Published:Updated:

GOT புகழ் 'சான்ஸா' - ஜோ ஜோனஸ் திருமணத்தில் மிளிர்ந்த பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

உலகமெங்கிலுமிருந்து சூப்பர் மாடல் முதல் ஹாலிவுட் நடிகர்கள் வரை பல பிரபலங்கள் பங்குபெற்ற இந்த விழாவில், பிரியங்கா உடுத்தியிருந்த உடை அனைவரையும் ஈர்த்தது....

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் சோஃபி டர்னர் மற்றும் அமெரிக்கப் பாப் பாடகர் ஜோ ஜோனஸின் திருமணம், இரண்டாவது முறையாகக் கடந்த சனிக்கிழமை பிரான்சில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது. திருமண விழாவில் அவர் அணிந்திருந்த உடைதான் இந்த வாழ்த்து மழைக்குக் காரணம்.

Priyanka Chopra
Priyanka Chopra

இந்த ஆண்டு மே மாதம், பிரியங்கா கணவர் நிக் ஜோனஸின் சகோதரன் ஜோ ஜோனஸுக்கும் பிரபல அமெரிக்க நடிகையான சோஃபி டர்னருக்கும் லாஸ் வேகாவில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகக் கடந்த சனிக்கிழமை பிரான்சில் சிறப்புத் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட, பிரியங்கா சோப்ரா மணப்பெண் தோழியாக ஜொலித்தார். உலகமெங்கிலுமிருந்து சூப்பர் மாடல் முதல் ஹாலிவுட் நடிகர்கள் வரை பல பிரபலங்கள் பங்குபெற்ற இந்த விழாவில், பிரியங்கா உடுத்தியிருந்த உடை அனைவரையும் ஈர்த்தது.

பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான சபியாசச்சி முகர்ஜி கைவண்ணத்தில் உருவான பேஸ்ட்டல் பிங்க் நிற எம்ப்ராய்டரி புடவைதான் பிரியங்காவின் சாய்ஸ். புடவைக்கு மேட்சான 'Plunging' கழுத்துடைய ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், சில்வர் காதணி, ரோஜா பூக்கள் பொருத்திய படிந்த சிகையலங்காரம், அளவான ஒப்பனையுடன் மிடுக்கான தோற்றத்தில் மிளிர்ந்தார்.

Priyanka and Nick Jonas
Priyanka and Nick Jonas

கறுப்பு வெள்ளை கோட்-சூட்டில் பிரியங்காவுக்கு நிகராகவே இருந்தார் நிக் ஜோனஸ். ஏற்கெனவே 'மெட் காலா' விழாவில் 'உலக அழகி' அணிந்திருந்த உடைக்கு ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார்.ஆனால், இன்று பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்!

அடுத்த கட்டுரைக்கு