லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: உடலும் மனமும்

மிதுனா - மித்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுனா - மித்ரா

தாலாட்டு

அவள் வாசகி: உடலும் மனமும்

ரட்டையர்களான நாங்கள் இந்த ஆண்டு ப்ளஸ் டூ எழுதி யிருக்கோம். ஒன்பதாம் வகுப்புல ஆரம்பிச்சு பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் படிப்புல பிஸியா இருந்தோம். அம்மா நல்லா பாடுவாங்க. இப்போல்லாம் தினமும் எங்களுக்காக பாடுறாங்க, சின்ன குழந்தைகள்ல நாங்க என்னவெல்லாம் செஞ்சோம்னு நினைவுபடுத்துறாங்க. புகைப்படங்கள்ல இருக்கிற சொந்தக்காரங்களை யெல்லாம் காட்டி அவங்க பத்தின நல்ல விஷயங்களையெல்லாம் தினமும் சொல்றாங்க.

எங்க அம்மாவோட அம்மாவும் எங்களோடதான் இருக்காங்க. பேரு கலா தேவி. வயசு 65. அவங்க அப்பப்ப தாயம், பல்லாங்குழி, கல்லாட்டம் எல்லாம் விளையாடிட்டு, தூக்கம் வர்றப்ப சின்ன வயசுல பாடின தாலாட்டுப் பாடி எங்க ரெண்டு பேரையும் தூங்க வைக்கிறாங்க. அது தனி சுகம். தினமும் பூஜை அலமாரியை சுத்தம் பண்றது, வீட்டுல உள்ளவங்களுக்கு சமைக்கிறது, டீ போடுறது, காகங்களுக்குச் சாப்பாடு, தண்ணீர் வைக்கிறதுன்னு எங்களை மாத்திட்டாங்க அம்மம்மா.

அவள் வாசகி: உடலும் மனமும்

அடுத்த வருடம் கல்லூரி விடுதியில் சேரவிருக்கிற எங்க உடல், மன வலிமைக்காகத்தான் இதெல்லாம்னு அம்மம்மா சொல்றப்ப பெருமையா இருக்குது.

மிதுனா - மித்ரா திருப்பூர் (கொங்கணகிரி)