Published:Updated:

``குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஏன் முக்கியம்?" - குழந்தைகள் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் #VikatanPodcast

கிராபியென் ப்ளாக்

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் ஆயிஷா நடராஜன்
#VikatanPodcast-ல் ஆயிஷா நடராஜன்

``குழந்தைகளிடமிருந்து கதைகளைப் பிரித்து, அவர்களை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் தெரியுமா?" என ஆதங்கப்படுகிறார் குழந்தைகள் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன்.

``உலகளவில் குழந்தைகள் படும் துன்பத்தைப் பார்த்தால் நாம் ரத்தக் கண்ணீர் வடித்துவிடுவோம். ஏழு வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொல்வதும், வயலில் கொத்தடிமையாக வேலைசெய்யும் பத்து வயது சிறுவனை மீட்பதும் நம் சமூகத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. தனக்கு துன்பம் நேரும்போது ஏன் இந்தக் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அல்லது சத்தம் போட்டு உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை?

சமீபத்தில் மதுரையில் மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு வகுப்பறையில் சொல்லித் தர முடியாத ஒன்றை நான் சொல்லிக் கொடுத்தேன். `அய்யோ.. அய்யோ’ என்று கத்துவதற்குக் கற்றுத் தந்தேன். உங்களுக்கு ஏதாவது ஓர் ஆபத்து என்றால் `அய்யோ..’ என்று சப்தமிடுங்கள் என்று சொன்னேன். உன்னை யாராவது தவறாகத் தொட்டால் `அய்யோ தொடுகிறார்கள்..’ என்று கத்தச் சொல்லித் தந்தேன். இதற்கு என்ன காரணம்?

பிள்ளைகளுக்கு சரியான அறிவியலைச் சொல்லித்தருவது எப்படி? - குழந்தைகள் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் #VikatanPodcast
இந்த உலகத்தில் தங்களுக்கு எது நடந்தாலும் அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பவர்களாக அவர்களை உருவாக்கியிருக்கிறோம். யாராவது அவர்களிடம் சென்று என்னவென்று கேட்டால்கூட, `எனக்குத் தெரியாது... எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று சொல்லப் பழக்கிவிட்டோம்.
ஆயிஷா நடராஜன்

எதையும் தட்டிக்கேட்பவர்களாக, அநியாயங்களைக் கண்டு பொங்குபவர்களாக அவர்களை நாம் பழக்கவில்லை. தாத்தா-பாட்டி கதை சொல்லும் பழக்கம் குழந்தைகளிடமிருந்து எப்போது பிடுங்கப்பட்டதோ அப்போதே இந்தச் சமூகத்தில் இப்படியான அவலங்கள் நிகழத்தொடங்கிவிட்டன!”

ஆயிஷா நடராஜன் அதற்கு முன்வைக்கும் தீர்வுகளை அவர் குரலிலேயே #vikatanPodcast-ல் கேளுங்கள்!