லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: அதுதான் குழந்தை மனது!

குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தை

ஊஞ்சல்

அவள் வாசகி: அதுதான் குழந்தை மனது!

மூன்று வருடங்களுக்கு முன்பு என் மகள் ஆஷிதா எல்.கே.ஜி படிக்கும்போது, பள்ளிகளுக்கு இடையிலான கதை சொல்லும் போட்டிக்குத் தேர்வாகியிருந்தாள். பெரிய குழந்தைகளுடன் இவள் எப்படி கதை சொல்வாள்... சிரமமாக இருக்குமோ, மறந்துவிடுவாளோ எனப் பலவித எண்ணங்களுடன் அவளுக்கு ஒரு கதையைச் சொல்லி அழைத்துச் சென்றேன்.

பள்ளியில் கூடையில் வைக்கப்பட்டிருந்த சீட்டை ஒவ்வொரு குழந்தைகளும் எடுத்து அந்த வரிசையில் கதை சொல்ல வேண்டும். என் மகளுக்கு 32-வது நம்பர் வந்தது. எங்கே, 31 குழந்தைகளின் கதையைக் கேட்டு தன்னுடைய கதையை மறந்துவிடுவாளோ என நினைத்தேன். பெற்றோர் யாரும் உள்ளே வரக் கூடாது என்று சொல்லிவிட்டனர்.

என் மகள் கண்களிலோ மிரட்சி, எனக்கோ பதற்றம். போட்டி நடந்த அறைக்குள் சென்ற என் மகள், ஒன்றரை மணி நேரம் கழித்து வெளியே ஓடி வந்தாள். `எல்லாவற்றையும் சரியாக மறக்காமல் சொல்லிவிட்டாயா செல்லம்' என்றதற்கு, `ம்ம்ம்ம்' என்றபடி அங்கிருந்த ஊஞ்சலைக்காட்டி `அங்கு விளையாடலாம் வா' என ஓடியதும்தான் நான் சமாதானம் ஆனேன்.

அவள் வாசகி: அதுதான் குழந்தை மனது!

அரைமணி நேரம் கழித்துதான் போட்டி முடிவு என்பதால் காத்திருந்தேன். முதல் இரண்டு பரிசும் யூ.கே.ஜி குழந்தைகளுக்குக் கிடைத்தது. மூன்றாம் பரிசு எல்.கே.ஜி சி.ஆஷிதா என்றதும் எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல ஒரே சந்தோஷம். என் மகளைக் கட்டிக்கொண்டு, ‘உனக்குப் பரிசு கிடைச்சிருக்கு குட்டி’ என்றேன். அவளோ ‘சரிம்மா... இன்னும் கொஞ்ச நேரம் ஊஞ்சலில் ஆடுறேன்’ என்றாளே பார்க்கலாம். அதுதான் குழந்தை மனது!

சத்யா செந்தூர் சேலம் - 8