Published:Updated:

`எப்பய்யா ஸ்கூல் திறப்பீங்க..!' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan

"வேற வேற"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போய்ட்டாங்க பெற்றோர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"எப்ப கொரோனா முடிவுக்கு வரும்... இவர்களுக்கு எப்ப ஸ்கூல் திறப்பாங்க" என்பதே குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்க்கு வரும் சிந்தனை. லாக்டெளன் துவங்கும் போது 'அம்பி' விக்ரமை போல் அமைதியாக இருந்த குழந்தைகள் இப்போது 'அந்நியன்' விக்ரம் போல மாற ஆரம்பித்துவிட்டார்கள்.

நூறு குழந்தைக்குக் கூட பாடம் சொல்லிக் கொடுத்து விடலாம் ஆனால் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பொறுமையின் 'four' லைனுக்கே போயிடுறாங்க பெத்தவங்க.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

குடும்பமாக தாயம் விளையாடுவது, பட்டம் விடுவது, பம்பரம் விடுவது என முதல் லாக்டெளன் எளிதாய் கடந்து விட்டது. ஆனால் அடுத்து வந்த லாக்டெளனில் எல்லாம் "வேற வேற"னு கேட்கும் 'நீயா நானா' கோபிநாத் போல குழந்தைகளும் அடுத்து என்னனு அடிக்கடி கேட்க ஆரம்பிக்க, மாஸ்க் போடாம மஃப்டி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டது மாதிரி கலங்கிப் போயிருக்காங்க பெற்றோர்கள்.

அரைச்ச மாவை அரைப்போமா, துவைச்ச துணியை துவைப்போமாங்கிற மாதிரி ஓயாம நம்மையும் கார்ட்டூன் சேனல் பார்க்க வச்சு காதுவலி வந்ததுதான் மிச்சம்.

அனிச்சையா நாமும் 'பேக் பேக்'னு சொல்லுங்கனு சொல்லும்போது திரும்பச்சொல்வது என ஆரம்பித்து 'குள்ளநரி திருடக்கூடாதுனு சொல்லும்போதெல்லாம் தலையாட்டுறது வரை குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிடுறாங்க.

#வீட்டுக்கு வீடு

அலாரம் அடிக்கும் போதே அம்மானு கூப்பிட்டு எழுந்த குழந்தைகள் இப்ப ஒன்பது மணியானாலும் அடிச்சு எழுப்ப வேண்டியதாயிடுச்சு. தூங்கி எழுந்து பத்து மணிக்கு சாப்பிட ஆரம்பிச்சா சரணம் ஐயப்பா சொல்வது மாதிரி சாப்பிடு சாப்பிடுனு ஓயாமல் சொன்னால்தான் ஒன்றரை மணி நேரத்தில் தட்டு காலியாகுது.

தந்தையுடன் விளையாடும் பிள்ளைகள்
தந்தையுடன் விளையாடும் பிள்ளைகள்
Pixabay

'அடுக்கி வைத்தால் அடகுக்கடை களைச்சுப் போட்டால் சந்தைக்கடை' மாதிரி வீடே வருமானவரித்துறை ரெய்டு வந்த மாதிரி எப்பவும் களைந்து இருக்கும். இதுல நமக்கு வேண்டிய பொருளை எங்க இருக்குனு தேடி எடுப்பது வில்லன் வைத்த டைம் பாமை தேடி எடுத்து வயரை கட் செய்வதுபோல த்ரில்லானது.

ஒரு நாள்... முகத்துக்கு போடுற பவுடருடன் புண்ணுக்கு வைக்கும் போரிங் பவுடரை போட்டு வைக்க அதையறியாமல் போட்டு முகமெல்லாம் வெந்துபோன கதையெல்லாம் நடந்திருக்கு இந்த நாள்களில்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினிமாவில் கொலைகாரனை பார்த்த அப்பாவி 'வீல் வீல்' னு கத்திட்டு ஓடுவது போல இவர்களும் வீட்டுக்குள் கத்திக்கொண்டு ஓடும்போது நமக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகும். மாடி மேல் குழந்தைகள் இருந்தால்... குதிக்கும் குதியில்... தலைக்குமேலே பாகுபலியில் மாடுகள் ஓடும் சத்தம் எல்லாம் கேட்கும்.

இந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள்! -  முன்னோடியாகத் திகழும் தமிழகம் #MyVikatan

வீட்டுக்குள் சங்கிலி அத்துட்டு ஓடும் திருடன் போல எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பாங்க. ஒருநாள் நோட்டில் தவறாய் எழுதியதை நன்றாக அழித்துவை... அதில் உன் முகம் தெரியனும்னு சொன்னேன். சில நிமிடத்தில் அவங்க போட்டோவை ஒட்டி வைத்து அப்பிராணியா இப்ப ஓகேவா னு நம்மையே ஆச்சர்யப்படுத்தினாங்க.

Kids Crying
Kids Crying
Arwan Sutanto on Unsplash

டிவி ரிமோட்டுக்கு வாயிருந்தால் வாலன்ட்ரி ரிட்டையர்மென்ட் வாங்கியிருக்கும். அப்படி அதை ஓவர்டயம் பாக்க வைப்பது, எங்கே போனை ஒளிச்சு வைத்தாலும் கண்டுபிடிக்கும் டிடெக்ட்டிவ் மூளையோடு செயல்படுவது, work from homeல் இருக்கும்போது ஓய் னு கத்திட்டு ஓடிவிடுவது, பேட்டரி தீராத CCTV போல் எப்போதும் பெற்றோரை கண்காணிப்பது, ஆண்ட்ராய்டு போன்களுக்கும் டிவி ரிமோட்களுக்கும் வாரிசுரிமை போர் தொடுப்பது என இந்த வாண்டுகள் எல்லாம் சேட்டை மன்னர்கள்.

எந்த போனில் எந்த கேம் இருக்கு, எத்தனை மணிக்கு விளையாடனும், போன்ல எந்த பேட்டர்ன் மாத்தினாலும் அஞ்சு நிமிசத்தில் அலேக்கா கண்டுபிடிச்சு சார்ஜ் தீரும் வரை விளையாடுவது என ஆன்லைன் வெறி கண்ணையன்களாகவே மாறிடுறாங்க.

'உட்கார்ந்து விளையாடு பாப்பா... நாம் ஓய்ந்திருக்க லாகாது பாப்பா' என நவீன ரைம்ஸ் பாடும் நாளைய சிற்பிகள்.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

எப்போதும் கூச்சல்கள் இருந்தாலும்... இந்தப் பூனையும் பால்குடிக்குமானு ஆன்லைன் க்ளாஸில் அத்தனை பவ்யமா இருப்போரை பார்க்கும்போது செவாலியே விருதே கொடுக்கலாம்னு தோன்றும். மிஸ்கிட்ட சொல்றேன்னு மிரட்டி மிரட்டிதான் பணிய வைக்க வேண்டியிருக்கு. மேலும் இவங்க சர்க்கிள்ல இருக்கிற தாத்தா பாட்டிக்கு போன் போட்டு அவர்களை துளைச்சு எடுப்பாங்க.

டிஸ்ப்ளே உடைப்பது, போனில் வைரஸ் ஏற்றுவது, என்னென்னவோ லாகின் செய்வது என ஸ்லீப்பர் செல்களாக மாறி பாடாய் படுத்துவார்கள். வீட்டில் அப்பா-அம்மா சண்டை, மாமியார்-மருமகள் சண்டை என அடிக்கடி நடப்பதால் இவர்களோட எண்டர்டெயின்மென்ட்டுக்கு குறையே வருவதில்லை.

10 மணிக்குள் படுக்கைக்கு சென்றால் காலை 7 மணிக்குள் எழுந்து பள்ளிக்கு தயாராகிவிடும் பழக்கம் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டது. நெடுநேரம் டி.வி பார்ப்பது, தாமதமாக எழுவதால் பசியில்லை என ஏமாற்றுவது என ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்து விட்டன.

நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
மணிகண்டபிரபு

பள்ளியில் தூங்கி வழியும் கும்பகர்ணன்கள் வீட்டில் பகல் தூக்கம் என்றால் என்ன என்பார்கள். முறையாக ஜீரணமாகாமல் காலை கடனெல்லாம் மாலை கடனாகிவிடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. 'லீவுதான விடு' எனும் பெற்றோரின் வார்த்தைகள் அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.

செல்போனில் விளையாடும் குழந்தை
செல்போனில் விளையாடும் குழந்தை
Pixabay

ஆன்லைன் வகுப்பு முடிந்தவுடனும் நெடுநேரம் தொடு திரையையோ, கணினியையோ பார்ப்பதால் உறக்கம் வருவதில்லை. அதிக ஒளியை கண் அருகிலேயே வைத்துப் பார்க்கும் அவலத்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் இதெல்லாம் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது.

பாவம் நம் குழந்தைகள், அவர்களும் பல இடர்களை சந்திக்கிறார்கள்.

நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பது அவர்களை விரைவில் சோர்வடையச் செய்கிறது. சில சமயங்களில் குழந்தைகள் தனிமையில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

ஆன்லைன் வகுப்புகளில் போதிய ஆர்வமின்மை காரணமாக ஓரிடத்தில் உடல் இருப்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர் குழந்தைகள்.

சிந்திக்கும் திறன், உற்சாகத் திறன் போன்றவை குறைந்துவிட்டது. பெற்றோரில் ஒருவர் அரவணைப்பார்கள் என்ற எண்ணத்தில் பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.

வீட்டிலேயே இருப்பதால் நொறுக்குத் தீனிகள் அளவின்றி சாப்பிடுகின்றனர். பிள்ளைகளின் இந்த ஆசையை பூர்த்தி செய்வதில் ஆரோக்கியமான உணவை தவிர்த்து விடுவதை பெற்றோர் கவனிக்க வேண்டும்.

நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம்.
மணிகண்டபிரபு

ஊரடங்கு, பள்ளிகள் மூடல் போன்றவற்றின் மூலம் நான்கு குழந்தைகளில் ஒருவர் கவலையுடனும், மனச்சோர்வுடனும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 6000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் திரட்டிய ஆய்வில், 65 சதவீத குழந்தைகள் சலிப்பு மற்றும் தனிமை உணர்வுகளுடன் போராடுவதாக தெரியவந்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் சமூக ஆதரவு இல்லாத குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

சில குழந்தைகளை தனிமையில் வீட்டில்விட துணிவின்றி பெற்றோர்களும் அவர்களின் வேலைக்கு உடன் அழைத்து செல்கின்றனர் அல்லது நாள் முழுக்க டிவியே கதியென்று இந்தக் குழந்தைகள் இருக்கின்றனர்.

பிள்ளைகளின் நலன் கருதி, இனியும் பெற்றோர்கள் பிள்ளைகளை விடுமுறை மனநிலையில் விட கூடாது, அதற்கு என்ன செய்யலாம்?

நீண்ட நாள்கள் ஆகிவிட்டதால் கற்கும் மனநிலை கொண்டுவர தினசரி எழுத்துக்களை படிக்க வைத்து வாசிப்புத்திறனை ஊக்குவிக்கலாம். அடிப்படை கணிதச் செயல்பாடு மற்றும் வாய்ப்பாடு படிக்க வைக்கலாம். சுவரில் இந்தியா மற்றும் உலக வரைபடங்களை ஒட்டி இடங்களை கண்டுபிடிக்கச் சொல்லலாம். ஓவியங்கள் வரைய வண்ணமிட பழக்குவதன் மூலம் ஓரளவு மனநிலையை சரிசெய்யலாம். நாளிதழ்கள் வாசிக்க வைத்தால் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் வரும்.

குழந்தைகள்
குழந்தைகள்
Pixabay

செல்போனையே முடிந்தவரை தராமல் இருப்பது, உரையாடுவது, விளையாடுவது, கையெழுத்தை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி தருவது என செய்யலாம். பெற்றோர் தன்னுடனேயே நாள் முழுவதும் இருப்பதில் குழுந்தைகளுக்கு ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தப் பேரிடர் காலத்தில் அவர்களின் கற்றலுக்கு பெற்றோர்களால் உதவ முடியும். அது நம் கடமையும் கூட.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு