Published:Updated:

நேற்று வீட்டில் நடந்த சண்டை உங்கள் பிள்ளையின் ஆட்டோக்காரர் மற்றும் ஆசிரியருக்குத் தெரியும்.. எப்படி?

குழந்தை
News
குழந்தை ( pixabay - For representation Only )

அந்த ஆசிரியை, வகுப்புக் குழந்தைகள் அத்தனை பேரிடமும் மிகவும் அன்பாகப் பழகுபவர். கிட்டத்தட்ட ஒருநாளின் பாதி நேரம் அவரிடம் இருக்கும் குழந்தைகள், தங்களைப் பற்றித் தன் வீட்டைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசும் விஷயங்களில் அப்பா, அம்மா பற்றியவையே அதிகம்.

ஒரு கேள்வி... உங்கள் குடும்ப விஷயம் குறித்து, உங்களுக்கு அடுத்து யாருக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?

எல்.கே.ஜி படிக்கும் உங்கள் குழந்தையின் டீச்சருக்கு மற்றும் உங்கள் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பிவரும் ஆட்டோக்காரருக்கு என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?

கணவருடன் / மனைவியுடன் நேற்று மாலை நீங்கள் போட்ட சண்டை, என்ன காரணத்துக்காகப் போட்டீர்கள், என்ன வரிகளைப் பயன்படுத்தினீர்கள் என்பது வரை தெரியும் என்றால் நம்புவீர்களா?

குழந்தை
குழந்தை
For representation only

`சே... சே... அவங்களுக்கு எப்படித் தெரியும்? என் குழந்தைக்கு ரொம்ப சின்ன வயசு. இவையெல்லாம் புரியாது' என்று நீங்கள் சொன்னால், ஸாரி... இவ்வளவு அப்பாவியாக இருக்காதீர்கள். உங்கள் குழந்தை அளவுக்காவது வளருங்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

``ஒண்ணுமே இல்லாத சின்ன விஷயத்துக்கு என் டாடியும் மம்மியும் நேத்து பெருசா சண்டை போட்டாங்க. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு!''

``ஷர்மி... ஏன் டல்லா இருக்கே'' என்று கேட்ட ஆசிரியைக்கு, எல்.கே.ஜி படிக்கும் ஷர்மி அளித்த பதில் இது.

அந்த ஆசிரியை, வகுப்புக் குழந்தைகள் அத்தனை பேரிடமும் மிகவும் அன்பாகப் பழகுபவர். கிட்டத்தட்ட ஒருநாளின் பெரும்பகுதி நேரம் அவரிடம் இருக்கும் குழந்தைகள், தங்களைப் பற்றித் தன் வீட்டைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசும் விஷயங்களில் அப்பா, அம்மா பற்றியவையே அதிகம் இடம்பெறுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``இப்போ இருக்கிற குழந்தைகள் எல்லாம் ரொம்ப ஷார்ப். நான் எல்லாம் இவங்க வயசுல இதில் பாதிகூட இருந்ததில்லே. எல்லா விஷயங்களும் அவங்களுக்குப் புரியுது. அப்பா, அம்மா பற்றி அவ்வளவு புகார் சொல்றாங்க. சிரிப்பா மட்டுமல்ல ஆச்சர்யமாகவும் இருக்கு'' என்கிறார் அந்த ஆசிரியை.

அப்படித்தான்... குழந்தைகள் அதிகம் பேசிக்கொள்வது... பள்ளி வேன் மற்றும் ஆட்டோ பயணத்தில். நாம் புரியாது என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள், ஒருவேளை குழந்தைகளுக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அவற்றை அவர்கள் உள்வாங்குகிறார்கள்.

கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாலோ, பார்த்தாலோ கைக்குழந்தையே பதிலுக்குச் சோகமான முகத்தையும் அழுகையையும் வெளிப்படுத்தும். ஆனால், நாமோ 4 வயது, 5 வயதுக் குழந்தைக்குப் புரியாது என நினைத்துச் சண்டையிடுகிறோம்.

kids
kids
pixabay

அப்போது நம்மிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளை, செயல்களை அவர்கள் உள்வாங்குகிறார்கள். அதற்கான விளக்கத்தைக் கேட்கவோ, தங்கள் கருத்தைச் சொல்லவோதான் தயங்குகிறார்கள்.

காரணம்... விளக்கமோ, கருத்துக்கான மதிப்போ கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும்.

``படிக்கிறதை விட்டு இங்கே எதுக்குக் கவனிச்சுகிட்டிருக்கே. பெரிய மனுஷத்தனமா பேசாம உன் வேலையைப் பாரு'' என்ற திட்டும் அடியும் கிடைக்கும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கிடைக்காத அந்த விடையைத் தங்களுக்கு நம்பிக்கையானவர்கள், தன்மீது அக்கறை உள்ளவர்கள், தன்னைத் திட்டாதவர்கள் என நினைக்கும் இன்னொருவரிடம் கேட்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த, தங்களுடன் நேரம் செலவிடுகிற மிஸ், அங்கிள், ஆயா போன்ற உறவுகளிடம் நம்பிக்கையுடன் விவாதிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் குழந்தைகளிடம் உண்மையான அக்கறை இருப்பவர்களாக இருக்கும் வரை உங்களுக்கோ, உங்கள் குழந்தைக்கோ பிரச்னை இல்லை. மாறாக, உங்கள் குழந்தை நம்பும் ஒருவர், தவறான நபராக இருந்தால் என்னவாகும் என்று யோசியுங்கள். உங்கள் குழந்தையின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தன்னைச் சுற்றியுள்ள சக மனிதரை நம்புவது, நேசிப்பது, பகிர்ந்துகொள்வது நல்ல விஷயம். ஆனால், உங்கள் குழந்தை மிக அதிகம் நம்புபவர்களாக நீங்கள் அல்லவா இருக்க வேண்டும்? உங்களைவிட இன்னொருவரை அதிகம் நம்பாத, விவாதிக்காத இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.

அதற்கு மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது, குழந்தைகள் முன்பு எக்காரணம் முன்னிட்டும் சண்டையிடக் கூடாது. அதற்கான காரணம் அவர்களுக்குப் புரியாவிட்டாலும், நம் மீதான நம்பிக்கையை அவர்கள் இழக்கிறார்கள். பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள்.

kids
kids
pixabay

இவற்றுக்கெல்லாம் மேலாக, சண்டையின்போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களுக்குள் அழுத்தமாகப் பதியும். அந்தச் சண்டையில் நீங்கள் ஒரு நபரையோ, உறவையோ தவறாகச் சொல்லியிருந்தால், அதை அவர்கள் நம்புகிறார்கள். அந்த உறவின் மீது அவர்களுக்கும் மதிப்பு குறையும். நாளை நாம் மறந்துவிட்டாலும் அல்லது மறந்ததுபோல நடித்தாலும், குழந்தைகள் மறப்பதுமில்லை, நடிப்பதுமில்லை. அப்படியே வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்குச் சண்டையிடுவற்கு மிக நியாயமான காரணம் இருக்கலாம். அந்தச் சண்டை மிகமிக அவசியமானதாகக்கூட இருக்கலாம். ஆனால், அதைக் குழந்தையின் முன்பு வைத்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் குழந்தைக்குத் தேவையில்லாத, எதையும் உங்கள் குழந்தையின் முன்பு செய்யாதீர்கள். அது, உங்கள் மீதான நம்பிக்கையை, மதிப்பை நிச்சயம் குறைக்கும். அந்த நம்பிக்கையையும் மதிப்பையும் வேறோர் இடத்தில் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அது யாருக்குமே நல்லதல்ல!