Published:Updated:

தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுபவரைக் காதலிக்கலாமா? #LetsSpeakRelationship

காதலில் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் இதுபோன்று கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதால் சாத்தியமில்லை. இதை அந்தப் பெண் உணர வேண்டும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

என்னுடைய உறவினரின் மகள் 11வது படிக்கிறாள். வயது 16. சில நாள்களாக அவளுடைய செயல்களில் மாற்றம் தெரிகிறது. கண்காணித்ததில் அவள் ஒரு வாலிபனிடம் போனில் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள். விசாரித்ததில் அந்த வாலிபனின் வயது 28 என்றும் அவன் வேலை இல்லாதவன் என்று கூறினாள். பேசினால், அவனை விரும்புவதாய் சொல்கிறாள். எப்படிக் காதல் வந்தது என்று துருவித் துருவி விசாரித்ததில், அவன் அந்தப் பெண்ணிடம் என்னைக் காதலிக்கவில்லையென்றால் தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்றும் அடிக்கடி பிளேடால் தன் கையைக் கிழித்துக் காட்டியிருக்கிறான். எங்களுக்குத் தெரிந்து அதற்குப் பயந்துதான் இவளும் காதலிப்பதாய் சம்மதம் தெரிவித்திருக்கிறாள். இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறோம். யாருக்கும் பாதிப்பு வராதவாறு உங்களால் முடிந்த சரியான யோசனையைக் கூறவும்.

- விஜயன் குமார்

அந்தப் பெண்ணை அல்லது அந்த ஆணை மிரட்டுவதால் எதையும் சரி செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை விடுத்து அந்தப் பெண் வேறு ஒரு நபரை உணர்வு ரீதியாகச் சார்ந்திருக்கிறார் என்றால் அது ஏன் என்று முதலில் நாம் யோசிக்க வேண்டும். அதனால் அந்தப் பெண்ணுடன் அவரது பெற்றோர் உணர்வு ரீதியான ஒரு தொடர்பை மெல்ல மெல்ல ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

அந்தப் பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் புரிய வைப்பதன் வழியாக மட்டுமே உண்மையை அவருக்கு உணர்த்த முடியும். காதலில் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் இதுபோன்று கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதால் சாத்தியமில்லை. இதை அந்தப் பெண் உணர வேண்டும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

கத்தியைக் காட்டி ஒரு பெண்ணை அந்த ஆண் காதலிக்கச் செய்கிறார் என்றால் அவர் காதல் பற்றி எந்தளவுக்கான புரிதலில் இருக்கிறார் என்பதையும் நாம் அடுத்தடுத்த நகர்வுகளில் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவருக்கு உணர்த்தலாம்.

16 வயதில்தான் பெற்றோருக்குச் சொல்லாமல் பல அவசரமான முடிவுகளைப் பிள்ளைகள் எடுப்பார்கள். அதை தன் நண்பர்களுக்கு மட்டும் தெரியப்படுத்துவார்கள். அதனால் அந்தப் பெண்ணின் நெருக்கமான நண்பர்களுடனும் பெற்றோர்கள் நட்பில் இருப்பது நல்லது.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship