Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்

சிங்கிள் பேரன்ட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
சிங்கிள் பேரன்ட்டிங்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் சிங்கிள் பேரன்ட்டிங் குறித்து நடிகை ரோகிணி.

பரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் சிங்கிள் பேரன்ட்டிங் குறித்து நடிகை ரோகிணி.

Published:Updated:
சிங்கிள் பேரன்ட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
சிங்கிள் பேரன்ட்டிங்

ருகாலம் இருந்தது. அப்பா - அம்மாவுடன் தாத்தா - பாட்டி, சித்தப்பா - சித்தி, பெரியப்பா - பெரியம்மான்னு உறவுகள் சூழ வாழ்ந்தாங்க குழந்தைகள். அவங்க கொடுத்து வெச்சவங்க. அடுத்த தலைமுறை அப்பா - அம்மாக்கள், அப்பா, அம்மா வீட்டை விட்டுப் பிரிஞ்சு வந்தாங்க. இவங்க குழந்தைகளோட உலகம் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை மட்டும்னு சுருங்குச்சு. அடுத்ததா, இப்போ அதிகரிச்சிட்டு வர்ற குழந்தைங்க பத்திதான் நான் பேசப்போறேன். அவங்க, சிங்கிள் பேரன்ட் வளர்க்கும் குழந்தைகள். அப்பா, அம்மா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தங்களோட மட்டும் வாழ நிர்பந்திக்கப்பட்ட பிள்ளைகள். கணவன், மனைவி இடையே பிரிவோ அல்லது இழப்போ அதுக்கான காரணமா அமைஞ்சுபோகுது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என் அனுபவத்துல சொல்றேன்... ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள் எதிர்காலத்துல சவால்களை எதிர்கொள்கிற துணிச்சல் மிக்கவங்களா, தன்னம்பிக்கை மிளிரக் கூடியவங்களா நிச்சயம் இருப்பாங்க.

சிங்கிள் பேரன்ட்டா வாழ்ந்திட்டிருக்கிறவங்க வாழ்க்கை சோகம், கோபம், பாசம், அழுகை, ஆங்காரம் ஆகியவற்றின் கலவையாதான் இருக்கும். மனதளவுல பலவீனமான சிங்கிள் பேரன்ட்டுகள் சிலர், ‘இப்படி நாம வாழ்ந்துதான் ஆகணுமா?’ன்னு எல்லாம்கூட நினைக்கிற சூழல்கள் வரலாம். அவங்களுக்கெல்லாம் இங்க நான் பேசுற விஷயங்கள் பயன்படும்னு நம்பறேன்.

ஒற்றைப் பெற்றோர் நிறைய பேர்கிட்ட ஓர் எண்ணம் இருக்கு. ‘நாம குழந்தையைத் திட்டுறப்ப சமாதனப்படுத்த ஆள் இல்ல. அதனால பிள்ளையைத் திட்டக் கூடாது. ரொம்பவும் கண்டிக்கக் கூடாது’ன்னு நினைக்கிறாங்க. இதனாலேயே குழந்தை கேட்டதை வாங்கிக் கொடுப்பதும், அளவுக்கு அதிகமா செல்லம் தருவதுமா இருக்காங்க. என்னைப் பொறுத்தவரை இது கூடாது. ஏன்னா, இதைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றப்போ பின்னாளில், ‘அப்பா (அல்லது அம்மா) வளர்க்காத பிள்ளை இல்லையா, அதான் இப்படி’ங்கிற பேச்சுகளைக் கேட்க வேண்டி வரலாம். என்னைப் பொறுத்தவரை, குடும்பத்தில் யாருமே பக்கத்துல இல்லாத சூழல்லதான் என் பிள்ளையின் பால்ய நாள்களை நான் கடந்தேன்னாலும், மேற்சொன்ன தவற்றை நான் செய்யலை. `பிள்ளைகள் மேல நாம இரக்கப்பட்டுட்டே இருந்தா, அவங்களுக்குள்ள சுய பச்சாதாபம் வராதா? அது அவங்களோட தன்னம்பிக்கையைக் குலைக்கக் காரணம் ஆகிடும்’ என்பது என் எண்ணம்.

செல்லம் கூடாதுன்னு நான் சொல்லல. ஆனா, அது இரக்கம் காரணமாகச் செலுத்தப்படுறதா இல்லாமப் பார்த்துக்க வேண்டியது அவசியம். அப்பா, அம்மா ரெண்டு பேரோடும் வசிக்கிற மத்த குழந்தைகள்போலவே, சிங்கிள் பேரன்ட்டுகளின் குழந்தைகளுக்கும் கண்டிப்பும் செல்லமும் சரிசமமாகத்தான் தரப்படணும்.

ரகு (கணவர் ரகுவரன்) இறந்த சமயத்துல ரொம்பவே மன அழுத்தத்துல இருந்தான் என் மகன் ரிஷி. அந்தச் சூழல்ல இருந்து வெளியில வர்றதுக்கான பாதையை அவனே கண்டுபிடிக்கட்டும்னு பொறுமையா இருந்தேன். இந்த மாதிரி நேரங்கள்ல பொறுமை ரொம்பவே அவசியம். அவனா ஒரு வழியைக் கண்டுபிடிச்சான். அது என்னன்னா, எந்த நேரமும் டி.வி பார்ப்பது. அவனே ஒரு தடவை வாய் திறந்து, ‘டி.வி பார்க்கிறப்ப எல்லாம் மறந்துடுதும்மா’ன்னு சொன்னான். அதனால அதை நான் தடுக்கலை. பசங்க சொல்றது சின்ன விஷயமா இருந்தாலும், அதுக்கு நாம காது கொடுக்கிறப்ப, பாசிட்டிவான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். நண்பர்கள், பள்ளிக்கூடம்னு வீட்டுக்கு வெளியில என்ன நடந்தாலும் பசங்க அதை நம்மகிட்ட பகிரணும்னா, முதல்ல நாம அவங்க சொல்றதைக் கேட்கணும்.

அதேபோல, பிள்ளை ஒரு விஷயத்தைக் கேட்டு அடம்பிடிச்சு நாம கண்டிக்கும்போது, ‘நீ செய்ற இந்தச் செயல்தான் எனக்குப் பிடிக்கலை; உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்பதையும் சேர்த்து அவங்ககிட்ட அறிவுறுத்திட்டே இருக்கணும். இதைச் செய்துட்டே வந்தோம்னா, ‘என்னை யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது’ங்கிற மாதிரியான வார்த்தைகள் பிள்ளைகளிடமிருந்து நிச்சயம் வராது.

பரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்

இன்னொரு முக்கியமான விஷயம். பிள்ளைங்க ஏதோ தப்பு செய்றாங்கன்னா, கோபத்தோட உச்சத்துக்குப் போய் வார்த்தைகளை விடக் கூடாது. குறிப்பா, ‘நானே ஒத்தை ஆளா உன்னை வளர்த்து ட்டிருக்கேன்...’ போன்ற புலம்பல், சலிப்பு வார்த்தைகள் கூடவே கூடாது. சில நேரங்கள்ல நாம சொல்றதை பசங்க கேட்க மாட்டாங்க. ‘ஆனாலும் பரவாயில்ல... நீங்க சொல்லிட்டே இருங்க’ங்கிறது தான் உளவியல் ஆலோசகர்களோட கருத்தா இருக்கு. அப்படித்தான் நான் நடந்தேன்.

சிங்கிள் பேரன்ட்டிங்கைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கையை நிரம்ப நிரம்ப பிள்ளைக்குக் கொடுங்க. அவங்க செய்ற சின்ன விஷயங்களையும் கொண்டாடுங்க. இதைப் படிப்பின் அளவீட்டில் மட்டும் நான் சொல்லல. நல்ல மனுஷனா, மனுஷியா உங்க வளர்ப்பு அவங்களை உருவாக்கட்டும்.