லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: அவள் கொடுத்த ஊக்கம்!

அ.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அ.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்

அம்மா மகள்

அவள் வாசகி: அவள் கொடுத்த ஊக்கம்!

ன்னுடைய 21-வது வயதில் என் மகள் பிறந்தாள். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தோம். நான் வொர்க்கிங் மதர் என்பதை என் மகளுக்கு உணர்த்தியிருந்தேன். வேலை, குடும்பம் என பிஸியாக இருந்த நான், எனக்குள் இருந்த திறமைகளைப் பற்றி உணரவே இல்லை.

என் மகள் பொறியியல் படிப்பில் சேர்ந்ததும் ‘அம்மா உனக்குப் பிடித்ததை யெல்லாம் செய். உன் திறமையை வெளிக்கொண்டு வா. உன் ஆசை, உன் கனவுதான் என் ஆசையும் கனவும்’ என்று சொல்ல ஆரம்பித்தாள். அவள் கொடுத்த ஊக்கத்தினால்தான் எழுதவே ஆரம்பித்தேன்.

முகநூலில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் மெள்ள மெள்ளப் புத்தகங்களாக வடிவமெடுத்தது. தமிழின் புதுமொழிகள், காதல் கைதிகள், மண் மறந்த மழைத்துளிகள் என்கிற மூன்று புத்தகங்கள் எழுதி வெளியிட முடிந்தது. இதற்கான மொத்த பாராட்டும் என் மகளுக்கே சேரும்.

அவள் வாசகி: அவள் கொடுத்த ஊக்கம்!

என் மகள் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றபோது, எல்லா அம்மாக்களையும் போலவே நான் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன். அடுத்த கட்டமாக அவளுக்குத் திருமணம் செய்தபோது மனம் குளிர்ந்தேன். இதோ என்னுடைய 49 வயதில் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் எனக்கு பேரன் பிறந்திருக்கிறான். என் பேரனைப் பார்க்க மருத்துவமனை செல்லும் பயண இடைவெளியில்தான் இந்த அனுபவத்தையும் பகிர்கிறேன்.

என் மகளுக்குத் தெரிந்தால் மிக மகிழ்வாள். என் வழியாக வந்தவள் எனக்குக் காட்டியதுதான் இந்த எழுத்துப் பாதை!

அ.தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் சென்னை - 63