Published:Updated:

``எதிர்பாலின ஈர்ப்பு... பெற்றோர்கள் எப்படிக் கையாள்வது?" - கவிஞர் அ.வெண்ணிலா #VikatanPodcast

பிள்ளை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களை, தங்கள் அனுபவத்திலிருந்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் நம் படைப்பாளிகள். அவர்களின் அனுபவங்கள், அவர்களின் குரலிலேயே இங்கே...

#VikatanPodcast-ல் அ.வெண்ணிலா
#VikatanPodcast-ல் அ.வெண்ணிலா

குழந்தைகளின் பதின்பருவத்தில் ஏற்படும் பாலின ஈர்ப்பு இயல்பானது, நிச்சயமானது. ஆனாலும் இதில் பெற்றோர்களின் பதற்றம் ரிக்டர் அளவிலேயே உள்ளது. அதை பதற்றப்படாமல் எதிர்கொள்வது எப்படி? சொல்கிறார் கவிஞர் அ.வெண்ணிலா.

``எதிர்பாலின ஈர்ப்பு என்பது 10 வயதிலிருந்து 20 வயது வரைக்குள் உருவாகும் என்று பொதுவாக நாம் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஸ்டேட்மென்ட் அபத்தமானது, கற்பிதமானது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் பிறந்ததிலிருந்தே ஒரு குழந்தைக்கு எதிர்பாலின ஈர்ப்பு இருப்பதாக உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு கூறுகிறார்.
அ.வெண்ணிலா

ஒரு பெண் பருவம் அடையும்போதும், அதேபோல ஆண் அந்த வயதை எட்டும்போதும் உருவாவதுதான் எதிர்பாலின கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்று குறிப்பிடுகிறோம். இது 20 வயதிலேயோ அல்லது திருமணத்திலேயோ முடிந்துவிடும் என்று பாதுகாப்பு என்கிற போர்வையிலிருந்தே வலியுறுத்துகிறோம். எதிர்பாலின ஈர்ப்பைக் கையாள முடியாமல் தோற்று நிற்கிற நடுத்தர வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களின் பிரச்னைகளை அதிகமாகச் சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாம் சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றப்படுகிற டிக்டாக் வீடியோக்களைக் குறிப்பிடலாம். இதிலிருந்தே எதிர்பாலின ஈர்ப்பு என்பது 20 வயதோடு முடிந்துவிடுவதில்லை என்பதும் தெரியவருகிறது.”

`பெண் பிள்ளைகளை அடக்க ஒடுக்கமா வளர்க்க நினைக்கிற மனநிலை மாறணும்!' - விஜி சந்திரசேகர் #VikatanPodcast

இது குறித்து இன்னும் என்னவெல்லாம் சொல்கிறார் கவிஞர் அ.வெண்ணிலா என்று அவர் குரலிலேயே #VikatanPodcast-ல் கேளுங்கள்!