பேச விடலாம். இது சிங்கிள் சைல்டுகளின் லாக்டெளன் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி அவர்களை ஜாலியாக உணரவைக்கும்.''

எனக்கு ஒரேயொரு பிள்ளை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். ஒரு பிள்ளையுடன் நிறுத்திவிட்டோம் என்ற வருத்தம் சில மாதங்களுக்கு முன்பு வரை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஏனென்றால், அவன் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தான். அவனுடைய வகுப்பில் அவனுடன் சேர்த்து மொத்தம் 33 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அவன் தினமும் 32 நண்பர்களுடன் சேர்ந்துதான் இருந்தான். ஆனால், லாக்டெளன் வந்த பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்கிறான், தனியாக விளையாடுகிறான்.

'ரொம்ப போரடிக்குதுமா. எப்போமா ஸ்கூலுக்குப் போவேன். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் பாக்கணும்' என்று சொல்கிறான். கொரோனா பயம் காரணமாக அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்கூட விளையாட விட முடியவில்லை. அவன் தனிமையை உணர்கிறானோ...' இப்படி அம்மா ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வருத்தப்பட்டிருந்தார். இவரைப்போல இன்னும் பல அம்மாக்கள் வருத்தப்படுகிறார்கள். ஒற்றை பிள்ளைகளை வைத்திருக்கும் அம்மாக்கள் இந்த லாக்டெளன் தனிமையில் பிள்ளைகளை மகிழ்ச்சியாக எப்படி வைத்திருப்பது என்று உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.

single child
single child
pixabay

அவர்களுடைய பக்கத்திலேயே இருங்கள்!

லாக்டெளன் தனிமையில், விளையாடுவதற்கு உடன்பிறந்தவர்கள் இல்லையெனும்போது, முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுடைய அருகிலேயே இருங்கள். நீங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கிற பெற்றோர் என்றால், உங்களுக்கு அருகே இன்னொரு டேபிளை போட்டு உங்கள் பிள்ளையையும் உட்கார வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை பார்க்க, அவன் ஆன்லைன் வகுப்புகளின் ஹோம்வொர்க் எழுத என்று பிள்ளைக்குத் தனிமை ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளலாம்.

பிள்ளைகளுக்குப் பிடித்ததைச் சமைத்துத் தரலாம்!

பிள்ளைகளுக்குப் பிடித்த உணவுகளை இந்த நேரத்தில் வீட்டிலேயே செய்துகொடுக்கப் பாருங்கள். பிடித்ததைச் சாப்பிடும்போது தனிமையை மறப்பார்கள்.

உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு
உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு

எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் ஈடுபடுத்துங்கள்!

உங்கள் பிள்ளைக்கு படம் வரையப் பிடிக்கிறது என்றால், அதற்கான உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். கலரிங் செய்ய வருகிறது என்றால் வாட்டர் கலர், பேஸ்ட்டல் கலர் என வாங்கிக் கொடுக்கலாம். சில பிள்ளைகளுக்கு ஓவியத்தில் இரண்டு படங்களை வெட்டி ஒட்டும் கொலாஜ் வேலைப்பாடு மிக அழகாகக் கைவரும். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிற இந்த நேரத்தில் பிள்ளைகளின் இது போன்ற திறமைகளை நுணுக்கமாகக் கண்டறிந்து அதற்கான உதவிகளைச் செய்து பாருங்கள். தனிமையை உணரவே மாட்டார்கள்.

ஓவியம் என்பது ஓர் உதாரணம் மட்டுமே... உங்கள் பிள்ளைக்குப் பாடப் பிடிக்கிறது என்றால், அதைக் கற்றுத்தருகிற யூடியூப் சேனல்களைத் தேடிக் கண்டுபிடித்து சேர்த்துவிடுங்கள். ஆடுவதற்குப் பிடிக்கிறது என்றால், பல நடனப் பிரபலங்களும் ஆன்லைனில் நடன வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சமூக வலைதளங்களுக்குச் சென்றாலே இதைக் கண்டறிந்துவிடலாம். அப்படிக் கண்டுபிடித்து உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம். இப்படியெல்லாம் ஆர்வமில்லாத பிள்ளைகளை ஆன்லைனில் எடுக்கப்படுகிற ஆங்கில வகுப்புகளில் சேர்த்துவிடலாம். பிள்ளைகளுக்குப் பிடித்த ஏதோ ஒரு வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தனிமையை உணர மாட்டார்கள்.

single child
single child
pixabay

பிள்ளைகளைப் பலவிதமாக என்கரேஜ் செய்யலாம்!

இது ஓர் அழகான டெக்னிக். நீங்கள் சமைக்கும்போது 'அந்தத் தக்காளியை கொஞ்சம் எடுத்துக் கொடேன்', 'வெண்டைக் காயின் காம்பை எடுத்துக் கொடுக்கறியா', 'கொஞ்சம் பூண்டு உரிச்சுக் கொடுக்கிறியா' என்பன போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம். ஆரம்பத்தில் 'போம்மா' என்று சிணுங்கினாலும், பிறகு மெள்ள மெள்ள உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். துணி துவைக்கும்போது, 'டைமர் செட் பண்ணு', 'துணிய வெளில எடு', 'துணிக்கு க்ளிப் போட்டு ஹெல்ப் பண்ணு' என்று உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுங்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்றால் சமையல்கூட கற்றுத் தரலாம். உங்களுடனே பிள்ளைகள் எந்நேரமும் இருக்கிறபட்சத்தில் தனிமை உணர்வு எங்கிருந்து தோன்றும் அவர்களுக்கு..?

வீட்டிலிருந்து வேலைபார்த்தாலும் காலையில் ஒரு பிரேக் டைம் மாலையில் ஒரு பிரேக் டைம் என்று இருக்கிறது அல்லவா... அந்த நேரத்தில் அவர்களுடன் கேரம் போர்டு, செஸ், பரமபதம் என்று விளையாடலாம்.
Child playing Chess
Child playing Chess
காதல், திருமண வாழ்வைப் பாதிக்கும் இன்செக்யூர்டு உணர்வு... அறிகுறிகள், பிரச்னைகள், தீர்வுகள்!

அவர்களுடைய விளையாட்டுத் தோழர் ஆகுங்கள்!

ஒற்றைப் பிள்ளைகளுக்கு தன்னுடன் பேசவும் விளையாடவும் ஆளில்லை என்று தோன்றலாம். இதற்கு ஒரே வழி, நீங்கள் அவர்களுடைய விளையாட்டுத் தோழர் ஆவது மட்டும்தான். வீட்டிலிருந்து வேலைபார்த்தாலும் காலையில் ஒரு பிரேக் டைம் மாலையில் ஒரு பிரேக் டைம் என்று இருக்கிறது அல்லவா... அந்த நேரத்தில் அவர்களுடன் கேரம் போர்டு, செஸ், பரமபதம் என்று விளையாடலாம். 'அப்போ சமையலை யார் பார்ப்பது' என்று உங்களுக்கு கேள்வி எழலாம். 10 மணிக்கு கம்ப்யூட்டரை லாகின் செய்வதற்கு முன்னால் சமையல் வேலையை முடித்துவிட்டு உட்கார்ந்தால் குழந்தைகளுடன் அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்கள் நேரம் செலவழிக்கலாம். இதுவும் ஒற்றைப் பிள்ளைகளுக்கு தனிமையுணர்வு தோன்றாமல் பாதுகாக்கும்.

நண்பர்களிடம் பேச வையுங்கள்!

வளர்ந்த பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் நண்பர்களுக்கு போன் செய்து அரட்டை அடிப்பார்கள். ஆனால், 8 வயதுக்குள் இருக்கிற குழந்தைகளுக்கு இது தெரியாது. அதனால் நாமாகவே அவர்களுடைய நெருக்கமான நண்பர்களின் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ போன் செய்து, பிள்ளைகளை நண்பர்களுடன் பேச விடலாம். இது ஒற்றைப் பிள்ளைகளின் ஸ்ட்ரெஸ்ஸை நீக்கி ஜாலியாக உணரவைக்கும்.

lockdown single child
lockdown single child
pixabay
கொரோனா கால தற்கொலைகள்... காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்!

குடும்ப வாட்ஸ்அப் குரூப்களில் இணைத்து விடுங்கள்!

இன்றைக்கு எல்லா வீடுகளிலும் குடும்ப வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அதில் பிள்ளைகள் செய்கிற கிராஃப்ட் வேலைகளைப் பகிரலாம். அல்லது அவர்கள் செய்கிற சமையலை, பாடுகிற பாடலை, நடனத்தை என்று குழந்தைகளின் தினசரி நடவடிக்கைகளைப் பகிரலாம். குறிப்பாக, இவற்றை பிள்ளைகளை வைத்தே பகிர வைக்கலாம். இப்படி அப்பா வழி உறவுகள், அம்மா வழி உறவுகள் என்று பிள்ளைகள் நிறைய பேருடன் பேசும்போது அவர்களுக்குத் தனிமை உணர்வு வராமலே போகும். முயற்சி செய்து பாருங்கள் பெற்றோர்களே!

அடுத்த கட்டுரைக்கு