லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

ஒரு டைம் டிராவல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு டைம் டிராவல்

2கே கிட்ஸ் காதல் தோல்வியை பிரேக்-அப் என்ற வரையறைக்குள் அடைத்து அதை `சூப்' பாடல்களுடன் ஒரு கொண்டாட்டமாக மாற்றினார்கள். இப்போதுதான் தமிழ் சினிமா காதல் தோல்வியை நார்மலைஸ் ஆக்கியிருக் கிறது

காதல் என்றதும், 90’ஸ் கிட்ஸாக இருந்தால் ‘அலைபாயுதே’ மாதவன்-ஷாலினியும், 2கே கிட்ஸாக இருந்தால் ‘ஓ.கே கண்மணி’ துல்கர்-நித்யா மேனனும் கண்முன்னே வருவார்கள். மனதுக்குள் ‘சிநேகிதனே’யையும், ‘மன மன மென்டல் மனதை’யும் ஹம் பண்ண ஆரம்பித்திருப் பீர்கள். தமிழ் சினிமாவின் காதல் காட்சிகளை விழுந்துவிழுந்து ரசித்திருப்பீர்கள். இப்போது யோசித்தால் பல காதல்களிலும் லாஜிக் என்ற ஒன்றே இல்லாதது புரியும். 80, 90, 2கே காலத்து தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ் குறித்து டைம் டிராவல் ஒன்று போவோமா..?

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

80-ஸ் காதலும் சமூக இடைவெளியும்...

80-களில் வெளியாகிய ‘இதயம்’ படத்தில் முரளி பல சட்டைகளை மாற்றினாலும் கடைசி வரை கடிதத்தை மாற்றவே மாட்டார். அந்தக் காலத்து கதாநாயகர்கள் பலரும் காதலியின் முதுகுக்குப் பின்னால் 100 மீட்டர் இடைவெளியில் நின்று, அப்போதே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவர்கள்.

காதலை ஆண்தான் முதலில் சொல்ல வேண்டும், நண்பன் ஒரு பெண்ணை காதலிப்ப தாகச் சொன்னால், அந்தப் பெண்ணுக்கு பிடிக்கிறதா என்றுகூட யோசிக்காமல் சேர்த்து வைக்க முயற்சி செய்வது, கூட்டமாக டூயட் பாடுவது என காதலை டஃப் ஆக்கியவர்கள். அங்கிருந்து அப்படியே ஜம்ப் பண்ணி 90'ஸ் சீன்களை பார்ப்போமோ...

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

ஒருமுறை மட்டுமே பூத்த காதல்...

காதல் ஒரு முறைதான் பூக்கும் என நம்பு வது, காதலிக்காக நாக்கைக்கூட வெட்டிக் கொள்வது என அப்பட்டமான க்ரின்ஜ் தனமான காதல் செய்தவர்கள் 90'ஸ் நாயகர்கள். காதலி கடக்கும் பாதையில் கூட்டமாக நின்றுகொண்டு காதல் பாடல் களை அலற விடுவது, காதலர் தினத்தன்று பச்சை நிற ஆடையில் வருவது, லஞ்ச் பாக்ஸில் லெட்டர் எழுதி வைப்பது, ரோஸ் கொடுத்து காதல் சொல்வது, பெஞ்ச்சில் பிளேடால் பெயர் எழுதுவது, தூணைச் சுற்றி காதல் செய்ததெல்லாம் 90'ஸ் கிட்ஸின் அலப்பறைகள்...

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி இன்ஸ் டன்ட்டாக காதலைச் சொல்பவர்கள் 2கே கிட்ஸ். ‘3’ படத்தில் காட்டப்பட்டதுபோல் ஸ்கூல் காதல் தொடங்கி, ‘லவ் டுடே’வில் காட்டியதுபோல் போனை மாற்றிக்கொள்வது வரை காதல் காலத்துக்கேற்ப அப்டேட் ஆகி யிருக்கிறது. இவர்கள் ஃபேக் ஐ.டி.யில் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

துரத்துதல், மிரட்டுதல், கெஞ்சுதல்...

‘இதயம்’ படத்தில் முரளி செய்ததும் ஸ்டாக்கிங் எனப்படும் பெண்ணைத் துரத்துதல்தான். ‘மெளனராகம்’ படத்தில் கொண்டாடப்பட்ட பஸ் - பைக் சீனும் ஸ்டாக்கிங்தான். ‘சேது’ திரைப்படம், ஸ்டாக்கிங்கின் உச்சம். கதாநாயகன், கதா நாயகியைத் துரத்தித் துரத்திக் காதலிக்க, நாயகனின் ரக்கடு குணம் பிடித்து நாயகியும் காதலிப்பார். ஹீரோக்கள் மட்டுமா ஸ்டாக்கிங் செய்தார்கள்... ‘சூர்யவம்சம்’ படத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தன்னைப் பார்க்க வரவில்லையென்றால் மலையிலிருந்து குதித்து விடுவதாக ஹீரோயின் மிரட்டியதும் ஸ்டாக்கிங் தான். துரத்துவதும், மிரட்டுவதும், கெஞ்சுவதுமா காதல்..? 2கே படங்கள் வரை மாற்றமில்லை என்பதுதான் வருத்தம். ‘ரெமோ’ ஓர் உதாரணம்.

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

ஐ லவ்யூங்க... ஆனா, கற்பு முக்கியம்!

காதலில் ஆண்களுக்கு ஒரு ரூல், பெண் களுக்கு ஒரு ரூல்... இதைத்தான் மூன்று தலை முறைப் படங்களும் பேசுகின்றன. ஆணுக்கு எத்தனை காதல் வேண்டுமானாலும் இருந் திருக்கலாம். அதை தைரியமாக காதலியிடம் சொல்லலாம். அதை காதலி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வாள். இதற்கு மாஸ் ஹிட்டான ‘ஆட்டோகிராஃப்’, ‘சில்லுனு ஒரு காதல்’ படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், பெண்களுக்கு ஒரு காதல்தான் இருக்க வேண்டும். அதையும் மீறி இரண்டாவது காதலோ, இரண்டாவது திருமணமோ வந்தால், பெரும்பாலும் முதல் ரிலேஷன்ஷிப் பில் ஹீரோயின் கற்பை இழந்திருக்க மாட்டார். அதையும் மீறி ஹீரோயின் சிங்கிள் மதர் என்றால் ஆண், அவரை ‘பெரிய மனது’டன் ஏற்றுக்கொள்வது போன்றே காட்சியமைக்கப் பட்டிருக்கும்.

‘மௌனராகம்’, ‘பொண்ணு வீட்டுக்காரன்’, `ரிதம்’, `ஆசையில் ஒரு கடிதம்’, ‘சத்தம் போடாதே’ என இதற்கு ஏகப்பட்ட உதா ரணங்கள்.

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

பிரேக் அப்பும் சூப் சாங்ஸும்

80-ல் வெளியாகிய, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘வாழ்வே மாயம்’, ‘புன்னகை மன்னன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் காதல் தோல்வியை அடையாளப்படுத்த மரணம், தாடி வளர்ப்பது, சோக பாடல் பாடுவது என சித்திரித்தன. முற்போக்கு என்ற பெயரில் 90'ஸ் திரைப்படங்களில் தன் காதலியை அவள் காதலனுடன் சேர்த்து வைப்பது, பெற்றோர் சம்மத்துக்காக காத்திருப்பது, முன்னாள் காதலியைப் படிக்க வைப்பது, காதலியின் திருமணத்தை தூரத்திலிருந்து பார்ப்பது போன்ற சீன்கள் மூலம், காதல் வலியை அனுபவிப்பவர்கள் ஆண்களாகவும், பெண்கள் சுயநலக்காரர்கள் எனவும் காட்சிப் படுத்தியிருப்பார்கள். ‘ஷாஜகான்’ தொடங்கி ‘உன்னை நினைத்து’, `பூவே உனக்காக’ என பல படங்கள் உதாரணங்கள்.

2கே கிட்ஸ் காதல் தோல்வியை பிரேக்-அப் என்ற வரையறைக்குள் அடைத்து அதை `சூப்' பாடல்களுடன் ஒரு கொண்டாட்டமாக மாற்றினார்கள். இப்போதுதான் தமிழ் சினிமா காதல் தோல்வியை நார்மலைஸ் ஆக்கியிருக் கிறது. ஆனால், காதல் தோல்விக்காக பெண் களைத் திட்டும் டாஸ்மாக் சீன் பாடல்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் அந்தப் படங்களைக் கொண்டாடியிருக்கலாம்.

80, 90, 2கே கால தமிழ் சினிமா காதல் க்ரின்ஜ்... ஒரு டைம் டிராவல்

காதல்... கற்பனையல்ல, யதார்த்தம்!

உலகம் உள்ள வரை காதல் இருக்கும். காதல் உள்ள வரை காதல் படங்களும் இருக் கும். ‘அலைபாயுதே’ பார்த்துவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீடுகளில் வசித்த ஜோடிகளையும், ‘ஓகே கண்மணி’ பார்த்துவிட்டு லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு தயாரான ஜோடிகளையும், இதோ ‘லவ் டுடே’ பார்த்துவிட்டு மொபைலை மாற்றிக்கொள்வதை கண்டிஷனாக போடத் தொடங்கியிருக்கிற ஜோடிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திரைப்பட காதல் என்பது கற்பனையல்ல, அது சமூகத்தில் தாக் கத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற பொறுப்பு படைப்பாளிகளுக்கு வேண்டும். இந்தக் கால காதலை அடுத்த தலைமுறையினர் க்ரின்ஜாக பார்க்காமல், கலாய்க்காமல் இருக்க சம்பந்தப் பட்டவர்கள் இப்போதே யோசித்தாக வேண்டும்.