Published:Updated:

ஆபாசப்படம் பார்க்கும் கணவன்; பாதிக்கப்படும் மனைவி... தீர்வு என்ன?- காமத்துக்கு மரியாதை | S 3 E 23

sex education

``இந்த மாதிரியான காட்சிகள் செல்போன் வழியாக உள்ளங்கைக்குள் வந்துவிட்டது என்றாலும், உங்களைப் போன்ற சிலரைத் தவிர அனைவரும் அந்தப் படங்களுக்கு அடிமையாவதில்லை.''

ஆபாசப்படம் பார்க்கும் கணவன்; பாதிக்கப்படும் மனைவி... தீர்வு என்ன?- காமத்துக்கு மரியாதை | S 3 E 23

``இந்த மாதிரியான காட்சிகள் செல்போன் வழியாக உள்ளங்கைக்குள் வந்துவிட்டது என்றாலும், உங்களைப் போன்ற சிலரைத் தவிர அனைவரும் அந்தப் படங்களுக்கு அடிமையாவதில்லை.''

Published:Updated:
sex education

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த படங்கள் தற்போது உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டன. அடுத்தவர் கண்களுக்கு பயந்து பயந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது எந்த இடத்தில் வேண்டுமானாலும் போர்னோகிராபி பார்க்க முடியும் என்கிற சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அளவுக்கு மீறினால் நல்ல விஷயங்களே நஞ்சாகி விடுகையில், போர்னோகிராபி  பார்ப்பதால் வருகிற தீமைகளைச் சொல்லவும் வேண்டுமோ? 

நம் வாசகர் ஒருவர், `நான் அடிக்கடி போர்னோகிராபி பார்ப்பேன். எனக்கு கல்யாணமாகிடுச்சு. எனக்கு செக்ஸ்ல விருப்பமே இல்ல. மனைவி மேல ஈடுபாடே வர மாட்டேங்குது. என் பிரச்னைக்கு தீர்வு இருக்கா?' என்று கேட்டிருந்தார். அவருடைய பிரச்னைக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. 

Dr. Narayana Reddy
Dr. Narayana Reddy

``செக்ஸில் விருப்பம் இல்லையென்று சொல்கிறீர்கள். ஆனால், போர்னோகிராபி பார்க்கிறீர்கள். செக்ஸில் விருப்பம் இருப்பதால்தானே பார்க்கிறீர்கள்? போர்னோ மேல் இருக்கிற ஈடுபாடு, மனைவி மேல் உங்களுக்கு இல்லையென்பதுதான் உங்களுடைய பிரச்னை. இதற்கான தீர்வு உங்கள் கையில்தான் இருக்கிறது. இனிமேல் நீங்கள் போர்னோ பார்க்காமல் இருப்பதுதான் உங்கள் பிரச்னைக்கான ஒரே தீர்வு. இதை நான் சுலபமாகச் சொல்லி விட்டேன். ஆனால், உங்கள் இடத்திலிருந்து பார்த்தால் அது வெகு கடினம். அதனால், சில வழிமுறைகளைச் சொல்லித் தருகிறேன். 

இந்த மாதிரியான காட்சிகள் செல்போன் வழியாக உள்ளங்கைக்குள் வந்துவிட்டன என்றாலும்,  உங்களைப் போன்ற சிலரைத் தவிர அனைவரும் அந்தப் படங்களுக்கு அடிமையாவதில்லை. யதேச்சையாகப் பார்த்தாலும், தேடிப் பார்த்தாலும், பார்த்து முடித்த பிறகு மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை முதலில் மனதில் கொள்ளுங்கள். அடுத்ததாக, போர்னோவுக்கு அடிமையாகும் அளவுக்கு நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், அந்தளவுக்கு உங்களுக்கு ஃப்ரீ டைம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். நாள் முழுக்க வேலையிருந்தால் இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமிருந்திருக்காது. 

sex education
sex education

வேலையில்லாத நேரங்களில் ஃப்ரீ டைமில்தான் பார்க்கிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள், அல்லது  ஹாபி,  அவுட்டோர்  ஆக்ட்டிவிட்டி என்று உங்கள் கவனத்தை திசைத்திருப்புங்கள். முக்கியமாக, இவை அத்தனையையும் முழுமனதாக முயற்சி செய்யுங்கள். முடியவில்லையென்றால், ஓர் உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுங்கள்.  மெள்ள மெள்ள உங்கள் கவனம் போர்னோ மீதிருந்து மனைவி பக்கம் திரும்பும். மனைவியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று முடிவெடுங்கள். உங்களுக்காக ஒரு துணை இருக்கையில், 'ஈடுபாடே வரல' என்பது நியாயமில்லை'' என்று முடித்தார் டாக்டர் நாராயண ரெட்டி.