Published:Updated:

பாலியல் துன்புறுத்தல்: பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள்!

பாலியல்
பாலியல்

தூக்கத்தில் கனவு கண்டு மிரளலாம். தூங்கும்போது அம்மாவையோ, அப்பாவையோ பிடித்துக்கொள்ளலாம். தூக்கம் வராமல் அவதிப்படலாம்.

பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான குழந்தைகளிடம் காணப்படும் சில பொதுவான அறிகுறிகள் பெற்றோருக்கு குறிப்புகள் கொடுக்கும். வயதுவாரியாக அந்த அறிகுறிகள் வேறுபடும் என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

> இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்:

* அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படும். நன்றாகப் பேசக்கூடிய குழந்தைகள் என்றால் பேச்சுத் திறனில் மந்தநிலை தெரியும். வேறு ஏதேனும் திறமைகளைக் கற்றுக்கொண்ட குழந்தைகள் என்றால் அந்தத் திறமைகள் பின்னுக்குப் போகும். சிறுநீர் கழிக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகளுக்கு மீண்டும் அது பிரச்னையாகும்.

* வயிற்றுவலி, உடல்வலி, காய்ச்சல் எனப் பல பாதிப்புகளை அந்தக் குழந்தைகள் குறிப்பிடலாம். மற்றவர்களைக் கடிக்கலாம், கோபப்படலாம், அழலாம், முன் எப்போதும் இல்லாதபடி திடீரென வித்தியாச உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

எடை அதிகரிப்பது அல்லது குறைவது, அதிக கோபம், எல்லோருடனும் சண்டை போடுவது, வாழ்க்கையில் விரக்திநிலை போன்றவற்றை இந்தக் குழந்தைகளிடம் பார்க்கலாம்.

* தூக்கத்தில் விழித்து பயந்து அழலாம். தூக்கம், உணவு போன்றவற்றிலிருந்த ஒழுங்குமுறை மாறலாம். அம்மாவைப் பிரிந்திருக்கப் பழகிய குழந்தை, திடீரென அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையை வெளிப்படுத்தலாம். சமாதானமே செய்ய முடியாத அளவுக்கு அதிகமாக அழலாம்.

> ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்:

* நன்றாகப் பேசிக்கொண்டிருந்த குழந்தைகள் திடீரென குழந்தைத்தனமாக, வயதுக்குக் குறைவான பக்குவத்தில் பேசுவதைப் பார்க்கலாம்.

* தூக்கத்தில் கனவு கண்டு மிரளலாம். தூங்கும்போது அம்மாவையோ, அப்பாவையோ பிடித்துக்கொள்ளலாம். தூக்கம் வராமல் அவதிப்படலாம்.

* வயிறு வலிப்பதாகச் சொல்லலாம். கோபம், பயம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தலாம். மற்றவர்களை அடிப்பது, கிள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

* அதீதமாக அழலாம். மற்றவர்களுடன் பேச மறுக்கலாம். படிப்பில் கவனத்தைக் குவிக்க முடியாமல் திணறலாம். புதிய விஷங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறலாம்.

* உறுப்புகளைத் தொட்டுக் கொண்டே இருக்கலாம். உறுப்புகளைக் குறிப்பிடத் தவறான வார்த்தைகளை உச்சரிக்கலாம்.

* பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேசாமல் ரகசியம் காக்கலாம். புதிதாக அறிமுகமான நபர்களைப் பற்றிப் பேசலாம். மன முதிர்ச்சியில் பின்தங்கலாம்.

> விடலைப்பருவத்தினர்:

* படிப்பில் பின்தங்குவார்கள். முதல் ரேங்க் வாங்கிய குழந்தை, 20, 30-வது ரேங்க் வாங்கும்.

பாலியல் துன்புறுத்தல்: பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான அறிகுறிகள்!

* போதை மருந்துகளுக்கு அடிமையாவது, திருடுவது, பொய் சொல்வது, தற்கொலை முயற்சிகளைச் செய்வது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது, குடும்ப நபர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது, ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட பல விஷயங்களை மாற்றிக்கொள்வது, பாலியல்ரீதியான விஷயங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவது, அதிக நேரம் தூங்குவது, அதிகம் சாப்பிடுவது, எடை அதிகரிப்பது அல்லது குறைவது, அதிக கோபம், எல்லோருடனும் சண்டை போடுவது, வாழ்க்கையில் விரக்திநிலை போன்றவற்றை இந்தக் குழந்தைகளிடம் பார்க்கலாம்.

* எந்த வயதினராக இருந்தாலும் உடலளவிலும் இந்தக் குழந்தைகளுக்கு மாற்றங்கள் இருக்கலாம். அந்தரங்க உறுப்புகள் வீங்கியிருக்கலாம். சிறுசிறு காயங்கள் தென்படலாம், ரத்தம் வரலாம். ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பில் புண்கள் காணப்படலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பதாகச் சொல்லலாம். அந்த இடத்தில் கிருமித் தொற்றுகள் வந்திருக்கலாம்.

குழந்தைகளிடம் தென்படுகிற இந்த உடலியல், உளவியல் மாற்றங்களைக் கண்டுபிடித்து, அவர்களை ஆற்றுப்படுத்தி, மருத்துவ சிகிச்சைகள் கொடுத்துத் தேற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடையது.

> குழந்தைகளிடம் பெற்றோர் ஏன் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்? எப்படி பேசவேண்டும்? - முழுமையான வழிகாட்டுதலுக்கு > ஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோரே! - பாலியல் மருத்துவர் காமராஜ் https://www.vikatan.com/lifestyle/women/drkamaraj-advised-to-parents-2

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு