Published:Updated:

சிங்கிள்ஸ் டே! நம்மூருல எப்படிக் கொண்டாடுறது? முரட்டு சிங்கிளின் மிரட்டல் ஐடியாக்கள்! #SinglesDay

சீனர்கள் தொடங்கி வைத்த சிங்கிள்ஸ் டே, இன்று! 1 1 1 1 - அதாவது, சிங்கிள் உலகில் மூழ்கி முத்தெடுத்த சீனத்து சிங்கிள்கள் நான்கு பேர் உருவாக்கியது, இந்த நாள்.

Singles Day
Singles Day

சீன அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் வெகு விமரிசையாக இந்த தினம் மக்களால் கொண்டாடப்படுகிறது. சீனாவின் பெருவணிகத் திருவிழாவாகவும் இந்த தினம் களைகட்டி வருகிறது, சிங்கிள்களின் உபயத்தால். நாடே இந்த நாளை வருடம் தவறாமல் கொண்டாடுகிறது. இப்போது உலகம் முழுக்க...

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே
இது மொரட்டு சிங்கிள்ஸ் ஏரியா... கலக்கும் மயிலாடுதுறை ஹோட்டல்!

சிங்கிள்ஸ் என்றாலே ஜாலிக் கொண்டாட்டத்துக்கும் வாய்ப்பு உண்டுதானே. சரி, சீனா கொண்டாடட்டும். நம்ம சென்னையிலும் செந்தமிழ் நாட்டிலும் சிங்கிள் தினத்தை எப்படிக் கொண்டாடுவது?

1. லேடீஸ் ஸ்பெஷல் பேருந்துகள் வரும் சாலைகளை ஒருநாள் முழுக்கப் புறக்கணிக்கலாம். நாலு சிங்கிள்ஸ் நிம்மதியா நடக்க முடியுதா? இதுல, 4H வந்தாச்சா, 5H வந்தாச்சான்னு கேள்விகள் வேற. முக்கியமா மெட்ரோ ஸ்டேஷன்களை துச்சமாகக் கடந்துடணும். டிக்கெட் தர்ற இடத்துலகூட ஒய்யாரமா உட்கார்ந்துக்கிட்டு... அங்க டிக்கெட் வாங்கிட்டு 'தயவுசெய்து இடைவெளியைக் கவனத்தில் கொள்ளவும்' வாய்ஸை எல்லாம் கேட்டு டிராவல் பண்ண வேண்டியிருக்கு. இந்த ஒரு நாளாச்சும், போற இடத்துக்கு பொடிநடையாவே போயிடலாம்.

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே
`சிங்கிள்ஸ்-க்குத் தனி ஏரியா; சிங்கிள் சீட்!' - கலக்கும் மயிலாடுதுறை ஹோட்டல்

1.1. கேர்ள் டான்ஸ் பொம்மை, லேடீஸ் செப்பல்ஸ் எமோஜி, அப்புறம் லூஸ்ஹேர் தலையில தானே அடிச்சுக்கிறது மாதிரி எமோஜிகளையெல்லாம் நீக்கச் சொல்லி ஒருநாள் 'வாட்ஸ்அப் ஆஃப்லைன்' அடையாளப் போராட்டம் பண்ணணும். அதுக்கெல்லாம் முன்னாடி லாஸ்ட்சீன் டிஸ்பிளேவை ஆஃப் பண்ணிடணும். அப்போதான் ஊடால நாம ஆன்லைன் வந்துட்டுப் போறது யாருக்கும் தெரியாது. (ஹி... ஹி...)

1.11. பாத்திமாபாபு செய்தி வாசிச்சுக் கேட்ட 90-ஸ் கிட்ஸ் வாழ் மண் இது. சிங்கிள்சுக்கு அது ஒரு பொற்காலம். இப்போல்லாம் நிம்மதியா நியூஸ் பேப்பர்கூட வாசிச்சு உலக நடப்பு தெரிஞ்சிக்க முடியலை. ஏன் துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்களுக்கு அதிதி ராவ்தான் வேணுமா. 'அம்மா சொல்றேன் கேளுங்க'னு கே.ஆர்.விஜயா மாடல்ஸ் எல்லாம் ஆகாதா? இது தொடர்பா சிங்கிள்ஸ் சார்பில் சமூக வலைதளத்தில் சின்ன போராட்டம், ஹாஷ்டாக் உருவாக்கி நடத்தலாம்.

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே

1.111. ஓகே நாமதான் சிங்கிளா இருக்கோமே... நாலு பேரோட சேர்ந்து கல்யாணங்காட்சிகளுக்குப் போயி அந்தப் பலி ஆடுகளுக்கு ஆறுதல் சொல்லிட்டு வரலாம்னு பார்த்தா, இடம் முழுக்க 33 சதவிகிதமா நிரம்பி நிக்குது. சிங்கிள்ஸ் டேவுக்கு முன்னாடியோ பின்னாடியோதான் கல்யாணம் வைக்கணும்னு எல்லார்கிட்டயும் உள்ளங்கையில கிள்ளி, டிக் அடிச்சு சத்தியம் வாங்கணும்.

11.1.அன்னிக்கி பொது இடங்கள்ல ஜோடி ஜோடியா கூடுறதுக்கு முற்றிலும் தடை விதிக்கலாம். குறிப்பா, மெரினாவுல. இதன்மூலம் சென்னையின் சமீபத்திய காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்கலாம். எல்லாமே சிங்கிள்களின் வெறுப்புப் பெருமூச்சய்யா...

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே

11.11. ஓ.எம்.ஆர் ஓரங்களில் ஒருநாள் மட்டும் தீவிர ரோந்து மேற்கொள்ளணும். ஃபர்ஸ்ட் ஃப்ளோர், கிரவுண்டு ஃப்ளோர்னு அடுக்குமாடி பைக்கில் பட்டொளி வீசி துப்பட்டா பறக்கவிட்டுப் போற இந்தியாவின் தூண்கள்மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்து பைக்கை மீட்கலாம்.

11.111. முக்கிய நாள்களின்போது மதுக்கடைகளை மூடுவது மாதிரி, சிங்கிள்ஸ் டே அன்று பியூட்டி பார்லர்களை முழுநாளும் மூடிவிடச் சொல்லி மாண்புமிகு ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பிக்கலாம்.

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே
"எனக்கு பிரேக்அப் ஆகிடுச்சுங்க.. இப்போ நான் ஹாப்பி சிங்கிள்!" - 'சத்யா' ஆயிஷா

111.1. 'டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்' பத்தி அந்தந்த தந்தைமார்களிடம் வசமாகப் போட்டுக்கொடுத்து புண்ணிய சேவையாற்றலாம். அதை வருங்காலங்களில் சிங்கிள்ஸ் டேயின் முக்கியக் கடமையாகக் கொள்ளுதல் சிறப்பு.

111.11. பிப்ரவரி 13 முடிந்து பிப்ரவரி 15 தொடங்கும் வரை வெளியே செல்லவே மாட்டோம் என ஆண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூடி நின்று சூளுரைத்துக் கொள்ளலாம். வெளிய போறதுல பிரச்னை இல்ல. எல்லா கலர் சட்டைக்கும் ஒரு கொடூர அர்த்தம் சொல்றதைத்தான் சிங்கிள்சாலே பொறுத்துக்க முடியலை.

சிங்கிள்ஸ் டே
சிங்கிள்ஸ் டே

111.111. நிறைவாக... அடுத்த வருஷ செலிபிரேஷனுக்குக் காத்திருக்கேன்னு டயரி எழுதிவச்சு சுபம் போட்டுட்டு தூங்கப் போகலாம்.

ஹேப்பி சிங்கிள்ஸ் டே சிங்கங்களே!