லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: நிகழ்காலம் மட்டுமே கையில் உள்ள வீணை!

ஜெயா வெங்கட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயா வெங்கட்

கவலை மறந்த கதை

ன் குழந்தைகள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். கொரோனாவால், அவர்களை எப்போது காண்போம் என்கிற தவிப்பில் தினமும் உழன்று வருகிறேன்.

அவள் வாசகி: நிகழ்காலம் மட்டுமே கையில் உள்ள வீணை!

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான், என் தோழி கடந்த வாரம் எனக்கு போன் செய்தாள். `இணையம் மூலமாக யோகா கற்றுக்கொள், உன் பதற்றம் எல்லாம் தீரும்' என்றாள். இதுவரை இணையம் வழியாக நான் எந்த வகுப்பிலும் சேரவில்லை என்பதால் உடனே சரி என்றேன்.

தினமும் மாலை இரண்டு நேரம் பயிற்சி. ஆசனம் மட்டுமல்லாது சுவாசம் ஒழுங்கு பெறவும் மனம் அமைதி கொள்ளவும் யோகப் பயிற்சி உதவுகிறது என்பதை நான் அனுபவமாகவே கற்றுணர்ந்தேன்.

`கடந்த காலம் என்பது உடைந்த பானை போன்றது. எதிர்காலம் என்பது மதில் மேல் பூனை. நிகழ்காலம் மட்டுமே கையில் உள்ள வீணை' என்கிற எண்ணத்தை விதைத்து, நிகழ்காலத்தில் வாழப் பயிற்சி அளித்த விதம் என் மனத்தைத் தொட்டது. என் கவலைகளை எல்லாம் மறந்து சமாதானம் அடைந்தேன்.

ஜெயா வெங்கட்
ஜெயா வெங்கட்

கடந்த ஒரு மாத காலமாக தினமும் காலையில் முப்பது நிமிடங்கள் மூச்சுப் பயிற்சியும் தியானமும் செய்வதால் மனம் உற்சாகமாக இருக்கிறது.

கொரோனா மன சஞ்சலத்தை தந்தது ஒருபக்கம் என்றால், அதன் வழியாகத்தான் இத்தனை வயதுக்குப் பிறகு யோகா கற்றுக்கொள்ளும் வழியை அடைந்தேன் என்பதில் மகிழ்ச்சியே!

ஜெயா வெங்கட் கோவை-45