Published:Updated:

ஏழ்மையைப் பயன்படுத்தி ஏமாற்றி கல்யாணம்; குடிகார கணவரை சகிக்கத்தான் வேண்டுமா? #PennDiary103

Penn Diary

கணவர் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். தினமும் மதியம், இரவு வழக்கமாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அதனாலேயே அவர் ஊருக்குள் இழுத்து வரும் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அவர் உறவில் இருக்கிறார்.

Published:Updated:

ஏழ்மையைப் பயன்படுத்தி ஏமாற்றி கல்யாணம்; குடிகார கணவரை சகிக்கத்தான் வேண்டுமா? #PennDiary103

கணவர் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். தினமும் மதியம், இரவு வழக்கமாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அதனாலேயே அவர் ஊருக்குள் இழுத்து வரும் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அவர் உறவில் இருக்கிறார்.

Penn Diary

நான் ஒரு கிராமத்துப் பெண். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அருகில் இருந்த நகரத்தில் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பம். ஆனாலும், அப்பாவிடமும் அம்மாவிடமும் போராடி என்னை கல்லூரியில் சேர்க்க வைத்திருந்தேன். நான் படிப்பை முடித்து வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டின் நிலைமை நிச்சயம் மாறும் என நான் நம்பிக்கை கொண்டிருந்ததுடன் என் பெற்றோருக்கும் அந்த நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

Young Girl I Representational Image
Young Girl I Representational Image

இந்நிலையில், தூரத்து உறவினர்கள் என்னைப் பெண் கேட்டு வந்தனர். அவர்கள் பணக்கார குடும்பம் என்பதால் என் பெற்றோர் மிகவும் தயங்கினர். நானும், படிப்பை முடிக்க வேண்டும் என்று என் பெற்றோரிடம் கெஞ்சினேன். ஆனால் மாப்பிள்ளை வீட்டினர், மிகவும் லாகவமாக பேசி என் பெற்றோரை சம்மதிக்க வைத்தனர். ‘எங்களுக்கு இருக்குற வசதிக்கு வசதியான வீட்டுல பொண்ணு பாக்கலாம்தான். ஆனா எங்களுக்கு குணம்தான் வேணும். அதுதான் உங்க குடும்பத்தை, உங்க பொண்ணை தேடி வந்திருக்கோம்’, ‘உங்க பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறமும் படிக்கலாம், நாங்களோ எங்க பையனோ எந்தத் தடையும் சொல்ல மாட்டோம்’ என்றெல்லாம் இனிக்க இனிக்கப் பேசியதில் என் பெற்றோரும் நம்பிவிட்டனர். திருமணமும் முடிந்தது.

திருமணத்துக்குப் பிறகுதான் உண்மை தெரியவந்தது. என் கணவர் ஒரு குடிகாரர். பெண் கேட்டு வந்தபோது அவர் அப்பா, அம்மா கூறியதுபோல அவர் சுயமாக தொழில் எதுவும் செய்யவில்லை. வேலைக்கும் செல்லாமல், தொழில் எதுவும் பார்க்காமல் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார். தினமும் மதியம், இரவு வழக்கமாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர். அதனாலேயே அவர் ஊருக்குள் இழுத்து வரும் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அவர் உறவில் இருக்கிறார். இப்படி எல்லா வகையிலும் உருப்படாமல் இருந்த அவரை, எந்த வகையிலும் திருத்த வழியற்று இருந்துள்ளனர் அவர் பெற்றோர். அப்போதுதான், ‘கல்யாணம் பண்ணினா சரியாகிடுவான்’ என்று காலம் காலமாகப் பெண்களின் வாழ்க்கை பாழாக்கப்படும் அதே விதி, சதி என் வாழ்க்கையிலும் நடத்தப்பட்டிருக்கிறது. என்னை பெண் கேட்டு வந்துள்ளனர்.

Drunkard I Representational image
Drunkard I Representational image

ஏழைப் பெண் என்றால், நாளை உண்மை தெரிய வந்தாலும் எதிர்த்துக் கேட்காமல் வாழப் பழகிவிடுவாள், அவள் பெற்றோரையும் சமாளித்துவிடலாம் என்ற கணக்கில்தான், என்னை அவர்கள் பெண் கேட்டு வந்துள்ளனர். நான் இந்த உண்மையை எல்லாம் என் பெற்றோரிடம் கண்ணீருடன் போய் சொன்னபோது, என் புகுந்த வீட்டினரின் கணக்கு போலவே அவர்களுக்கு அழுவதை தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் மகளின் வாழ்க்கையை பாழாக்கிய குற்ற உணர்வில் தினமும் கரைந்துவருகிறார்கள். அவர்களை தேற்ற வேறு வழி தெரியாத நான், ‘கவலைப்படாதீங்க, அவர் சரியாகிடுவார்’ என்று அவர்களுக்கு பொய் சாமாதானம் கூறி வருகிறேன்.

திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகின்றன. குடிகார கணவர், மெரைட்டல் ரேப், கணவருக்கு வேறு பெண்ணுடன் உறவு, பணக்கார புகுந்த வீட்டில் அடிமை மருமகளாக நடத்தப்படும் ஏழைப்பெண் என என் வாழ்க்கை இந்த எட்டு மாதங்களில் சூன்யமாகிவிட்டது.

Domestic Violence
Domestic Violence

கணவரை திருத்தும் முயற்சியிலும் அவரிடம் பேசிப் பார்த்துவிட்டேன். ‘நான் அப்படித்தான் இருப்பேன். எனக்கு பொண்டாட்டினு ஒருத்தி வேணும்னு உன்னை கட்டியிருக்கோம் அவ்ளோதான். நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல’ என்று சொல்லும் அவருக்கு நான் ஒரு பொருட்டே இல்லை.

இப்போது என்ன செய்ய வேண்டும் நான்?