தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அவள் வாசகி: காக்கை குருவி எங்கள் ஜாதி!

என்.கோமதி
பிரீமியம் ஸ்டோரி
News
என்.கோமதி

அம்மா என்றால் அன்பு

ம்மாவும் அப்பாவும் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் வசிக்கிறார்கள். அவ்வப்போது நலம் விசாரித்து, முடிந்தபோது நேரில் சென்று பார்த்துவிட்டு வருவேன். இப்போது ஊரடங்கு நேரத்தில் போனில் அடிக்கடி பேசுகிறேன்... ‘பத்திரமாக இருக்கோம்’ என்று என் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

அவள் வாசகி: காக்கை குருவி எங்கள் ஜாதி!

அன்று இரவு ஒன்பது மணிக்கு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். ``நல்லா இருக்கோம். இப்பத்தான் சாப்பிட்டோம்'' என்றார். பின்னணியில் குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டதும், ``என்னம்மா, சாப்பிட்டாச்சுன்னு சொல்றே... குக்கர் சத்தம் கேட்குதே'' என்றேன்.

“அது... இப்போ நிறைய ஹோட்டல்கள் திறக்கறதில்லை. அதனாலே காக்காக்களுக்கு உணவு கிடைக்கல. காலைல காக்கா கத்தும்போது மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. அதான், அதுங்களுக்காக இப்ப சமைக்கிறேன்” என்றார்.

அவள் வாசகி: காக்கை குருவி எங்கள் ஜாதி!

``நாளைக்குப் பொங்கி வைக்கலாமே'’ என்று நான் சலித்துக்கொள்ள, ‘`போடி, காக்கா காலையிலேயே வந்துடும். சாதம் வெச்சுட்டுத்தான் முன்வாசல் கதவையே திறப்பேன்” என்ற அம்மாவின் இரக்க சுபாவத்தைக் கேட்டு, ஒரு நிமிடம் மெளனமானேன். 80 வயதான அம்மாவின் செயல் என்னைக் கலங்க வைத்துவிட்டது.

அம்மா என்றால் பிள்ளைகளுக்கு மட்டும் தானா... அனைத்து ஜீவன்களுக்கும்தாம். இப்போது நானும் காகங்களுக்கு சாப்பாடு வைக்க ஆரம்பித்திருக்கிறேன்!

என்.கோமதி நெல்லை-7