லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

அவள் வாசகி: மீண்டும் பள்ளிப்பருவம்!

யுவராணி
பிரீமியம் ஸ்டோரி
News
யுவராணி

மகிழ்ச்சி

அவள் வாசகி: மீண்டும் பள்ளிப்பருவம்!

ன் பத்து மாத குழந்தை விஹானோடு சேர்த்து எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறோம். திருமணமாகி, இந்த இரண்டரை வருடங்கள் தனிமையில் பொழுதைக் கழிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது, லாக் டெளன் காரணமாக... அரசு வேலையில் இருக்கும் என் மாமியார், ஐ.டி வேலையில் இருக்கும் என் கணவர், தனியார் துறையில் இருக்கும் என் கொழுந்தனார் ஆகியோரும் வீட்டிலேயே இருப்பதால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணி செய்யும் என் கணவர், வீட்டு வேலையிலும் எனக்குத் தோள் கொடுக்கிறார். சமைப்பது எப்படி என்று தெரியாத நான் இன்று விதவிதமாக சமைக்கிறேன். அவற்றை யூடியூப் சேனலிலும் (https://bit.ly/3bjNST3) பதிவேற்றம் செய்துள்ளேன். சமைப்பதைத் தாண்டி, எடிட்டிங், பதிவேற்றம் செய்வது போன்றவற்றையும் கற்றுக் கொண்டேன்.

யுவராணி
யுவராணி

அது மட்டுமல்ல... என்னுடைய பள்ளி நண்பர்களுடன் பத்து வருடங்களுக்குப் பிறகு பேசுவதற்கு இந்த லாக் டெளன் நாள்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மீண்டும் பள்ளிப்பருவத்துக்குள் சென்ற உணர்வை இந்த டாக் டெளன் நாள்கள் தந்துவிட்டன!

யுவராணி சென்னை-23