Published:Updated:

பிள்ளை வளர்ப்பின் கடினமான நாள்கள் எவை? |பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் - 18

பிள்ளை வளர்ப்பு / Representational Image ( Pixabay )

12 முதல் 14 வயதுள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான் சவாலான காலகட்டம் எனப் பெற்றோர் தெரிவிப்பதாகச் சொல்கிறது இன்னோர் ஆய்வு. பிறந்த குழந்தைகளைவிடவும், பள்ளி செல்லும் குழந்தைகளைவிடவும், வளர்ந்த பிள்ளைகளைவிடவும் 12 - 14 வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம்.

பிள்ளை வளர்ப்பின் கடினமான நாள்கள் எவை? |பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் - 18

12 முதல் 14 வயதுள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான் சவாலான காலகட்டம் எனப் பெற்றோர் தெரிவிப்பதாகச் சொல்கிறது இன்னோர் ஆய்வு. பிறந்த குழந்தைகளைவிடவும், பள்ளி செல்லும் குழந்தைகளைவிடவும், வளர்ந்த பிள்ளைகளைவிடவும் 12 - 14 வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம்.

Published:Updated:
பிள்ளை வளர்ப்பு / Representational Image ( Pixabay )

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர் களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.

பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

ஷர்மிளா,
ஷர்மிளா,

டாக்டர் ஷர்மிளா

பிள்ளை வளர்ப்பின் கடினமான நாள்கள் எவை?

இப்படிக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? கைக்குழந்தை முதல், டீன் ஏஜ் வரை பிள்ளை வளர்ப்பு என்பதே கடினமான பயணம்தானே என்கிறீர்களா?

பள்ளிப் பருவத்தின் மத்தியில் இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பதுதான் மிகுந்த சிரமமானது, சவாலானது என பெரும்பாலான பெற்றோர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வொன்று.

பருவமடையும் வயது, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனநிலை மாற்றங்கள், கோபம், தனிமை, குழப்ப உணர்வு என டீன் ஏஜில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் உணர்வுக் கலவையால், பெற்றோருடன் அவர்களுக்கு நிறைய வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் வருவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையிலேயே குழந்தை வளர்ப்பில் கடினமான காலகட்டம் எது?

12 முதல் 14 வயது வரையுள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான் சவாலான காலகட்டம் எனப் பெற்றோர் தெரிவிப்பதாகச் சொல்கிறது இன்னோர் ஆய்வு. பிறந்த குழந்தைகளைவிடவும், பள்ளிச் செல்லும் குழந்தைகளைவிடவும், வளர்ந்த பிள்ளைகளைவிடவும் 12 - 14 வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம். தவழும் குழந்தையின் படுத்தலாகட்டும், தடுமாறும் டீன் ஏஜ் பிள்ளையின் தவிப்பாகட்டும்... பெற்றோருக்கு ஒவ்வொன்றுமே ஒருவித போராட்டம்தான்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது ஏன் சவாலாக இருக்கிறது?

டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும் பிள்ளைகளின் நடவடிக்கையும் அணுகுமுறையும் ஏன் உக்கிரமாக மாறுகிறது?

ரிஸ்க் எடுப்பதில் அவர்களுக்கு அதிகரிக்கும் ஆர்வம் முதல் காரணம்.

ஒரு செயலால் விளைகிற நன்மைகளை மிகப் பெரிதாகவும் அதன் விளைவுகளை சாதாரணமாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.

சக வயதினருடனும் பெற்றோருடனும் பெரியவர்களுடனும் தொடர்பில் இருப்பதையும் அவர்களுக்குச் சமமாகத் தம்மை நினைத்துக்கொள்வதையும் விரும்புகிறார்கள்.

டீன் ஏஜில், பிள்ளைகளுக்கான எல்லைகளை வகுப்பது எப்படி?

நடுநிலை வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு சிறிய குழந்தைகளை விடவும் ஓரளவு அதிக சுதந்திரம் இருக்கும். ஆனாலும், அவர்களுக்கும் அந்த வயதிலும் பெற்றோர் எல்லைகளை வகுத்து, வலியுறுத்த வேண்டியது அவசியம். டீன் ஏஜில் உங்கள் பிள்ளைகள் சந்தோஷமாகவும் ஆரோக்கிய மாகவும் வளர்கிறார்களா என்பதைக் கீழ்க்காணும் விஷயங்களின் மூலம் உறுதிப்படுத்துங்கள்.

அவர்களது அந்தரங்கத்துக்கு மதிப்பளியுங்கள்

உங்கள் பிள்ளைகளின் போனை ஆராய்வது, மெசேஜ்களை படிப்பது என்றெல்லாம் எல்லை மீறாதீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் இணைப்பில் இருக்கிறார்கள், எங்கே போகிறார்கள் என்ற எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

Teen age (Representational image)
Teen age (Representational image)
Pexels

நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் வேலை, மற்ற கமிட்மென்ட்டுகளைத் தாண்டி, பிள்ளைகளுக்கான நேரத்தை, அது குறைவான நேரமாக இருந்தாலும் முழுமையாக ஒதுக்குங்கள்.

ஸ்கிரீன் டைமை கட்டுப்படுத்துங்கள்

இதை மிகச் சிறிய வயதிலிருந்தே பழக்க வேண்டும். ஸ்கிரீன் டைமை குறைப்பதுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு டெக்னாலஜி பயன்பாட்டை அனுமதிக்காமல் தூங்குவதை நெறிப்படுத்துங்கள்.

இன்டர்நெட் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபத்துகளை அடிக்கடி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருங்கள். அவற்றில் இருந்து விலகி, பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுங்கள்.

ஆஷ்லி

பெற்றோரின் ஸ்ட்ரெஸ்ஸுக்கு என்ன காரணம்?

அவர்கள் எப்போதும் கடந்த காலத்திலேயே வாழ்வதால்...

நெகட்டிவ்வான பேச்சு மற்றும் அணுகுமுறை

பிள்ளைகளின் முன் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதில் தயக்கம்.

எப்போதும் பிள்ளைகளிடம் ஏதேனும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது.

பிள்ளைகளிடம் அதிகார தோரணையில் பேசுவது.

பிள்ளைகளுக்கும் நியாயமான கொள்கைகள் இருக்கும் என்பதையே மறந்துவிடுவது.

ஒவ்வொரு தனி மனிதரும் தனித்தனி இயல்புகளைக் கொண்டவர் என்பதையும் அதில் தம் பிள்ளைகளும் அடக்கம் என்பதையும் மறந்துவிடுவது.

எந்த விஷயத்தையும் முறையாகப் பிள்ளைகளுக்கு விளக்காதது.

குழந்தைகளுடன் முறையாகப் பேசாதது.

பிள்ளைகளிடம் அதிகபட்ச எதிர்பார்ப்பு வைத்துக்கொள்வது.

ஆஷ்லி - ஷர்மிளா
ஆஷ்லி - ஷர்மிளா

மகிழ்ச்சியான பெற்றோரால்தான் மகிழ்ச்சியான பிள்ளைகளை வளர்க்க முடியும்

பெற்றோர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அவர்களால் அவர்களின் பிள்ளைகளையும், அதே சந்தோஷத்துடன் வளர்க்க முடியும். அதற்கு அடிப்படை முறையான தகவல் தொடர்பு. ஸ்ட்ரெஸ் இல்லாத பெற்றோரால்தான், பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்க முடியும்.

எப்போதும் ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெற்றோரிடம் எந்தக் குழந்தையும் தானாக முன்வந்து பேச விரும்பாது. தங்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள், பிரச்னைகளை அப்படிப்பட்ட பெற்றோரிடம் பகிரவும் விரும்ப மாட்டார்கள்.

டேக்ஹோம் மெசேஜ்

தாங்கள் சொல்லிக் கொடுக்கும் எல்லாவற்றையும் பிள்ளைகள் அப்படியே பின்பற்றியாக வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

`நீங்கள் கொஞ்சமும் தயாராக இல்லாத காலகட்டம்தான் உங்கள் வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டம்' என்கிறார் சமூக ஆர்வலர் டெபி கிரானிக். பிள்ளை வளர்ப்பு என்பது ஒருபோதும் முழுமையாக முடிவடைவதில்லை.

TeenAge
TeenAge

எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பெற்றோரிடம் அன்பையும் ஆதரவையும் ஆலோசனைகளையும் தேடி வருவார்கள், சின்ன புன்னகை யோடும் கண்களில் கனிவோடும் பிள்ளைகளை அணுகும் வித்தையை மட்டும்தான் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதைக் கற்காதவரை, பிள்ளை வளர்ப்பில் மிக நல்லநாள் என்பது கடந்துபோன நாளாகவே இருக்கும்.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்