Published:Updated:

குழந்தைக்கு தாய்மொழிக் கல்வி ஏன் அவசியம்? - கவிஞர் நந்தலாலா #VikatanPodcast

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் நந்தலாலா
#VikatanPodcast-ல் நந்தலாலா

ஒருவரிடம் அவருக்குத் தெரிந்த மொழியில் பேசும்போது, உங்கள் வார்த்தைகளை அவரின் மூளை பெற்றுக்கொள்ளும். ஒருவருடன் அவருடைய மொழியில் பேசும்போது, உங்கள் வார்த்தைகளை அவர் மனது பெற்றுக்கொள்ளும். இதுதான் தாய்மொழியின் சிறப்பு. குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வி ஏன் அவசியம்? கவிஞர் நந்தலாலா கூறுகிறார்...

“தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்துப் பேசவேண்டிய முக்கியத் தருணம் இது. `ஒரு குழந்தை எந்த மொழியின் வழியாகக் கல்வி கற்க வேண்டும்?’ என்கிற கேள்விக்கு, உலகம் முழுக்க இருக்கிற கல்வியாளர்கள், அறிஞர்கள் `அந்தக் குழந்தையின் தாய்மொழி வழியாகப் பயில்வதுதான் சிறந்தது’ என்கிறார்கள்.
கவிஞர் நந்தலாலா

பள்ளிச் சிறுமி ஒருத்தியிடம், `இந்தப் பள்ளியிலேயே உனக்குப் பிடித்தது யார்?’ என்று கேட்டபோது, 'ஸ்கூல் விடும்போது பெல் அடிக்கிற தாத்தாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்' என்று பதில் வந்ததாம். இதுதான் குழந்தைகளின் மனவுலகம். இந்தப் பள்ளியை விட்டு எப்போது ஓடுவோம் என்பதுதான் குழந்தைகளின் மனவிருப்பமாக இருக்கிறது. இதிலிருந்து, கற்பது என்பதே ஒரு குழந்தைக்கு சற்று சிரமமான காரியம்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிரமமான ஒன்றை, அறியாத ஒரு மொழியில் கற்கும்போது, அந்தச் சிரமம் இன்னும் கூடிப்போகத்தானே செய்யும்...

`வகுப்பறைக்கு வெளியே குழந்தைகள் என்னவெல்லாம் கற்கலாம்?'- எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் #VikatanPodcast

புதிய விஷயத்தைத் தெரிந்துகொள்வது என்பதே ஒரு குழந்தைக்கு கஷ்டம். அப்படியிருக்கும்போது, அது கற்பிக்கப்படுகிற மொழியும் அக்குழந்தைக்கு அந்நியமான பிற மொழியாக இருந்தால், அந்தக் குழந்தையின் கற்றல் பிரச்னை இன்னும் அதிகரிக்காதா? மாறாக, ஒரு புதிய விஷயத்தைக் கற்பதை கடினமாக உணரும் ஒரு குழந்தை, தன் தாய்மொழியிலேயே கற்கும்போது அக்குழந்தையின் சிரமம் குறையும்தானே?"

இதுகுறித்து கவிஞர் நந்தலாலா இன்னும் விரிவாகப் பேசியவற்றை VikatanPodcast-ல் கேளுங்கள்!