Published:Updated:

வாசிப்பை நேசிப்போம்| பல்பொடி காகிதத்தைக்கூட படித்து வளர்ந்த தமிழ்நாடு!

Reading
News
Reading

என் மகளின் ஐந்து வயது முதலே நூலகத்துக்கு அழைத்துச் சென்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தினேன்.

வாசிப்பை நேசிப்போம்| பல்பொடி காகிதத்தைக்கூட படித்து வளர்ந்த தமிழ்நாடு!

என் மகளின் ஐந்து வயது முதலே நூலகத்துக்கு அழைத்துச் சென்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தினேன்.

Published:Updated:
Reading
News
Reading

பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதியுள்ள ஒரு விஷயம் இது.

‘1950-ம் ஆண்டுக்கு முன்பு வரை பல்பொடி ஏதாவது ஒரு பத்திரிகைத் தாளில்தான் கட்டித் தரப்படும். பேஸ்ட் இல்லை. பல்பொடி டப்பாவில் கிடைத்தாலும், அதை வாங்க வசதி இல்லாத காரணத்தால் பேப்பரில் கட்டி தரப்படும் பல்பொடியைதான் வாங்குவோம். பல் தேய்த்த பின்னர் அந்த பேப்பரையும் படிக்கத் தோன்றும். முக்கியமாக சரஸ்வதி பூஜை அன்று எந்த புத்தகமும் படிக்க கூடாது என்று சொல்வார்களே... அன்று இந்த பேப்பரையாவது படித்துவிடுவேன்’ என்று எழுதி இருப்பதை நான் அறிவேன்.

அதேபோல் என்னால் சாப்பிடாமல், தூங்காமல் இருக்க முடியும். ஆனால், வாசிக்காமல் மட்டும் இருக்கவே முடியாது. என் சிறு வயது - அதாவது ஆறு வயது முதலே பத்திரிகையில் வெளிவந்த செய்திகளைப் படித்துப் பாராட்டும் என் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்
வாசிப்புப் பழக்கத்தை பரம்பரை பரம்பரையாக வளர்த்தெடுக்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுஜாதாவின் நாவல்கள், சாண்டில்யன், மணியன், சாவி, சிவசங்கரி, இந்துமதி, லஷ்மி, வாஸந்தி, மாலன், சுப்பிரமணிய ராஜூ, பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை, ஜோதிர்லதா கிரிஜா, விமலா ரமணி, ராஜேஷ் குமார் என்று இந்தப் பட்டியல் என் வாழ்நாள் முழுக்கத் தொடரும்.

என் ஒரே பொழுதுபோக்கு வாசிப்பது, வாசிப்பது, வாசிப்பது மட்டுமே!

இது மட்டுமே அல்ல... என் மகளின் ஐந்து வயது முதலே நூலகத்துக்கு அழைத்துச் சென்று நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தினேன். வாசிப்புப் பழக்கத்தை பரம்பரை பரம்பரையாக வளர்த்தெடுக்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.

- கவிச்சுடர் எஸ்.வி.ரங்கராஜன், அம்பத்தூர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism