பிரீமியம் ஸ்டோரி

வ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை நல்ல பிள்ளையாக வளர்த்தெடுக்கவே விரும்புவார்கள். அதற்கு அவர்கள் கைகொள்ளும் வளர்ப்பு முறை, ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ‘`குழந்தை வளர்ப்பைப் பொறுத்து, பொதுவாகப் பெற்றோர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்’’ என்று சொல்லும் உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த் அது பற்றி விளக்குகிறார்.

ஹெலிகாப்டர் பேரன்ட் (Helicopter parent)

தலைக்கு மேல் வட்டமடிக்கும் ஹெலிகாப்டர்போல, எப்போதும் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே இருப் பார்கள். அவர்களை சுயமாக முடிவுகள் எடுக்கவிடமாட்டார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பதற்றமே, இதற்கு காரணம். ஆனால், இது சரியான வளர்ப்பு முறையல்ல. இதனால் எதிர்காலத்தில் இந்தப் பிள்ளைகள் எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்கும் சூழல் உருவாகும்.

 சித்ரா அர்விந்த்
சித்ரா அர்விந்த்

ஃப்ரீ ரேஞ்ச் பேரன்ட் (Free range parent)

இவர்கள் ஹெலிகாப்டர் பேரன்ட்களுக்கு அப்படியே நேரெதிர். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். இதனால் இந்தப் பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்கள் பெற்றோரைப் போலவே எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

நீங்கள் என்ன வகை பெற்றோர்?

லான்மூவர் பேரன்ட் (Lawnmower parent)

குழந்தைகளின் மீது அதீத கவனம் கொண்டவர்கள். அவர்களின் எல்லா பிரச்னைகளையும் இவர்களே சமாளித்து வருவர். இதுவும் ஏறத்தாழ ஹெலிகாப்டர் பேரன்டிங் போலத்தான். ஆனால், இதில் கண்காணிப்பு குறைவாகவே இருக்கும். இவ்வகை வளர்ப்பு முறையால் எதிர்காலத்தில் குழந்தைகளிடம் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனே இல்லாமல் போய்விடும். முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் அடுத்தவரையே சார்ந்திருக்கும் சூழல் உருவாகும்.

அட்டாச்மென்ட் பேரன்ட் (Attachment parent)

பிள்ளைகளிடம் உணர்வுபூர்வமாகவும், உடலாலும் ஒன்றியே இருப்பர். இது அன்பும் அரவணைப்பும் இருக்கும் நல்ல வளர்ப்பு முறை. குழந்தைகளின் தேவையை அறிந்து அதை மட்டுமே பூர்த்திசெய்ய முயல்வர். இவ்வகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலம் குறித்து பாது காப்பானதாக உணர்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு