Published:Updated:

ஹாஸ்டலில் பிள்ளைகள்... பதற்றத்தில் பெற்றோர்... எப்படிச் சமாளிப்பது? பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் -15

ஹாஸ்டலில் பிள்ளைகள்.... பதற்றத்தில் பெற்றோர்

ஹாஸ்டலில் சேர்த்தாயிற்று... இனிமேல் பிள்ளைகள் ஒழுக்கமாக, மிகச்சரியாகத் தான் நடந்துகொள்வார்கள் என்று பெற்றோர் நினைக்கக்கூடாது.

ஹாஸ்டலில் பிள்ளைகள்... பதற்றத்தில் பெற்றோர்... எப்படிச் சமாளிப்பது? பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் -15

ஹாஸ்டலில் சேர்த்தாயிற்று... இனிமேல் பிள்ளைகள் ஒழுக்கமாக, மிகச்சரியாகத் தான் நடந்துகொள்வார்கள் என்று பெற்றோர் நினைக்கக்கூடாது.

Published:Updated:
ஹாஸ்டலில் பிள்ளைகள்.... பதற்றத்தில் பெற்றோர்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் 'பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

hostel
hostel

டாக்டர் ஷர்மிளா

நாணயத்தின் இரு பக்கங்கள் போல எல்லா விஷயங்களுக்கும் நல்லதொன்றும் கெட்டதொன்றுமாக இரு பக்கங்கள் நிச்சயம் இருக்கும். ஹாஸ்டல் வாழ்க்கையும் அப்படிதான். பெற்றோர் சொல்பேச்சைக் கேட்காத பிள்ளைகளை ஹாஸ்டல் வாழ்க்கைதான் மாற்றும் என்ற எண்ணத்தில் பல பெற்றோரும் அங்கே சேர்க்க முடிவு செய்கிறார்கள். அதிலும் பள்ளிக்கூட வளாகத்தின் உள்ளேயே இருக்கும் ஹாஸ்டல் என்றால் இன்னும் வசதி என நினைக்கிறார்கள்.

பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதால் நல்லது, கெட்டது என எல்லாவற்றுக்கும் பிள்ளைகளே பொறுப்பேற்கவும் முடிவெடுக்கவும் வேண்டும். விடுதி வாழ்க்கையில் பலதரப்பட்ட மாணவர்களும் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். பலவிதமான சூழல்களும் விடுதி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனுபவங்களும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிள்ளைகளை ஏன் ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள்?

பொறுப்புடனும் சுயமாகவும் இயங்க வேண்டும் என்பதற்காக

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள

பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்ற

படிப்பில் மேம்பட

ஆரோக்கியமாக இருக்க

வாழ்வியல் கலைகளைக் கற்றுக்கொள்ள

தன்னைத்தானே நிர்வகிக்க

வீடு தாண்டிய வாழ்க்கைக்குப் பழக

ஷர்மிளா- ஆஷ்லி
ஷர்மிளா- ஆஷ்லி

ஹாஸ்டலில் சேர்த்தாயிற்று... இனிமேல் பிள்ளைகள் ஒழுக்கமாக, மிகச்சரியாகத் தான் நடந்துகொள்வார்கள் என்று பெற்றோர் நினைக்கக்கூடாது. ஏனென்றால் பதின்ம வயதினரின் மூளையானது வளர்ச்சியடையும் நிலையில்தான் இருக்கும். அந்த நிலையில் பெரும்பாலான டீன் ஏஜ் பிள்ளைகள் சட்டென முடிவெடுத்துவிடுவார்கள்.

அவர்களின் அந்தச் செயலால், முடிவால் ஏற்படப்போகும் பின் விளைவுகள் குறித்து யோசிக்க மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு பெற்றோரின் கண்காணிப்பும் ஆதரவும் அவசியம். அதே நேரம் டீன் ஏஜ் என்பது சுதந்திரத்தையும் பிரைவசியையும் எதிர்பார்க்கும் வயது. அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களைக் கண்காணித்ததுபோலவே டீன் ஏஜிலும் கண்காணித்தால் அவர்கள் கடுப்பாவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படியெல்லாம் கண்காணிக்கலாம்?

உங்கள் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்த டெக்னாலஜி சம்பந்தப்பட்ட விஷயங்கள் உதவும் என்றால் அவற்றைச் செய்யலாம். டெக்னாலஜியின் உதவியோடு பிள்ளைகள் தவறான பாதையில் தவறான நபர்களுக்கு அறிமுகமாவதைக் கண்டுபிடித்துத் தடுக்க முடியும். பிள்ளைகளின் இணையதள பயன்பாட்டையும் அவர்கள் சென்றுவருகிற இடங்களையும் தெரிந்துகொள்ள பெற்றோர் பல சேவைகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு அப்படிச் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்....

Teen age boy (Representational image)
Teen age boy (Representational image)
Pexels

ஜிபிஎஸ் (GPS System)

ஜிபிஎஸ் வசதியுடன் பிள்ளைகளின் செல்போன் மூலம் அவர்களது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம்.

ரெஸ்கியூ டைம் (Rescue Time)

பிள்ளைகளின் இணையதள பயன்பாட்டைக் கண்காணிக்க உதவும் சாஃப்ட்வேர் 'தி ரெஸ்கியூ டைம்'. பிள்ளைகள் எந்தெந்த இணையதளங்களுக்குச் சென்றார்கள் என்பதை ரெக்கார்டு செய்து பெற்றோருக்குக் காட்டும் இது,

ஸ்டெல்த் மோடு (Stealth Mode)

பிள்ளைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கண்காணிக்க உதவும் இது.

ஸ்பை கோப்ரா (Spy Cobra)

கம்ப்யூட்டர் கீபோர்டில் தட்டச்சு செய்யப்பட்ட அனைத்து கீ ஸட்ரோக்குகளையும் டௌன்லோடு செய்ய உதவும். அப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்களை நீங்கள் மட்டுமே பார்க்கும்படியான வசதி இதில் உண்டு.

டேக் ஹோம் மெசேஜ்

பிள்ளைகளைக் கண்காணிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை சந்தேகப்படுவதோ, நச்சரிப்பதோ கூடாது. மிகமிக கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் இது. தங்கள் வாழ்க்கையில் நிகழும் விஷயங்கள் குறித்து, தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் மனம் திறந்து பேசலாம் என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கு வர வேண்டும். அந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. அதற்கு உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் தெளிவான தகவல் தொடர்பு அவசியம்.

parenting
parenting

ஆஷ்லி


விடுதிகளில் சேர்க்கப்படுகிற பிள்ளைகளைக் கண்காணிக்க பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் நிச்சயம் உங்களுக்கு உதவும். அவர்கள் தரப்பிலும் பிள்ளைகளை நிச்சயம் பார்த்து, வழிநடத்துவார்கள். போர்டிங் ஸ்கூலில் படித்த அனுபவம் எனக்கும் உண்டு. அங்கே என்ன நடந்தாலும் உடனே என் அம்மாவுக்குத் தகவல் போகும். அதனால் என்னுடைய பாதுகாப்பு குறித்து அம்மாவுக்கு எந்த பயமும் இருந்ததில்லை.

நீங்கள் எதிர்பார்க்கிறபடியும் விரும்பும்படியும்தான் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் நடந்துகொள்வார்கள் என்று நினைக்காதீர்கள். அந்த வயதும் சூழலும் எங்களைப் போன்றோரை புதிய விஷயங்களைப் பழக, முயற்சி செய்து பார்க்க நிச்சயம் தூண்டும். சிலர் அதில் மது, போதை உள்ளிட்ட விஷயங்களுக்கும் பழகுவதுண்டு.

TeenAge
TeenAge

18 வயதானதும் நான் என் ஃபிரெண்ட்ஸ் உடன் வெளியே போக ஆரம்பித்தேன். நான் நினைத்திருந்தால் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டுப் போயிருக்க முடியும். ஆனால் என் பாதுகாப்பு குறித்து அம்மாவைப் போலவே எனக்கும் பயம் இருந்ததால் நான் அப்படிச் செய்யவில்லை. எதைப் பற்றியும் தன்னிடம் பேசும் சுதந்திரத்தை அம்மா எனக்குக் கொடுத்திருந்தார். அதனால் அவரிடமிருந்து எதையும் மறைக்கும் அவசியம் எனக்கு வரவில்லை.

என் விருப்பங்களுக்கு அம்மா குறுக்கே நின்னதில்லை. ஆனால் அந்த விருப்பத்துக்கு சம்மதிப்பதோடு கூடவே சில கண்டிஷன்களையும் சொல்வார். அதாவது நான் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தேனா, பத்திரமாக இருந்தேனா என்று உறுதிப்படுத்துவார். என் போன் லொகேஷனை நான் அம்மாவுடன் ஷேர் செய்துவிடுவேன். அதனால் அவரும் என்னை சந்தேகப்பட்டதில்லை, நானும் அவரை ஏமாற்ற நினைத்ததில்லை.

-ஹேப்பி பேரன்ட்டீனிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism