Published:Updated:

``அப்பாக்கள் இப்படியிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை!" - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி #VikatanPodcast

கிராபியென் ப்ளாக்

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#vikatanPodcast-ல் பாஸ்கர் சக்தி
#vikatanPodcast-ல் பாஸ்கர் சக்தி

அம்மாவின் அன்புபோல் இங்கு கொண்டாடப்படுவதில்லை அப்பாக்களின் பிரியம். காரணம், அவர்கள் மாட்டிக்கொள்ளும் கண்டிப்பு முகமூடி. குறிப்பாக மகன்களிடம். அந்த முகமூடியைத் தளர்த்த வேண்டியது அவசியமாகிறது என்கிறார் பாஸ்கர் சக்தி.

நம்முடைய சமூகத்தில் அப்பா-மகன் உறவு என்பது மூடுமந்திரமான, வெளிப்படைத்தன்மையில்லாத உறவாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
பாஸ்கர் சக்தி

தன்னுடைய தேவையை அம்மாவிடம் தயக்கமின்றி கேட்கும் மகன், தந்தையிடம் கேட்பதில்லை. ஒருவேளை கேட்டே ஆக வேண்டும் என்றால்கூட அதையும்கூட அம்மா வழியாகத்தான் மகன் கேட்கிற சூழல் உள்ளது. அப்பாவிடம் மனம்விட்டுப் பேசக்கூடிய தைரியத்தைப் பெறுவது நம்முடைய சமூகத்தில் மிகவும் சிக்கலாகவே இருக்கிறது. அதை நிறைய குடும்பங்களில் பார்க்கலாம். பெரும்பாலும் முறைத்துக்கொள்வதாகவே அப்பா-மகன் உறவு உள்ளது.

இதில் சில விதிவிலக்களும் உண்டு. சகஜமாக தன்னுடைய மகனிடம் எதைப் பற்றியும் கேட்கிற அப்பாக்கள், அதேபோல எந்த சந்தேகங்களையும் அப்பாவிடம் கேட்கிற மகன்களும் உண்டு. அந்தக் குடும்பங்கள் மிகச் சிறப்பாக இருப்பதையும் கண்டிருக்கிறேன். மற்ற குடும்பங்களில் காணப்படக்கூடிய பிரச்னைகளின்றி இந்தக் குடும்பங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

"மகள்களும் மகனும்தான் எனக்கு  மறுவாழ்வு தந்தாங்க!"-பிள்ளைவளர்ப்பு அனுபவம் பகிரும் பார்த்திபன் #VikatanPodcast

எப்படியிருக்க வேண்டும் அப்பா-மகன் உறவு என்றால், மகளிடம் காட்டுகிற அதே அன்பையும் பிரியத்தையும் மகனிடம் அப்பா காட்ட வேண்டும். மகன் வளர வளர அவனுடைய விருப்பு, வெறுப்புகள் பற்றி தினசரி அப்பா பேச வேண்டும். நம்முடைய குடும்பங்களில் மகனை அப்பா கொஞ்சுவது அரிதாகவே உள்ளது. மகனிடம் பிரியத்தோடு தொடர்ந்து அப்பா பேசிக்கொண்டிருந்தாலே பல பிரச்னைகள் வராது!”

இன்னும் தொடர்ந்து பேசுகிறார் பாஸ்கர் சக்தி. அவரது குரலிலேயே #VikatanPodcast-ல் கேளுங்கள்!