Published:Updated:

`புறாவைப் போன்று அவர்கள் இணைபிரியாதவர்கள்!' - அரசக் குடும்பத்து தம்பதி பற்றி இங்கிலாந்து செஃப்

William, Kate Middleton and Chef Mary Berry
William, Kate Middleton and Chef Mary Berry ( www.instagram.com/kensingtonroyal )

'மனைவி சிரிக்கையில் அவர் முகத்தைவிட்டு கண்களை எடுப்பதில்லை இளவரசர்.'

தன் குழந்தைகள் உச்சரித்த முதல் வார்த்தையை அம்மாக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். தவிர, 'என் பிள்ளை முதன்முதலா சொன்ன வார்த்தை இதுதான்' என்று தனக்கு நெருங்கியவர்களிடமெல்லாம் அதைச் சொல்லி சொல்லிப் பூரித்துப்போவார்கள். இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் மூத்த மருமகளான இளவரசி கேட் மிடில்டனும் இதற்கு விதிவிலக்கில்லை.

 Kate Middleton with her son Louis
Kate Middleton with her son Louis
Photo MATT PORTEOUS/PA

என் குட்டி மகன் லூயிஸ், பேச ஆரம்பித்துவிட்டான். நான் எங்கு சென்றாலும் என்கூடவே வருவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டான் என்று சமீபத்திய பேட்டியொன்றில் பூரித்திருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னால், 20 மாதங்களான தன் மகன் முதல்முதலாக உச்சரித்தது யாருடைய பெயரை என்று வெளிப்படுத்தியிருக்கிறார். கேட் மிடில்டன் அதை விவரித்தவிதம் ஓர் அழகான கவிதைபோல இருக்கிறது.

''லூயிஸ் உச்சரித்த முதல் வார்த்தை 'மேரி'. இந்த மேரி யார் தெரியுமா. எங்கள் அரண்மனைக் கிச்சனில் இருக்கிற புக் ஷெல்ஃப்தான் லூயியின் உயரத்துக்கு எட்டும். கிட்டத்தட்ட அந்த ஷெல்ஃப் முழுக்க இங்கிலாந்தின் புகழ்பெற்ற சமையல்கலை நிபுணர் மேரி பெர்ரியின் புத்தகங்கள்தான் இருக்கும்.

குழந்தைகளை முகங்கள் சுலபமாக ஈர்த்துவிடுகின்றன. மேரி பெர்ரியின் சமையல் புத்தகங்களிலெல்லாம் அவரது முகம்போட்ட அட்டைப்படத்தைப் பார்த்து வந்த லூயிஸ் ஒருநாள், அவருடைய படத்தைச் சுட்டிக்காட்டி 'மேரி' என்றான்'' என விவரித்த கேட் மிடில்டன், இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட சமையல்கலை நிபுணர் மேரி பெர்ரியிடமே நேரில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். கூடவே, உங்களை நேரில் பார்த்தால் என் மகன் அடையாளம் கண்டுகொள்வான் என்றும் சொல்லியிருக்கிறார் இளவரசி.

William, Kate Middleton and Chef Mary Berry
William, Kate Middleton and Chef Mary Berry
www.instagram.com/kensingtonroyal

இங்கிலாந்து இளவரசியின் வார்த்தைகளால் மகிழ்ச்சியில் திளைத்துப்போன மேரி பெர்ரிக்கு தற்போது 84 வயதாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டி.வி சேனல் ஒன்றில் ஷூட் செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சியில்தான் இந்த சந்தோஷமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

எங்கள் அரண்மனைக் கிச்சனில் இருக்கிற புக் ஷெல்ஃப்தான் லூயியின் உயரத்துக்கு எட்டும். கிட்டத்தட்ட அந்த ஷெல்ஃப் முழுக்க இங்கிலாந்தின் புகழ்பெற்ற சமையல்கலை நிபுணர் மேரி பெர்ரியின் புத்தகங்கள்தான் இருக்கும்.
இளவரசி கேட் மிடில்டன்
In TV show
In TV show
www.instagram.com/kensingtonroyal

''இந்தச் சமையல் நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் கேட் மிடில்டன் இருவரும் கலந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் புறாவைப் போன்ற இணைபிரியாத தம்பதியர். அவர்கள் அருகருகே இருக்கையில் வில்லியம் தன் மனைவியின் கரங்களை ஸ்பரிசித்தபடியே இருக்கிறார். மனைவி சிரிக்கையில் அவர் முகத்தைவிட்டு கண்களை எடுப்பதில்லை இளவரசர். இளவரசியும் தன் கணவர் மீது அதே அளவுக்கு காதலுடன் இருக்கிறார். அவர்களுடைய காதல் மிக இயல்பாக இருப்பதால், பார்ப்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது'' என்று இங்கிலாந்து அரசக்குடும்பத்து தம்பதியைக் கொண்டாடியிருக்கிறார் மேரி பெர்ரி.

என்றென்றும் காதல்!

அடுத்த கட்டுரைக்கு