Published:Updated:

`அலைபாயுதே' கார்த்திக்-சக்தி முதல் `96' ராம்-ஜானு வரை... காதலில் கற்றுக்கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!

ராம், ஜானு
ராம், ஜானு

பல்வேறு உணர்வுகளின் குவியலான காதலுக்குப் பெயர்போன 14 படங்களுடன் உங்கள் காதலை ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காதலர் தினத்தை எதிர்நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காதல் வாரத்தில், இன்று 'புரொபோஸல் தினம்.' பல புரொபோஸல்களைக் கடந்து வந்தவர்களுக்கும், 'இந்தக் காதலர் தினத்திலாவது ஒரு புரொபோஸல் வருமா?' எனக் காத்திருப்பவர்களுக்கும் ஒரு விஷயம்.

காதல்
காதல்
pexels

காதலைச் சொல்லும் முன்பு நிதானமாக யோசித்து, உடனே சம்மதிக்க வைக்க எப்படி புரொபோஸ் செய்யலாம் என வித்தியாச வித்தியாசமா ஐடியாக்கள் பண்ணி மெனக்கெடுறீங்க. அதே மெனக்கெடல் வாழ்க்கை முழுவதும் இருந்தால் உங்க காதல் என்னைக்குமே கசக்காது.

காதல் பொதுவான விஷயமா இருந்தாலும் காதலிப்பவர்களின் குணாதிசயங்கள் மற்றும் ரசனையால் பல பரிமாணங்களைப் பெறும். அந்த வகையில் பல்வேறு உணர்வுகளின் குவியலான காதலுக்குப் பெயர்போன 14 படங்களுடன் உங்கள் காதலை ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

1. `அலைபாயுதே' ஊடல்

'உயிருக்குயிரா லவ் பண்ணாலும் எந்நேரமும் சண்டை வந்துட்டே இருக்கு. சமயத்துல பிரேக் அப் பண்ணிடலாமான்னு தோணுற அளவுக்கு கடுப்பாகுது'ன்னு உங்க நண்பர்கள்கிட்ட புலம்பிகிட்டே இருக்கீங்களா? இதுவரைக்கும் தலைய முட்டிக்கிட்டதுக்கும் செல்போனை தூக்கியடிச்சதுக்கும் கணக்கே இல்லையா? உங்களோட காதலுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜி கொடுத்து மறுபடியும் ஃபிரெஷ்ஷா லவ் பண்ண வெக்கிற காதல் ஜோடிதான் 'கார்த்திக் - சக்தி.'

அலைபாயுதே
அலைபாயுதே

"நாம சண்ட போடுற தேதிய குறிச்சு வெக்குறேன்"னு சொல்லும் சக்தி, சண்டை போட்டுகிட்டு எந்நேரமும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கார்த்தி எனக் காதலும் ஊடலும் மாறிமாறி அலையடிக்கும் படம் 'அலைபாயுதே.'

"நான் உன்ன விரும்பல... உம்மேல ஆசப்படல... நீ அழகா இருக்கன்னு நெனக்கல... ஆனா, இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு" - இந்த ஒரு டயலாக் போதுமே ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்தக் காதல் ஜோடியை நினைவுகூர!

அதனால எந்நேரமும் டாம் அண்டு ஜெர்ரியா இருக்கோமேன்னு கவலைப்படாம, சண்டை போடும் நேரத்தில் சண்டை போட்டுட்டு... அப்புறம் 'காதல் சடு குடு குடு...'ன்னு டூயட் பாட ஆரம்பிச்சிட்டீங்கன்னா நீங்களும் எவர்கிரீன் காதல் ஜோடிதாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. `மெளனராகம்' குறும்பு

''மிஸ்டர் சந்திரமெளலி... வாங்க சார், வந்து எங்களோட உக்காந்து ஒரு கப் காபி சாப்பிடுங்க'', கேர்ள் ஃபிரெண்டோட காலேஜுக்கு போய், ''அப்பாவுக்கு உடம்பு சரியில்லை''ன்னு பொய் சொல்லி பதற வைக்கிறது, பஸ்ஸுக்கு குறுக்க பைக்கை நிறுத்திட்டு, அடமா பக்கத்து சீட்ல வந்து உக்காந்துட்டு வம்பிழுக்கறதுன்னு 'மெளன ராகம்' கார்த்திக் மாதிரி குறும்புத்தனத்தின் மறு உருவமா இருக்கீங்களா, அப்போ உங்க பார்ட்னர் கொடுத்துவெச்சவங்க.

மெளனராகம்
மெளனராகம்

ஆனா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்துடாதீங்க. குறும்பு பண்றேன்னு அடுத்தவங்க எமோஷன்ல ஓவரா விளையாடாதீங்க. மிஞ்சுனதுக்கு அப்புறம் கெஞ்சினாலும் சரி, கொஞ்சுனாலும் சரி எவ்ளோ உருகுனாலும் வேலைக்கே ஆகாது. அதனால் உங்க குறும்பு சிரிக்கவும் ரசிக்கவும் மட்டுமேன்னு மனசுல பதிய வெச்சுக்கிட்டு அதுக்கப்புறம் மனசை பறிகொடுங்க.

3. 'இதயம்' தயக்கம்

ஒன் சைடு லவ் மாதிரி பெரிய கொடுமை உலகத்துலயே இல்லைன்னு பாதிக்கப்பட்டவங்க சொல்லுவாங்க. ஆனா, சொல்லி மறுக்கப்பட்ட ஒருதலை காதலர்களைவிட, காதலை சொல்லாமலே ஒருதலை காதலர்களாக சுற்றிக்கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். இதைப் பிரதிபலிக்கும் விதமாக 'இதயம்' படத்தில் ராஜாவாகத் தோன்றி ஒருதலை காதலர்களின் இதயங்களைப் பிழிந்தார் முரளி.

இதயம்
இதயம்

பரீட்சை எழுதிட்டு ஃபெயில் ஆனாகூட பரவாயில்ல. பரீட்சையே எழுதாம ஃபெயிலாயிடுவோமோன்னு பயப்படுறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்! அதனால லவ் பண்ணோமா, பளிச்சுன்னு சொன்னோமான்னு அடுத்தடுத்து நடக்குற விஷயங்களை ஃபேஸ் பண்ண தைரியம் இருந்தா மட்டும் காதல் பண்ணுங்க.

'இன்னிக்கு கண்டிப்பா சொல்லிடலாம்னு இருக்கேன் மச்சான்'னு கூட இருக்குறவங்களை தினம் தினம் இம்சை பண்ணாம, 'நான் எப்பவும் முரட்டு சிங்கிள்டா'ன்னு கெத்தா சுத்திட்டு இருக்கறதுதான் உங்களுக்கும் நல்லது உங்க நண்பர்களுக்கும் நல்லது. அதனால துணிந்து ஒரு நல்ல முடிவா எடுங்க.

4. 'காதலுக்கு மரியாதை' சுயகட்டுப்பாடு

தன்னோட குடும்பத்தை அளவுக்கு அதிகமா நேசிக்கறவங்க, தன் குடும்ப உறுப்பினரா வரவிரும்பும் நபரை எவ்வளவு நேசிப்பாங்க? அதன் அடையாளமா 'காதலுக்கு மரியாதை' செஞ்சவங்கதான் ஜீவாவும் மினியும்.

காதலுக்கு மரியாதை
காதலுக்கு மரியாதை

'ஒண்ணு சேர்ந்துடுவோமா', 'சேரமுடியாதோ', 'பேசாம பிரிஞ்சுடுவோமா'ன்னு கலவையான மனநிலையிலும் கலங்கிடாம, தங்களோட குடும்பத்துக்கும் காதலுக்கு ஒருசேர மரியாதை கொடுத்த இரண்டு காதல் மனசும் சுயகட்டுப்பாட்டுடன் பொறுமை காத்ததின் விளைவுதான் சுபம் க்ளைமாக்ஸ்.

அடுத்தவரின் மனம் கோணாமல் உங்கள் காதலில் வெற்றியடையணும்னா, ஜீவா - மினியின் 'லவ் அண்டு லவ் ஒன்லி' ஃபார்முலாவை ஃபாலோ பண்ணுங்களேன்..!

5. 'காதல் கோட்டை' நம்பிக்கை

காதலிக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டிய முக்கிய குணம் இதுதான். நம்பிக்கை வலுவிழந்துபோகும்போது சந்தேகம் தலைதூக்கும். காதலுக்கு இருக்கவே கூடாத குணம் சந்தேகம்தான்.

அதனால் உங்கள் பார்ட்னர் உங்களுக்கு உண்மையாக இருக்கிறாரா இல்லையா எனக் காதல் செய்ய ஆரம்பித்த பிறகு யோசிக்காமல், செய்யும் முன்பே யோசிப்பது உத்தமம்.

காதல் கோட்டை
காதல் கோட்டை

சாட்டிங், மீட்டிங், டேட்டிங் என ஈருடல் ஓருயிரா வலம்வரும் காதல் ஜோடிகளிடம்கூட இல்லாத உறுதியான 'நம்பிக்கைதான்' பார்க்காமலே காதல் செய்த சூர்யா - கமலி ஜோடியின் 'காதல் கோட்டை'க்கு அரணாக விளங்கியது.

நம்பிக்கை, அதானே எல்லாம்!

6. 'குணா' அதையும் தாண்டி புனிதமானது!

'மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல' என்பது நூற்றுக்கு நூறு உண்மை என நம்பும் வகையில் புரிந்துகொள்ள முடியாத, பதற்றமடைய வைக்கும், அசுரத்தனமான காதல் குணாவுடையது.

நீங்களும் குணாவைப்போல, 'என் காதலன்/காதலிதான் எனக்கு எல்லாமே. இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே கிடையாது. அவருக்காக நான் என்னவேணா பண்ணுவேன்'னு அப்நார்மலா சுத்திட்டு இருக்கீங்களா. தயவுசெஞ்சு உங்க கால்களை தரையில் வைங்க. நிதானத்துக்கு வாங்க, பிராக்டிக்கலா இருங்க.

குணா
குணா

உங்க பார்ட்னருக்கு மூச்சு முட்டும் அளவுக்கு உங்க காதல் இருந்தால், அதுவே உங்கள் இருவருக்குள்ளும் பிரச்னையாகத் தலையெடுக்கும். 'காதல்கொண்டேன்', 'காதலில் விழுந்தேன்' என அப்நார்மலான காதலின் முடிவுகள் எதுவும் சுபமாக இருந்ததில்லை என்பதை மனதில் பதித்துகொள்ளுங்கள்.

7. `குஷி' ஈகோ

`நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா' என உங்க பார்ட்னரிடமே ஈகோ பாக்குற மனநிலையில காதலிச்சுட்டு இருந்தீங்கன்னா உங்க காதல் உருப்படவே உருப்படாது. 'சிவா - ஜெனியோட காதல்தான் க்ளைமாக்ஸ்ல சேர்ந்திடும்ல'ன்னு இப்பவும் கெத்தா பதில் சொன்னீங்கன்னா, 'இது சினிமா இல்லை' என்பதுதான் பதிலாக வரும்.

குஷி
குஷி
பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!

உங்களுக்கு ஒரு விஷயம் புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் எல்லார்கிட்டேயும் வாயைத் திறந்து புரியுற மாதிரி சொல்லுவீங்கள்ல, அதே மாதிரி உங்க பார்ட்னர்கிட்டயும் இருங்க. 'நாம சொல்லாமலே நம்ம மனசுல இருக்கிறது அவங்களுக்குப் புரியணும்', ' நான் என்ன நினைக்கறேன்னு அவங்களாவே தெரிஞ்சுக்கணும், அதுக்கேத்தமாதிரி நடந்துக்கணும்'னு ஓவர் 'எதிர்பார்ப்பு' காதலுக்கு தீவிர எதிரி.

உங்க பார்ட்னர்கிட்ட மனசுவிட்டுப் பேசாம வேற யாருகிட்ட பேசிட முடியும்? அதனால அவங்க வாழ்க்கையை நீங்க வாழ நினைக்காம, அவங்கவங்களோட வாழ்க்கையை ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்க. உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு மதிப்பளித்து வாழும் வாழ்க்கை ஆரோக்கியமா இருக்கும்ங்க.

8. 'ஜீன்ஸ்' நம்பிக்கைத் துரோகம்

நம்ம காதல் வெற்றியடைஞ்சுடணும், நினைச்ச மாதிரி வாழ்க்கை அமைஞ்சுடணும், அதுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்னு முடிவுபண்ணிட்டு, நீங்க எப்படி இருக்கீங்களோ அது நிஜம்னு நம்பிட்டு இருக்ற பார்ட்னர்கிட்ட, உங்களோட பொய்யான முகத்தை காட்டிட்டு இருந்தீங்கன்னா உங்க மனசாட்சியே உங்களை சும்மா விடாதுங்க.

காதலர்கள் ஒருவர் மேல ஒருவர் வெச்சிருக்குற 'நம்பிக்கை' அந்தக் காதலுக்கு எந்த அளவுக்கு வலு சேர்க்குமோ, அதேபோல 'நம்பிக்கைத் துரோகம்' எப்பேர்பட்ட காதலையும் வலுவிழக்க வெச்சுடும்.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

அதனால உங்க காதலை கரைசேர்க்க செய்யும் விஷயமானாலும் உங்க பார்ட்னரிடம் மறைக்க நினைக்காமல், அவருடன் கலந்தாலோசித்து இருவரும் கரம்பிடித்து நடைபோடுங்கள். இல்லைன்னா 'ஜீன்ஸ்' படத்து கிளைமாக்ஸ் காட்சி மதுமிதா மாதிரி, உங்க டைட்டானிக் கப்பல்ல தனியாதான் பயணம் செய்யணும்.

'50 கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா'ன்னு உங்க காதலை டூயட் பாடிக் கொண்டாடறதைவிட, நீங்க வாழப்போற வாழ்க்கையில் இருவரும் '50-50' பார்ட்னர் என்பதை புரிஞ்சு நடந்துக்கோங்க. வாழ்க்கை நல்லா இருக்கும்.

9. 'ஆட்டோகிராஃப்' விடாமுயற்சி

'விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி' என்பது கஜினி முகம்மதுக்கு அடுத்த நம்ம 'ஆட்டோகிராஃப்' படத்தின் செந்திலுக்குத்தான் பொருந்தும். அதனால ஒரு விஷயம் நாம நினைக்குற மாதிரி நடக்கலைன்னா விபரீதமா முடிவெடுக்கும் எண்ணத்தைக் கைவிடுங்க.

ஆட்டோகிராஃப்
ஆட்டோகிராஃப்

தோல்வியில் கிடைத்த அனுபவப் பாடங்களை வெற்றியடையப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணித்து வெற்றியடைய முடியும்.

10. 'விண்ணைத்தாண்டி வருவாயா' க்ரேஸி

'உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணேன்'னு கார்த்திக் எத்தனை தடவை கேட்டாலும் பதிலே கிடைக்காது. அதனால 'ஐ அம் க்ரேஸி ஆன் யூ'ன்னு சொல்றது ஸ்டைலா இருக்கலாம். ஆனா ஓவர் க்ரேஸியா இருந்தீங்கன்னா ஒரிஜினல் லைஃபை மிஸ் பண்ணிடுவீங்க.

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா

அதனால காதல் மேல க்ரேஸியா இருங்க, ஆனா காதலி/காதலன் மேல அதை திணிக்காதீங்க. தினசரி வேலைகள், கடமைகள்னு பொறுப்பா நடந்துக்கிட்டு அதுல ஒரு பகுதியா காதலைக் கொண்டாடுங்க. தப்பில்லை.

ஆனா, எந்நேரமும் அதுலேயே மூழ்கிட்டு இருந்தா உங்க பார்ட்னருக்கு உங்க காதல் மேல அலர்ஜியாகி உங்க காதல் டைட்டானிக் கப்பல் மாதிரி மொத்தமா மூழ்கிடும்.

12. 'ஓகே கண்மணி' தில்

90'ஸ் காதலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கும் 2k கிட்ஸின் இந்தக் காதல், சர்ச்சில் நடக்கும் சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங், லிவ் இன் ரிலேஷன்ஷிப்னு ஸ்பீடா போயிட்டே இருக்கும். சினிமாவுல நடக்குற எல்லாமே நிஜத்துல நடந்திடும்னு நம்புறதை முதலில் நிறுத்துங்க.

ஓகே கண்மணி
ஓகே கண்மணி

ஸ்பீடா போறதே ரிஸ்க்குதான். அதுல ஸ்பீட் பிரேக்கர்களை கவனிக்காம போனா என்ன நடக்கும்னு யோசிச்சு நடந்துக்கோங்க. தாரா- ஆதியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் நமக்கு கூட, குறைய நடக்கலாம்.

ஆனா, முடிவு எப்படி இருக்கும்னு நாம முடிவெடுக்க முடியாது. அதனால் வாழ்க்கையில எங்கெல்லாம் ஸ்பீட் பிரேக் போடணும்னு தெரிஞ்ச தெளிவான மனநிலையில் டிராவல் பண்ணுங்க.

13. `96 - வேதனை

காதலர்களிடம் விட்டுக்கொடுக்கும் குணம் அவசியம். ஆனால், காதலையே விட்டுக்கொடுத்துட்டா? ஒருதலை காதலின் வலியைக் காதலில் விழுந்த இருவரும் அனுபவிப்பது என்பது விவரிக்க முடியாத ஓர் உணர்வு. அதுதான் ராம் - ஜானுவின் நிலைமை.

'96'
'96'

ராம், ஜானு இருவரையும் நாம் கொண்டாடலாம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கொண்டாட்டம் இல்லை. அவ்வப்போது நினைவுகள் எனும் டைம் மெஷினில் ஏறி கடந்தகால வாழ்க்கையில் பயணிக்க முடியும். ஆனால், நிகழ்காலத்தின் ஒவ்வொரு நொடியும் ரணவேதனையளிக்கும்.

அதனால் உங்களுடையது ஒருதலைக் காதலாக இல்லாதபட்சத்தில், கரம்பிடித்து பயணிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செயல்படுத்தத் தயங்காதீர்கள்.

14.  'பண்ணையாரும் பத்மினியும்' ஸோல் மேட்

சீண்டல், சிரிப்பு, கோபம், சண்டை, இயலாமை, வெட்கம், சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் தயக்கமில்லாமல் அப்படியே பகிரக்கூடிய ஓர் உறவு.

வாழ்க்கையின் பாதி அத்தியாயங்களுக்கு மேல் கரம்கோத்து, தோள் சாய்ந்து, தலை கோதி என இணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பயணிக்கும் வலுவான ஓர் உறவை கண்முன்னே வாழ்ந்துகாட்டியிருப்பார்கள். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் பண்ணையாரும் - செல்லம்மாவும்.

பண்ணையாரும் பத்மினியும்
பண்ணையாரும் பத்மினியும்
`உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்..!’ - அன்புக்குரியவரின் உடையைக் காதலிக்கலாமா? எப்படி?

வாழ்க்கையின் இறுதிக் காலத்திலும் 'உனக்காகப் பொறந்தேனே எனதழகா' எனப் புத்துணர்ச்சியுடன் காதல்செய்ய விருப்பமிருந்தால், உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்க பார்ட்னரை காதலுடன் சக மனிதர் எனும் முறையில் நட்புடன் மரியாதையாக நடத்துங்கள்.

காதலர் தினத்தன்று உங்கள் காதலைக் கொண்டாடுங்கள். ஆனால் உங்களைக் காதல் செய்துகொண்டிருப்பவரை தினம் தினம் கொண்டாடுங்கள். வாழ்க்கை இனிதாகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு