Published:Updated:

கட்டைப்பையில் காதல் கடிதங்கள், 25வது கல்யாண நாளில் மீண்டும் திருமணம்! - தேவி, சுவாமிநாதன் காதல் கதை

தேவி வித்யா, சுவாமிநாதன்
தேவி வித்யா, சுவாமிநாதன்

``பட்டு வேட்டி, பட்டுப்புடவை கட்டிட்டு ரூமை விட்டு வெளியே வந்தா, ஹால்ல ஒரு கல்யாணத்துக்கான அத்தனை விசேஷங்களும் இருந்துச்சு. புரியாம பார்த்த எங்களை அழைச்சிட்டுப் போய் மணவறையில உட்கார வெச்சாங்க...''

ஒரு தலைமுறையின் காதல், அதன் முந்தைய தலைமுறைக்கு அதன்மேல் மரியாதை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கோ அதன்மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த இரண்டையுமே மிக அழகாகச் செய்திருக்கிறது தேவி வித்யா - சுவாமிநாதன் தம்பதியின் காதல். திருமணம் முடிந்து கால் நூற்றாண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடிய இவர்களின் காதல் கதையை அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள்.

25-வது திருமண நாள்
25-வது திருமண நாள்

``சுவாமி எனக்கு தூரத்து சொந்தம்தான். ஆனா, நான் எட்டாவது படிச்சிட்டிருந்தப்போதான் அவரை முதன்முதலா பார்த்தேன். அவருக்கும் எனக்கும் அஞ்சு வயசு வித்தியாசம். அப்போ, அவர் டிப்ளோமா முடிச்சிட்டு வேலையில சேர்ந்திருந்தார். முதன்முறை பார்த்தப்போ, யாரோனு நினைச்சு கடந்துபோயிட்டேன்'' என்கிற தேவி வித்யாவின் பேச்சில் இடையிட்டு, சுவாமிநாதன் பேச ஆரம்பிக்கிறார்.

''எனக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். நமக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது இந்தப் பொண்ணோடதான்னு முடிவே பண்ணிட்டேன். ஆனா, ஐ லவ் யூ எல்லாம் சொல்லவேயில்லை. இன்னும் படிக்கணும், வேலையில முன்னுக்கு வரணும், அதுக்கப்புறம்தான் காதலைச் சொல்லணும்னு தீர்மானமா இருந்தேன்" என்கிறார்.

கட்டைப்பையில் காதல் கடிதங்கள், 25வது கல்யாண நாளில் மீண்டும் திருமணம்!
- தேவி, சுவாமிநாதன் காதல் கதை
Photo: Ashok

``எனக்கும் சுவாமி மேல லவ் இருந்துச்சு. நான் படிப்புல ரொம்ப கெட்டி. லேட் நைட்லகூட படிப்பேன். இவர் வேலை விஷயமா மதுரைக்கு வர்றப்போ எல்லாம் எங்க வீட்லதான் தங்குவார். அந்த நேரங்கள்ல, நான் கண்ணு முழிச்சுப் படிச்சிட்டிருந்தா, இவரும் ஏதாவது புத்தகம் படிச்சிட்டு கண்ணு முழிச்சிட்டிருப்பார். அப்போகூட நாங்க லவ் யூ சொல்லிக்கிட்டதில்ல. ஆனாலும், ஒருத்தர் மேல ஒருத்தர் நேசம் இருக்குனு ரெண்டு பேருக்குமே தெரியும். அந்தக் கால காதலோட அழகு அதுதான்... வார்த்தைகள் குறைவாவும், உணர்வுகளும் புரிந்துணர்வுகளும் நிறைவாவும் இருக்கும்.

நான் ப்ளஸ் டூ முடிச்சப்போதான் கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகள் வர ஆரம்பித்தன. எதிர்காலம் இந்தப் படிப்புக்குதான்னு சொல்லி, என்னை டெல்லிக்குப் படிக்க அனுப்பினாங்க. என் தாய்மாமா வீட்ல தங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். முதல் தடவையா எங்களுக்குள்ள பிரிவு வந்துச்சு. அந்தக் காலத்துல எல்லார் வீட்லேயும் லேண்ட்லைன் இருக்காது. நடுவுல ரெண்டு, மூணு தடவை இவரு டெல்லிக்கு வந்ததைத் தவிர, நாலு வருஷம் கடிதங்கள் மட்டுமே எங்களுக்கு இடையே இருந்த ஒரே தொடர்பு'' என்றவர், ஒரு கட்டைப்பை நிறைய இருவரும் எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை நம்மிடம் காண்பித்தார்.

ரிசார்ட்டில்...
ரிசார்ட்டில்...

``அந்தக் காலத்துல காலேஜை கட் அடிக்க முடியும்கிறதோ, சுவாமி டெல்லிக்கு வந்தப்போ ஸ்பெஷல் கிளாஸ்னு மாமா வீட்ல பொய் சொல்லிட்டு வெளியே சுத்தலாம்கிறதோ அப்போ எங்க ரெண்டு பேருக்குமே தோணவே இல்லை. எங்க ஃபேமிலிக்கு அவ்ளோ நேர்மையா இருந்தோம். நான் காலேஜ் முடிச்சு வேலைபார்க்க ஆரம்பிச்சவுடன், என் அப்பா 'கல்யாண விஷயத்துல உன் விருப்பம் என்னம்மா'ன்னு கேட்டார். நான், இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேன். எங்களோட அதிர்ஷ்டம் அந்த நேரம் பார்த்து, இவருக்கும் டெல்லிக்கு வேலை மாற்றலாச்சு'' என்றவர் தொடர்ந்தார்.

``பொதுவா தன் குழந்தைங்க கல்யாண விஷயத்துல பெத்தவங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும். 25 வருஷத்துக்கு முன்னாடி இது இன்னும் அதிகமாவே இருந்திருக்கும். எங்க ரெண்டு பேரோட பேரன்ட்ஸுக்கும்கூட அப்படி நிறைய கனவுகள் இருந்திருக்கு. ஆனா, எங்க ரெண்டு பேர் காதலுக்காக அதையெல்லாம் கலைச்சிட்டு கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னாங்க. கொஞ்சம் கலகலப்பில்லாமதான் எங்க கல்யாணம் நடந்து முடிஞ்சது.

``அந்தக் காலத்துல காலேஜை கட் அடிக்க முடியும்கிறதோ, சுவாமி டெல்லிக்கு வந்தப்போ ஸ்பெஷல் கிளாஸ்னு மாமா வீட்ல பொய் சொல்லிட்டு வெளியே சுத்தலாம்கிறதோ அப்போ எங்க ரெண்டு பேருக்குமே தோணவே இல்லை. எங்க ஃபேமிலிக்கு அவ்ளோ நேர்மையா இருந்தோம்.''
தேவி வித்யா

அதுக்கப்புறம், எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. சொந்த பிசினஸ் ஆரம்பிச்சோம். அவர்கூட பிறந்தவங்க, என்கூட பிறந்தவங்க, பிறந்த வீட்டுக்காரங்க, புகுந்த வீட்டுக்காரங்க எல்லாருக்கும் எங்க வீடுதான் சந்தோஷத்துக்கான ஒரு வேடந்தாங்கலா மாற ஆரம்பிச்சது. பொண்ணு ஆஸ்திரேலியாவுல படிக்கிறா; பையன் பிசினஸ் பண்றான்னு வாழ்க்கை ரொம்ப இதமா நகர்ந்துகிட்டிருந்துச்சு.

போன வருஷம் ஆகஸ்ட்ல 19-ம் தேதி எங்களோட 25-வது திருமண நாள். வழக்கம்போல எங்க கல்யாணநாளைக் கொண்டாட எல்லா சொந்தக்காரங்களும் ஒரு நாள் முன்னாடியே வீட்டுக்கு வந்துட்டாங்க. கூடவே ஆஸ்திரேலியாவுல இருக்கிற என் பொண்ணும். ஏதோ அமைஞ்சிக்கரையில இருந்து வந்த மாதிரி 'உங்க வெடிங் டேக்கு வந்தேன்மா'ன்னு சொன்னா. ஆனால், அடுத்தடுத்த நாள்கள்ல நாங்க அனுபவிக்கப்போற இன்ப அதிர்ச்சிக்காகத்தான் இவங்க எல்லோரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்கனு அப்போ எங்களுக்குத் தெரியாது. யூகிக்கக்கூட முடியல. கல்யாண நாளுக்கு முந்தைய நாள் இரவு, எங்க ரெண்டு பேரையும் டின்னருக்கு வெளியே கூட்டிட்டுப் போனாங்க. அங்க போனதும்தான் அது எங்களோட ரிசப்ஷன்னு தெரிஞ்சது'' என்று கண்கலங்க ஆரம்பித்த மனைவியை அணைத்து சமாதானம் செய்தார் சுவாமிநாதன்.

மாலை மாற்றுகையில்...
மாலை மாற்றுகையில்...

``அந்த ரிசார்ட்ல எங்க ரெண்டு பேரோட ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ், காலேஜ் ஃபிரெண்ட்ஸ், டெல்லியில வித்யாகூட வேலைபார்த்தவங்க, என்கூட வேலைபார்த்தவங்கன்னு எல்லோரும் வந்திருந்தாங்க. அத்தனை பேரையும் எங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எப்படி தேடிக் கண்டுபிடிச்சாங்கன்னே தெரியலை'' என்று உணர்ச்சிவசப்பட்டார் சுவாமிநாதன்.

தேவி வித்யா தொடர்ந்தார். ``ரிசப்ஷன் முடிஞ்ச அன்னிக்கு நைட் எங்க அப்பா - அம்மாவும், 'காலையில வீட்ல கணபதி ஹோமம் பண்ணப் போறோம். சீக்கிரம் எழுந்திருச்சிருங்க'ன்னு சொன்னாங்க. நாங்களும் விடியற்காலையிலயே எழுந்து அவங்க வாங்கிக்கொடுத்த பட்டு வேட்டி, பட்டுப்புடவை கட்டிட்டு ரூமை விட்டு வெளியே வந்தா, ஹால்ல ஒரு கல்யாணத்துக்கான அத்தனை விசேஷங்களும் இருந்துச்சு.

காசி யாத்திரையின்போது...
காசி யாத்திரையின்போது...

புரியாமப் பார்த்த எங்களை அழைச்சிட்டுப் போய் மணவறையில உட்கார வெச்சாங்க. சுவாமி பக்கத்துல என் அப்பா உட்கார, என்னை அப்பாவோட மடியில உட்கார வெச்சு மாங்கல்யதாரணம் செஞ்சாங்க. அது மட்டுமல்லீங்க, தோள்ல உட்கார வெச்சு மாலை மாத்துறது, காசி யாத்திரை, கண்ணூஞ்சல்னு எல்லா சடங்கு, சம்பிரதாயங்களையும் செஞ்சாங்க.

''25 வருஷமா தொடரும் டீன் ஏஜ் லவ்... உயிருள்ளவரைத் தொடரும்'' - காதல் அனுபவங்கள் பகிரும் தேவி வித்யா - சுவாமிநாதன்! ''...

Posted by Vikatan EMagazine on Thursday, February 13, 2020

`இந்தக் குழந்தைகளுக்கு 25 வருஷத்துக்கு முன்னாடி பரபரன்னு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சோம். அதை எல்லோராலும் அப்போ சந்தோஷமா அனுபவிக்க முடியலை. அதனால, இப்போ எந்தச் சடங்கு, சம்பிரதாயத்தையும் விடாம மறுபடியும் கல்யாணம் பண்ணணும்'னு எங்க அப்பா, அம்மா, சொந்தக்காரங்க எல்லாரும் ஆசைப்பட்டிருக்காங்க.

கல்யாண விருந்தில்...
கல்யாண விருந்தில்...

எங்க குழந்தைங்க, எங்க நிறுவனத்துல வேலைபார்க்கிறவங்க உள்பட எல்லோருமே அதை எங்களுக்குத் தெரியாம பிளான் பண்ணி, எங்களோட பழைய ஃபிரெண்ட்ஸை எல்லாம் இன்வைட் பண்ணி... தேங்க் காட், இப்படிப்பட்ட சொந்தங்களை எங்களுக்குக் கொடுத்ததுக்கு..!''- ஆனந்தக் கண்ணீருடன் மனைவி திக்குமுக்காடுவதை அருகில் அமர்ந்தபடி ரசிக்கிறார் சுவாமிநாதன்.

என்றென்றும் காதல்!

``ஒருமுறை மீண்டும் என் இதயத்தோடு உன்னை  அணைத்துக்கொள்கிறேன்..." -  மார்க்ஸ்... ஜென்னி... காதல்..!  
அடுத்த கட்டுரைக்கு