Published:Updated:

`படிப்பில் ஈடுபாடு இல்லை..ஆனால்...!' - ஹோட்டலில் பாத்திரம் கழுவிய கோடீஸ்வரரின் மகன்!

விசாரணையில் துவாரகேஷ், "எனக்கு படிப்பில் விருப்பம் இல்லையென்றாலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறி சிம்லாவுக்குச் சென்றேன்" என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிப்பின்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக குஜராத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகன் வீட்டைவிட்டு வெளியேறிச் சாலையோர உணவகங்களில் பாத்திரம் கழுவும் வேலை செய்துவந்துள்ளார். அவரை ஒரு ஹோட்டல் உரிமையாளரின் உதவியுடன் குஜராத் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

depression
depression

குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்தவர் தக்கர். இவரின் மகன் 19 வயதான துவாரகேஷ். கல்லூரிக்குச் சென்ற துவாரகேஷ், இரண்டு நாள்களாகியும் திரும்பி வராத காரணத்தால் தக்கர் குஜராத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வந்துள்ளனர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

`எவ்வளவோ சொன்னோம், அவர் கேட்கவில்லை!' -கரூரில் தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகன்

இந்நிலையில் இமாசலப்பிரதேசம் சிம்லா நகரில் உள்ள ஒரு ஹோட்டல் முதலாளியிடமிருந்து குஜராத் பத்ரா பகுதி காவல் நிலையத்துக்கு துவாரகேஷ் குறித்து ஒரு தகவல் வந்தது, அந்தத் தகவலின் அடிப்படையில் துவாரகேஷ் சிம்லாவில் இருப்பதை உறுதிசெய்த போலீஸார் உடனே அங்கு சென்றனர்.

depression
depression

பின்பு துவாரகேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. கல்லூரிக்குக் கிளம்பிய துவாரகேஷ் படிப்பின்மீது ஏற்பட்ட வெறுப்பு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக ரயிலில் ஏறி சிம்லாவுக்குச் சென்றுள்ளார். கையில் பணம் எதுவும் கொண்டுவராத காரணத்தால் சிம்லாவில் உள்ள தெருவோர உணவகங்களில் பாத்திரம் கழுவும் வேலை செய்துவந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், ஒரு ஹோட்டலுக்கு வேலைதேடிச் சென்ற துவாரகேஷின் தெளிவில்லாத முகத்தைக் கண்ட ஹோட்டல் முதலாளி, துவாரகேஷின் கல்லூரி அடையாள அட்டை மூலம் முகவரியைத் தெரிந்துகொண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். துவாரகேஷை மீட்டுவந்துள்ள போலீஸார் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், விசாரணையில் துவாரகேஷ், ``எனக்கு படிப்பில் விருப்பம் இல்லையென்றாலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதனால்தான் வீட்டை விட்டு வெளியேறி சிம்லாவுக்குச் சென்றேன்" என்று கூறியுள்ளார்.

depression
depression

டீன் ஏஜில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தால் அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இந்நிலையில், பெற்றோர்களும் அவர்களை படிப்பு போன்ற சில விஷயங்களில் அழுத்தம் கொடுக்கும்போது இது போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. தங்கள் குழந்தைகளுக்கு எந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து நடந்துகொண்டால் இதுபோன்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு