Published:Updated:

மிச்சேல் ஒபாமா முதல் குஷ்பு வரை... செலிபிரிட்டி குழந்தை வளர்ப்பு! #Motherhood

''தாய்மை உணர்வை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறேன்'' என்பதுதான் அம்மா சுஷ்மிதாவின் பாச ஸ்டேட்மென்ட். 

வீட்டிலிருக்கும் அம்மாவோ, வேலைபார்க்கும் அம்மாவோ அல்லது செலிபிரிட்டி அம்மாவோ, அம்மாக்கள் எப்போதுமே குழந்தை வளர்ப்பில் எந்தவித சமரசமும் செய்ய மாட்டார்கள், செய்ய முடியாது என்பதுதான் நிஜம். 'செலிபிரிட்டி அம்மாக்கள் வேலைக்கு ஆள்களை வைத்துக்கூட குழந்தைகளை வளர்த்துக்கொள்வார்கள்' என்று பலரும் நினைக்கலாம். ஆனால், முழுக்க முழுக்க கேர் டேக்கர்களை நம்பாமல் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகிற செலிபிரிட்டி அம்மாக்கள் சிலர், தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.

உங்கள் குழந்தைக்கு வெளியுலக வழிகாட்டி வேறு எதுவுமல்ல... உங்கள் செயல்கள்தான்! #Parenting
2
Aiswarya Rai with her mom and daughter ( www.instagram.com/aishwaryaraibachchan_arb/ )

''குழந்தை வளர்ப்புக்கு ஆட்களை நியமிப்பதில் எனக்கு உடன்பாடில்லை'' - ஐஸ்வர்யா ராய்

''எனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் என் மகள் ஆராத்யாவை கவனிப்பதற்குத்தான் முதலிடம் கொடுத்து வருகிறேன். அவளிடம் 'இதைச் செய்... அதைச் செய்யாதே' என்றெல்லாம் நான் கட்டளைகள் இடுவதில்லை. எனக்கு அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கூடவே எல்லாவித பாதுகாப்புகளுடனும் அவள் வளர வேண்டும். அவளுடைய வாழ்க்கையை அவள் செளகர்யமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். என் மகளை வளர்ப்பதற்கு நிறைய கேர் டேக்கர்களை நியமிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குழந்தை வளர்ப்பில், நான் என் அம்மா விருந்தா ராயைத்தான் ரோல் மாடலாக வைத்திருக்கிறேன்.''

3
Michelle Obama with her family ( www.instagram.com/michelleobama )

''என் வாழ்க்கையையே ரோல் மாடலாக்கி வருகிறேன்!'' - மிச்சேல் ஒபாமா

''இந்த உலகத்தைவிட, ஏன் என் வாழ்க்கையைவிட என் இரண்டு மகள்களைத்தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். அதனால்தான், என் வாழ்க்கையையே அவர்களுக்கு ரோல் மாடலாக்கி வருகிறேன். தினமும் காலையில் எழுந்தவுடன் வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆரோக்கியமான உணவுகளைத்தான் சாப்பிடுவேன். என்னைப் பார்க்கிற அவர்களும் ஒரு குடும்பத்தலைவியான பின்னரும் தங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள் இல்லையா?''

4
Sushmita Sen with her daughters ( www.instagram.com/sushmitasen47/ )

''தாய்மை உணர்வை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறேன்'' - சுஷ்மிதா சென்

இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிற சுஷ்மிதா சென், மகள்களுடன் இருக்கிற புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வார். சில மாதங்களுக்கு முன் வந்த தன் பிறந்த நாளன்று, தனக்கு மகள்கள் கொடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி வீடியோவைக்கூட போஸ்ட் செய்திருந்தார் சுஷ்மிதா. 'உங்களுக்கு 18 வயதான பிறகு, உங்களைப் பெற்ற பெற்றோர்களைப் பார்க்கலாம்' என்று சுஷ்மிதா சொன்னதை அவருடைய தத்து மகள்கள் ஏற்கவில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய குழந்தை வளர்ப்பின் மூலம் மகள்களின் மனங்களை வென்றிருக்கிறார் இந்த முன்னாள் உலக அழகி. ''தாய்மை உணர்வை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறேன்'' என்பதுதான் அம்மா சுஷ்மிதாவின் பாச ஸ்டேட்மென்ட்.

5
Kushboo ( www.instagram.com/khushsundar/ )

''பாக்கெட் மணிக்குள் சேமிக்கவும் வேண்டும்!'' - குஷ்பு

''வாரத்தின் ஐந்து நாள்கள் தொடர்ந்து வேலைபார்த்தால், அடுத்த இரண்டு நாள்கள் நிச்சயம் என் மகள்களுக்காகத்தான் செலவிடுவேன். அவர்கள் முன்னிலையில் நானும் சுந்தரும் எங்கள் வேலைகுறித்து எதுவுமே டிஸ்கஸ் செய்ய மாட்டோம். இவ்வளவு ஏன், நாங்கள் பெற்ற விருதுகள் எதுவுமே எங்கள் வீட்டை அலங்கரிப்பதில்லை. பெற்றோர் என்பதைத் தாண்டி, நானும் சுந்தரும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறோம். அதனால்தான் அவர்களுடைய கருத்துகளை எங்களுடன் முழுக்க முழுக்க பகிர்ந்துகொள்கிறார்கள். பண விஷயத்தில் நான் ரொம்பவும் ஸ்டிரிக்ட். நான் தருகிற பாக்கெட் மணிக்குள்தான் அவர்களுடைய தேவைகளையும் பார்த்துக்கொண்டு, சேமிக்கவும் வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.''

6
Kareena Kapoor and her Son

''குழந்தை வளர்ப்புப் புத்தகங்களைப் படிப்பதில்லை'' - கரீனா கபூர்

''வேலைபார்க்கும் அம்மாக்களுக்கு, தங்களால் ஒரு குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். என் மகன் முன்னால் நான் ஒரு சந்தோஷமான அம்மாவாகவே காட்சியளிப்பேன். குழந்தை வளர்ப்புப் புத்தகங்களைப் படித்து, அதன்படி என் தைமூரை வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஓர் அம்மாவாக, என் மகன் மூலம் எனக்குக் கிடைக்கிற தினசரி அனுபவங்கள் மூலமாகவே தைமூரை வளர்க்க விரும்புகிறேன். அவன் விரும்பும் வாழ்க்கையையே அவனுக்கு நான் கொடுக்க விரும்புகிறேன்.''

7
Neha Dhupia in shooting with her daughter ( www.instagram.com/nehadhupia )

''அவளுடைய மூன்றாம் மாதத்திலிருந்தே என்னுடன் ஷூட்டிங் வருகிறாள்'' - முன்னால் மிஸ். இந்தியா நேஹா துபியா

''என் மகள் காலையில் எழுந்திருப்பதற்கு அட்லீஸ்ட் 15 நிமிடங்களுக்கு முன்னாடியே நான் கண்விழித்தால்தான் அவளுக்கான என் கடமைகளைச் செய்ய முடியும்'' என்கிற நேஹா, தன் மகள் மெஹரை ஷூட்டிங் நேரங்களில்கூட தன்னுடனே வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ''அவள் மூன்று மாத குழந்தையாக இருக்கும்போதே நான் ஷூட்டிங் போக ஆரம்பித்துவிட்டேன் என்பதால், மெஹரையும் என்னுடன் அழைத்துச் சென்றுவிடுவேன். எனக்கு ஷாட் வைக்கும் நேரத்தில்தான், அவள் பசிக்காக அழுவாள். நான் டைரக்டரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவளுக்குப் பாலூட்டப் போவேன். அந்தத் தருணங்களில், என்னுடைய குளோசப் ஷாட்ஸை எடுக்கச் சொல்லிவிடுவேன். அவளுக்கு பால்குடி மறந்தபிறகு, நானும் என் கணவரும் சேர்ந்துதான் அவளைப் பார்த்துக்கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை குழந்தை வளர்ப்பில் அம்மாவும் அப்பாவும் பொறுப்புகளை சம அளவு பகிர்ந்துகொள்ள வேண்டும்.''

8
Sohalikhan with her daughter ( www.instagram.com/sohailkhanofficial )

''குழந்தைகள் நம்மைப் பார்த்து அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்'' - சோஹா அலிகான்

மகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அப்பா தினம் ஒரு கடையின் பெயரைப் படிக்கச் சொல்கிறார்... ஏன் தெரியுமா?

நாத்தனார் கரீனா கபூரின் மகன் தைமூரைப் போலவே, சோஹா அலிகானின் மகள் இனாயாவும் சோஷியல் மீடியாவின் வைரல் குழந்தைதான். ''என் வீட்டில் நான்தான் இளையவள். அதனால் எனக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது. என் மகள் பிறந்த பிறகு நான் அப்படியே மாறிவிட்டேன். கொஞ்சம்கூட சோர்வில்லாமல், அவளை எப்போதும் நான்தான் பார்த்துக்கொண்டேன். வீட்டிலிருப்பவர்கள் யாராவது என் மகளைப் பார்த்துக்கொள்கிறேன் என்றாலும், நானும் கூடவே இருப்பேன். இதுதான் தாய்மைபோல... குழந்தைகள் நம்மைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக, அம்மாவைப் பார்த்து. அதனால், நான் ஒரு சிறந்த மனுஷியாக இருக்க விரும்புகிறேன்.''

அடுத்த கட்டுரைக்கு