Published:Updated:

வீட்டில் புலி, வெளியில் எலி; கணவரின் நாடகத்தால் வில்லியாகும் நான்; என்ன செய்வது? #PennDiary - 47

Penn Diary
News
Penn Diary

எங்கள் இருவரது வீட்டிலும், ஏதோ இவையெல்லாம் என் இஷ்டப்படி நடப்பதாகவும், அவரை வீட்டில் நான் டாமினேட் செய்வதாகவுமே நம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்... வாயாடி என்று நான் வாங்கி வைத்திருக்கும் பெயர்.

எனக்குப் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம். திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வீட்டில் ஓர் ஆதிக்கவாதியாகவும், ஆணாதிக்கவாதியாகவும், ஆனால் வெளியில் தன்னை மனைவிக்கு அடங்கிப்போகும் கணவராகவும் காட்டிக்கொள்ளும் என் கணவரின் குணம்தான் எனக்கிருக்கும் பிரச்னை.

Marriage
Marriage
Photo: Pixabay

நான் இயல்பிலேயே மிகவும் தைரியமான பெண். யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்காமல் என் மனதில் படுவதை பேசிவிடும் `பட் படார்' டைப். திருமணத்தின்போது, `மாப்பிள்ளை வாய் பேசாதவர், நீ வாயாடி. ஜாடிக்கேத்த மூடிதான். வீட்டுல உன் ராஜ்ஜியமாதான் இருக்கப் போகுது' என்றெல்லாம் எங்கள் இரு வீட்டிலுமே கேலி செய்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால் திருமணத்துக்குப் பின்னர், என் கணவர் அமைதியாக இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திலும் தன் முடிவே இறுதி முடிவு என்று கொண்டு வரும் கேரக்டர் என்பது எனக்குப் புரிந்தது. ஒரு கணவராக, குடும்பத் தலைவராக தன் ஆணாதிக்க முகத்தையும் அவர் அழுத்தமாக நிறுவினார். டூர் போவது முதல் வீட்டில் பொருள்கள் வாங்குவது வரை எல்லாமே அவருடைய முடிவாகவும், தேர்வாகவும்தான் இருக்கும். ஆனால், எங்கள் இருவரது வீட்டிலும், ஏதோ இவையெல்லாம் என் இஷ்டப்படி நடப்பதாகவும், அவரை வீட்டில் நான் டாமினேட் செய்வதாகவுமே நம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்... வாயாடி என்று நான் வாங்கி வைத்திருக்கும் பெயர்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

நான் வாய் பேசுவேன்தான். ஆனால் வேஷம் போடமாட்டேன். என் கணவர் தான் அமைதியானவர் என்று வேஷம் போட்டுக்கொண்டு, என்னை அடங்காத பொண்டாட்டி போலவும், தன்னை பொண்டாட்டிதாசன் போலவும் நடித்துக்கொண்டிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. என் வீட்டிலும் அவர் வீட்டிலும், ` நம்புங்க... எங்க வீட்டுல கத்துறதுதான் நான், காரியம் எல்லாம் அவர் இஷ்டப்படிதான் நடக்குது' என்றால், 'உன்னைப் பத்திதான் எல்லாருக்குமே தெரியுமே, அவரு பாவம்...' என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சரி இதெல்லாம் ஒரு பிரச்னையா...' என்பவர்களுக்கு, இந்தப் பிரச்னையின் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டும். அவர் வீட்டில் அவர் பெற்றோர், உடன் பிறந்தவர்களுடன் பிரச்னை ஏற்படும்போது, அவர்களுடன் பேச்சை தவிர்ப்பதிலிருந்து, பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பது வரை கடுமையாக நடந்துகொள்வார். ஆனால் அவை அனைத்தையும் நான் சொல்லித்தான் செய்வதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார். விளைவு... அவர்களிடம் என்னை வில்லி ஆக்குவிடுகிறார்.

என் புகுந்த வீட்டினரும், `அவன் பாவம் என்ன பண்ணுவான்... அவன் பொண்டாட்டிதான் அவனை அப்படியெல்லாம் சொல்ல வைக்கிறா' என்கிறார்கள். `இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... எல்லாம் உங்க பையனோட முடிவுதான்' என்று நானே நேரடியாக அவர்களிடம் சொன்னாலும் அவர்கள் நம்புவதில்லை. இப்போது புரிகிறதா என் பிரச்னை?

எப்படிக் களைவது என் கணவரின் வேடத்தை?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.