Published:Updated:

உங்கள் ஜோடி உங்களிடம் எதிர்பார்க்கும் வாக்குறுதி என்ன!? #PromiseDay

ப்ராமிஸ் டே
ப்ராமிஸ் டே

ப்ராமிஸ் செய்வதைவிட முக்கியம், அதைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையை அன்புக்குரியவருக்குக் கொடுப்பது! #PromiseDay

இன்றைய ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் பலவற்றிலும், சந்தேகம்தான் முதலும் முக்கியமுமான காரணமாக இருப்பதைக் காண முடிகிறது.

`என் மேல அவளுக்கு நம்பிக்கையே இல்ல. நான் யார்கூட பேசினாலும் என்னை சந்தேகப்படறா'

என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்கும் சந்தேகக் குணம் நாளடைவில்,

`இந்த ரிலேஷன்ஷிப்புக்கு நீ உண்மையாக இல்லை'

எனக்கூறி பிரேக் அப் செய்யும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

அடிப்படையில் மிக நெருக்கமான அல்லது நீண்டகால உறவுக்குள் இருப்பவர்களைக் கவனித்துப் பார்த்தால், அவர்கள் இருவருக்குள்ளும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நம்பிக்கை ஒன்று இருப்பதை உணரலாம். நம் வீடுகளில் அம்மா - அப்பாவைக் கவனித்துப் பார்த்தாலே, இந்த நம்பிக்கையின் ஆழத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இன்றைய இணையர்கள் இப்படியா இருக்கிறார்கள்? `ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லை' என்பதைவிடத் தீவிரமான வேறெந்தப் பிரச்னையும் அவர்களுக்கு இல்லை எனச் சொல்லிவிடும் அளவுக்கு பல ஜோடிகள் இருக்கிறார்கள்.

`அலைபாயுதே' கார்த்திக்-சக்தி முதல் `96' ராம்-ஜானு வரை... காதலில் கற்றுக்கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!
காதல்
காதல்

காதலின் அடிப்படை அன்பென்றால், அந்த அன்பின் அடிப்படை நம்பிக்கைதான். `என்ன ஆனாலும், எது நடந்தாலும், உனக்காக நான் இருப்பேன். எப்போதும் எந்தச் சூழலிலும் உனக்கு உறுதுணையாக இருப்பேன்!' என்ற நம்பிக்கையை ஓர் உறவு தரும்போதுதான், அந்த உறவின் பிடிப்பு அழுத்தமாகும். இந்த நம்பிக்கை கிடைக்காத உறவுக்கான ஆயுள் மிகமிகக் குறைவு.

`உங்க லவ்வருக்கு எத்தனை ரோஸ் கொடுக்கணும் தெரியுமா?!' - `ரோஸ் டே' காதல் கணக்குகள்  
#RoseDay

இன்றைய நாள், அதற்கான நாள். உங்கள் உறவுக்கிடையில் இருக்கும் நம்பிக்கையை, நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான தருணம், இன்றைய தினம். யெஸ் மக்களே... காதல் வாரத்துல இன்று `ப்ராமிஸ் டே'! உங்க இணையருக்கு, உங்க உறவுக்கு... அவங்க எதிர்பார்க்கிற ப்ராமிஸை நீங்க செஞ்சு கொடுப்பதற்கான பிரத்தியேக நாள் இது.

பிப்ரவரி 11
பிப்ரவரி 11

இன்னைக்கு நாள்ல ப்ராமிஸ் செய்வதைவிடவும் ரொம்ப முக்கியம், `கொடுத்த ப்ராமிஸை நான் காப்பாற்றுவேன்' என்ற நம்பிக்கையை இணையருக்குத் தருவதுதான். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தைகளால் தந்திடும் விஷயமில்லை. நம்பிக்கை என்பது சம்பவங்களின் தொடர்ச்சியாக, புரிந்துணர்தலின் அடிப்படையாக, இணையரில் ஒருவருக்கு இன்னொருவர் மேல் ஏற்படும் ஓர் உணர்வு. ஸோ, `ப்ராமிஸ் டே'யில் நீங்கள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் அடுத்தடுத்த நாள்களில் சீரியஸாக, சின்சியராகச் செயல்படுத்தி நம்பிக்கையை வளர்த்துக்கோங்க மக்களே!

சாக்லேட் பரிசளித்தால் காதலிக்கு மிகவும் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #ChocolateDay

ஏதோவொரு விதத்தில், ஒவ்வொரு முறையும் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே எந்தவொரு உறவும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதால், அதை அவசியம் செய்யுங்கள். 'அதெப்படிங்க நம்பிக்கையை உறுதிப்படுத்துறது?' என்கிறீர்களா. நம்பிக்கையை உறுதிப்படுத்த, அதிகபட்சமாக நீங்கள் செய்ய வேண்டியது, இதற்கு முன்னர் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது. எந்தவொரு ரிலேஷன்ஷிப்பிலும், `இவன்/ள் சொன்னா சொன்னபடி செய்வான்/ள்' என்பதைவிடவும், நம்பிக்கைக்கான அடித்தளம் வேறு எதுவுமேயில்லை.

ப்ராமிஸ் டே
ப்ராமிஸ் டே

வெயிட் வெயிட்... `ப்ராமிஸ் டே'யில் உங்கள் இணையருக்கு ப்ராமிஸ், நம்பிக்கையெல்லாம் தரும் முன் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, ப்ராமிஸ் கொடுக்கும் முன், உங்கள் இணையர் உங்களிடமிருந்து என்ன ப்ராமிஸ் எதிர்பார்க்கிறார் என்று கேளுங்கள். காரணம், அவர் எதிர்பார்க்கும் விஷயத்தை நீங்கள் செய்யும்போது, உறவு முன்பைவிடவும் வலுவாகும்.

பெண்கள், டெடி பொம்மை, காதல்... என்ன சம்பந்தம்..?! #TeddyDay

இந்த 'ப்ராமிஸ் டே'யில், `உங்கள் இணையருக்கு நீங்கள் கொடுக்கப்போகும் ப்ராமிஸ் என்ன?' எனச் சில இணையரிடம் கேட்டோம். அவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட சிலவற்றை, இங்கே தொகுத்திருக்கிறோம்.

உங்கள் இணையரிடம் கொடுக்கப்போகிற வாக்குறுதிகளில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

* நீ சொல்ல வரும் விஷயத்தை காதுகொடுத்துக் கேட்பேன்.
* உன்னோட இயல்பை மாற்றிக்கொள்ளச் சொல்லி, இனி எப்பவும் வற்புறுத்த மாட்டேன்.
* வாழ்க்கையில் உன்னுடைய எல்லாகட்ட வளர்ச்சியிலும், நான் எப்பவுமே உறுதுணையா இருப்பேன்.
* எவ்வளவு பிஸியான வாழ்க்கையிலும் நமக்கான நேரத்தை தட்டிக்கழிக்க மாட்டேன்.
* உன் ஆலோசனை இல்லாமல், நம்ம வாழ்க்கையோட எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.
* உன்னோட விருப்பங்களுக்கு எப்பவுமே முக்கியத்துவம் கொடுப்பேன்.
* நீ என்னோடு இருப்பதில், எனக்கு எப்போதுமே பெருமைதான்.
* எந்தச் சூழலிலும், உன்னையோ உன் இருப்பையோ உதாசீனப்படுத்த மாட்டேன்.
* உன் குடும்பத்தின்மீது, நானும் அளவுக்கதிகமாக அன்பு காட்டுவேன்.
* என்னோடு நீ இருக்க வேண்டும் என்பதற்கு, எப்போதுமே நான் முன்னுரிமை கொடுப்பேன்.
* உன் கருத்துகளுக்கு செவி கொடுப்பேன், மதிப்புக் கொடுப்பேன்.
* உன் கடந்த காலங்களை வைத்து, இப்போதிருக்கும் உன்னை மதிப்பிட மாட்டேன்.
* நமக்குள் எவ்வளவு மனக்கசப்புகள் வந்தாலும், நம் உறவு நிலைத்திருக்க என்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
* என்றைக்குமே உன்னை சந்தேகப்பட மாட்டேன்.
* நீ நீண்ட நாள் கேட்டுவரும் வாக்குறுதிகளான புகை, மது பழக்கங்களை கைவிடுகிறேன்.
* உன்னையோ, உன் இருப்பையோ என்றைக்குமே நான் அலட்சியப்படுத்தமாட்டேன்.

இவையெல்லாமே உங்கள் இருவருக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான விஷயங்கள் என்பதால், தாமதிக்காமல் உங்கள் பார்ட்னருக்கு இந்த வாக்குறுதிகளையெல்லாம் உடனே தந்துவிடுங்கள்!

அப்புறம்... ஹேப்பி ப்ராமிஸ் டே மக்களே!

அடுத்த கட்டுரைக்கு