Published:Updated:

திறமைசாலிகளாக வளர்வது பிள்ளைகளின் பொறுப்பு மட்டுமல்ல! | பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ்-19

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

'எதுக்கும் லாயக்கில்லை.... வேஸ்ட்....' டீன் ஏஜ் பிள்ளைகளை இப்படித் திட்டும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் வளர அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல, அதற்கு உங்கள் ஆதரவும் ஆலோசனைகளும் அவர்களுக்கு அவசியம்!

திறமைசாலிகளாக வளர்வது பிள்ளைகளின் பொறுப்பு மட்டுமல்ல! | பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ்-19

'எதுக்கும் லாயக்கில்லை.... வேஸ்ட்....' டீன் ஏஜ் பிள்ளைகளை இப்படித் திட்டும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் வளர அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல, அதற்கு உங்கள் ஆதரவும் ஆலோசனைகளும் அவர்களுக்கு அவசியம்!

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் 'பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.

பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்து கொண்ட தகவல்கள், அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.

பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

டாக்டர் ஷர்மிளா

'எதுக்கும் லாயக்கில்லை.... வேஸ்ட்....' டீன் ஏஜ் பிள்ளைகளை இப்படித் திட்டும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் வளர அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல, அதற்கு உங்கள் ஆதரவும் ஆலோசனைகளும் அவர்களுக்கு அவசியம் என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

டீன் ஏஜ் பிள்ளைகள் வேல்யூஸ் எனப்படும் மதிப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதையும்விட அவசியம் அவர்கள் நம்பும் விஷயங்களில் உறுதியாக நிற்கவும் செய்கிற விஷயங்களின் விளைவுகளை ஏற்றுக்கொள்வதிலுமான அவர்களது திறமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பதின்பருவ பிள்ளைகளுக்கு அவசியம் கற்றுத்தர வேண்டிய திறமைகள் நான்கு! அவை...

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது

நெகட்டிவ் உணர்வுகளை ஆரோக்கியமாகக் கையாளும் தன்மை

பிரச்னைகளையும் மோதல்களையும் தீர்க்கும் திறன்

சக வயதினர் கொடுக்கும் அழுத்தங்களை நிராகரிக்கும் திறன்.

Parenting (Representational Image)
Parenting (Representational Image)

உங்கள் பிள்ளைகள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய வாழ்க்கைத்திறன்கள்....

நேர்த்தியாக உடையணியும் கலை

நெகிழ்திறன் அல்லது வளைந்துகொடுக்கும் தன்மை

பண நிர்வாகம்

(மிக இள வயதிலேயே பிள்ளைகளுக்கு பண நிர்வாகத்தைக் கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களின் முடிவெடுக்கும் திறனும் பொறுப்புணர்வும் மேம்படவும் நீங்கள் மறைமுகமாக உதவுகிறீர்கள். வாழ்வின் மிகப் பெரிய சவாலே சரியாக நிர்வகிக்கப்படாத பொருளாதாரம்தான். பிள்ளைகள் அவர்களது எதிர்காலத்தில் அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தேவையில்லாமல் போக, பதின்பருவத்திலேயே அவர்களுக்கு பண நிர்வாகத்தை போதிப்போம்.)

எதையும் ஓர் ஒழுங்குடன் செய்யும் திறன்

நேர நிர்வாகம்

முறையான தகவல் பரிமாற்றக் கலை

செல்ஃப் க்ரூமிங்

சுய தொடக்கத்துக்குத் தயங்காத குணம்

தோல்விகளைக் கையாள்வது

எந்தச் சூழல்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பது

வீட்டு நிர்வாகம்

பிரச்னைகளைப் பிரித்தறியும், தீர்வு காணும் திறன்

அடிப்படைக் கல்வி

முடிவெடுக்கும் திறன்

இலக்குகளை நிர்ணயிக்கும் திறனும் அவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற தெளிவும்.

Parenting
Parenting
Image by Free-Photos from Pixabay

பிள்ளைகளின் வெற்றிக்குப் பெற்றோர் எப்படி உதவலாம்?

அவர்களுக்கான சரியான மென்ட்டார்களை அடையாளம் காட்டுவது

ஆக்டிவ்வான, ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலை பழக்குவது

அவர்களின் தனிப்பட்ட திறன்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது

இலக்குகளை நிர்ணயிக்கக் கற்றுத்தருவது

உணர்வுகளைக் கையாளக் கற்றுத் தருவது

பள்ளி, கல்லூரிகளில் நல்ல மாணவராக இருப்பதை உறுதிசெய்வது

ஒழுக்க விதிகளைத் தவறவிடாமல் வளர அறிவுறுத்துவது

ஆஷ்லி

எங்களின் மேல் நீங்கள் வைக்கும் எதிர்பார்ப்பில் தவறில்லை. அதே நேரம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் எங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கவும் ஒவ்வொரு பெற்றோரும் பல வழிகளில் உதவலாம்....

எல்லைகடந்து நேசியுங்கள்

பிள்ளைகளாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பை மட்டும்தான். அதாவது அளவுகடந்த, எல்லைகளற்ற அன்பை. நீங்கள் எங்கள்மீது வைத்திருக்கும் அன்பானது எங்களுடைய மதிப்பெண்கள், நடத்தை உள்ளிட்ட எதையும் சார்ந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையிலான அன்பாக அது இருக்க வேண்டும்.

தோல்விகளை அனுமதியுங்கள்

எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் எப்போதும் எல்லா இடங்களிலும் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. நடைமுறையில் அது சாத்தியமில்லை. பிள்ளைகள் தோற்பதும் இயல்புதான் என்பதை முதலில் நீங்கள் ஏற்கப் பழகுங்கள். தோல்விகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்பதை பிள்ளைகளுக்கும் புரியவையுங்கள். வெற்றிகளை மட்டுமல்ல, எங்களின் தோல்விகளையும் கொண்டாடுங்கள்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

முயற்சிகளைப் பாராட்டுங்கள்

ஒவ்வொரு செயலிலும் நாங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகளையும் முனைப்புகளையும் அங்கீகரியுங்கள். அதற்கு நாங்கள் செய்யும் மெனக்கெடல்களை கவனித்துப் பாராட்டுங்கள். முயற்சிகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, முடிவுகளில் மட்டுமே கவனமாக இருக்காதீர்கள்.

சுய இரக்கமும் அவசியம்தான்

எங்களிடம் நாங்களே கருணையோடு நடந்து கொள்ள எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்

உன்னால் முடியும் என நம்பச் செய்து, ஊக்கப்படுத்தி, நாங்கள் நினைக்கும் இடத்தையும் லட்சியத்தை அடையவும் தேவையான நம்பிக்கையைத் தொடர்ந்து கொடுங்கள்.

எங்கள் ஆலோசனைகளுக்கும் காது கொடுங்கள்

உங்களிடம் பகிர்ந்துகொள்ள எங்களிடமும் ஆலோசனைகளும் கருத்துகளும் இருக்கும். அவற்றுக்கு காது கொடுங்கள்.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்!