Published:Updated:

ஐசோலேஷன்... அறிமுகமில்லாதவர்களுடன் பயணம்..! இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்

இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம் ( representational image )

கூட இருந்த ஃபாரினர்ஸ் டிப்ரெஷன், அழுகைன்னு இருந்ததால, அவங்களோட பெருசா பேசிப் பழகி டென்ஷனைக் குறைச்சுக்கவும் அவளால முடியல. அதுல ஒருத்தங்க அவங்க நாட்ல பெரிய பணக்காரங்களாம். இங்கே கை நீட்டி சாப்பாடு வாங்க வேண்டி வந்தப்போ அழவே ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அந்த இளம்பெண் தன் வீட்டில், தன் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளருகில் அவளுடைய அம்மாவும் தங்கையும்... காலையில் கண் விழித்து எழுந்த அந்த இளம்பெண் தன் அம்மாவிடமும் தங்கையிடமும் ‘நான் இப்போ நம்ம வீட்லதான் இருக்கேனா... நான் ஐசோலேஷன்ல இருந்து வந்துட்டேனா’ என்கிறார். இந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததுபோல அந்த இளம் பெண்ணின் அம்மாவும் தங்கையும் ‘நீ வீட்டுக்கு வந்துட்டம்மா’, ‘நீ நம்ம வீட்லதான் இருக்கேக்கா’ என்று தேற்ற ஆரம்பிக்கிறார்கள். கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தினர் எதிர்கொண்டிருக்கிற பிரச்னை இது.

இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
representational image

கொரோனா, அதன் தீவிரத்துக்குச் செல்வதற்கு முன்னால் அண்டை மாநிலத்துக்கு வேலை நிமித்தமாகச் சென்றிருந்த அந்த இளம்பெண், ஊரடங்கு நேரத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வர முடியாமல் போய்விட்டது. கூடவே ஐசோலேஷனிலும் வைக்கப்பட்டிருக்கிறார். சுற்றிலும் அறிமுகமில்லாதவர்கள், வாழ்க்கையில் இதுவரைக்கும் சந்திக்காத பிரச்னை, எப்போது வீட்டுக்குத் திரும்பிப் போவோம் என்பதே தெரியாது என்று அடுக்கடுக்காக குழப்பங்கள்... நம்பிக்கையின்மையின் எல்லைக்கே போய்விட்ட அந்த இளம்பெண், ‘இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான்’ என்ற மன அழுத்தத்தில் விழுந்திருக்கிறார். அந்த நிலையில்தான் அவருடைய குடும்பம் அவரை படாதபட்டு மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறது. ஆனால், இன்னமும் தன் வீட்டுக்கு வந்துவிட்டதை நம்பியும் நம்பாமலும் ‘நான் இப்போ நம்ம வீட்லதான் இருக்கேனா’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் பேசுகிற மனநிலையில் இல்லாததால், அவருடைய குடும்பத்தாரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தோம். அவருடைய தங்கை நம்மிடம் நடந்தவற்றை விவரித்தார்.

‘’அக்கா அவங்க வேலை காரணமா மத்த மாநிலங்களுக்குப் போயிட்டு வர்றது வழக்கம்தான். போன மார்ச் மாசமும் அப்படித்தான் போனாங்க. அந்த நேரத்துல கொரோனா வைரஸ் பிரச்னை இவ்வளவு தீவிரமா பரவும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. மார்ச் 22 ’மக்கள் ஊரடங்கு’ அறிவிச்சப்போகூட அக்கா பக்கத்து ஸ்டேட்லதான் இருந்தாங்க. ஒரு நாள் கழிச்சு இந்தியா முழுக்க லாக் டெளன். பப்ளிக் டிரான்ஸ்போர்ட் எல்லாம் முடங்கிடுச்சு. எல்லா மாநிலங்களும் அவங்களோட எல்லைகளை குளோஸ் பண்ணிட்டாங்க. அக்காவோட ஃபிளைட் டிக்கெட்டும் கேன்சலாயிடுச்சு. நாங்க தமிழ்நாட்ல, அக்கா மட்டும் பக்கத்து ஸ்டேட்ல. ப்பா... அந்த நாள்களை இன்னிக்கு நினைச்சாலும் பயமா இருக்கு.

இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
representational image

முதல் ஒரு வாரம் என்ன பண்றதுன்னே தெரியலை. அப்புறம், அக்காவை இங்க வரவழைக்க, முதல்ல காவல்துறை உதவியைக் கேட்டோம். ’சாப்பாடு அரேன்ஜ் பண்றோம்’னு பொறுமையா சமாதானம் சொன்னதைத் தவிர, வேற எந்த உதவியும் அவங்களால செய்ய முடியலை. கலெக்டர்ஸ்கிட்டேயும் பேசினேன். ‘அங்க இருக்கிறதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பு’ன்னு எங்க மாவட்ட கலெக்டர் சொல்ல, அக்கா இருக்கிற இடத்தோட மாவட்ட கலெக்டர் ’தமிழ்நாட்டுக்குள்ள உங்களை விடுவாங்கன்னா நாங்களும் அனுப்பி வைச்சிடுறோம்’னு சொல்லிட்டாங்க.

அடுத்து, மத்த மாநிலத்துல இருக்கிற நம்ம சொந்தக்காரங்களை வரவழைப்பதற்கான ஆன்லைன் பாஸ் வாங்கி அக்காவைக் கூப்பிட்டுட்டு வர முயற்சி செய்தேன். அதுல ஆறேழு தடவை ’சரியான காரணம் குறிப்பிடல’ன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஒருதடவை போலீஸ்காரங்க ’எங்க ஸ்டேட்டோட பார்டர்ல உங்க அக்காவை அழைச்சிட்டு வந்து பத்திரமா சேர்த்துடுறோம். ஆனா, அங்க இருந்து உங்க ஊருக்கு அழைச்சிட்டுப் போறதுக்கான பாஸ் கிடைக்கிறவரைக்கும் இங்க இருந்து அவங்கள அழைச்சிட்டு வர முடியாது’ன்னு சொல்லிட்டாங்க.

இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
representational image

அடுத்ததா, ரிப்பன் பில்டிங்ல ட்ரை பண்ணச் சொன்னாங்க. போனேன். நிறைய பேருக்கு பாஸ் கொடுத்தாங்க. என்னோட முறை வர்றப்போ, ’எந்த மாநிலத்துல இருந்து உங்க அக்கா வரணும்’னு கேட்டாங்க. சொன்னவுடனே ‘அந்த மாநிலத்துக்கிட்ட இருந்து கிளியரன்ஸ் வாங்குங்க’ன்னு சொல்லிட்டாங்க. அவங்க தரலைன்னு சொன்னதுக்கு, ’நாங்க தர்றோமில்லையா, அப்போ அவங்களாலேயும் கொடுக்க முடியும்தானே’ன்னு கேட்டாங்க. கடைசியில ரெண்டு மாநிலத்துலேயும் பாஸ் கிடைக்காததால ஊரடங்கு முடியுற ஏப்ரல் 14 வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம்.

இதுக்கு நடுவுல அரசியல்வாதிங்க வழியாகவும் அக்காவைக் கூட்டிட்டு வர்றதுக்கு ட்ரை பண்ணோம். அப்போதான் அந்த ஸ்டேட்ல இருந்து வர்ற வழியில எங்கேயாவது தடுத்து நிறுத்தி எங்கியாவது க்வாரன்டீன் முகாம்ல போட்டுட்டாங்கன்னா என்ன பண்றது. அதனால பாஸ் கிடைக்கிற வரைக்கும் அக்கா அங்கேயே இருக்கிறதுதான் பாதுகாப்புன்னு தெரிஞ்சது. ஸோ, மறுபடியும் ஒரு வாரம் எதுவும் செய்ய முடியாம காத்திட்டிருந்தோம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
விகடன்

வேற மாநிலத்துல இருந்தாலும் உங்க அக்கா பத்திரமாதானே இருக்காங்க. சாப்பாடும் பிரச்னையில்லை. அப்புறமென்ன, லாக் டெளன் முடிஞ்சவுடனே உங்க அக்காவை வரவழைச்சி இருக்கலாமேன்னு உங்களுக்குத் தோணலாம். ஆனா, இந்த மூணு வாரத்துல அக்கா டிப்ரெஷனுக்குள்ளே போயிட்டா. கூட இருந்த ஃபாரினர்ஸ் டிப்ரெஷன், அழுகைன்னு இருந்ததால, அவங்களோட பெருசா பேசிப் பழகி டென்ஷனைக் குறைச்சுக்கவும் அவளால முடியல. அதுல ஒருத்தங்க அவங்க நாட்ல பெரிய பணக்காரங்களாம். இங்கே கை நீட்டி சாப்பாடு வாங்க வேண்டி வந்தப்போ அழவே ஆரம்பிச்சிட்டாங்களாம். அக்காவும் டெய்லி என்கிட்ட போன்ல அழுவா. ‘நான் இங்கேயே இருந்திடுவனா, இங்கேயே செத்துப்போயிடுவனா’ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டா. அவளுக்கு தான் திரும்ப வீட்டுக்குப் போகவே முடியாதுங்கிற பயம் வந்துடுச்சு. அவளை தினமும் சமாதானம் செஞ்சுகிட்டே, மறுபடியும் பாஸ் வாங்க முயற்சி செஞ்சேன்.

பாஸ் வாங்கணும்னா கார் நம்பர், வண்டி ஓட்டற டிரைவர் பத்தின தகவல்கள் அனுப்பினா அக்காவை அழைச்சிட்டு வந்துடலாம்னு சொன்னாங்க. ஆனா, இந்த நேரம் பார்த்து எங்க சொந்த வண்டி ரிப்பேர். வேற வழி தெரியாம என் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல ’வேற மாநிலத்துல இருக்கிறவங்கள எப்படி இங்கே கூட்டிட்டு வர்றது’ன்னு கேட்டேன். அதைப் பார்த்த ஒருத்தர், என்கிட்ட பேசினார். அவருக்குத் தெரிஞ்ச என்.ஜி.ஓ வழியா டிரைவர் ஏற்பாடு பண்றேன்னு சொன்னார். இதுக்கு நடுவுல ஒரு டிராவல்ஸ்ல அக்காவை அங்கயிருந்து கூட்டிட்டு வர்றதுக்கு ஒத்துக்கிட்டாங்க. ஆனா, டிரைவர் யாரும் ஒத்துக்கலை. ஏன்னா, ஒரு டிரிப் அடிச்சா அவங்களும் க்வாரடீன்ல இருக்கணுமே. கடைசியா ஒருத்தர் ’என் பொண்ணு வயசுல இருக்கா’ன்னு சொல்லிட்டு கார் நம்பர், லைசென்ஸ் நம்பர் எல்லாத்தையும் அனுப்பி வெச்சாரு. இதையெல்லாம் வெச்சு முயற்சி செஞ்சும் பாஸ் ரிஜெக்ட் ஆயிடுச்சு.

இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
இளம்பெண்ணின் லாக் டெளன் அனுபவம்
representational image

அப்புறம் ஒரு மாவட்ட கலெக்டர்கிட்ட பேசினேன். அவரும் ’உங்க அக்கா லைஃப்ல ரிஸ்க் எடுக்க வேண்டாம்’னு சொல்லிட்டாரு. ’அவ ரொம்ப டிப்ரெஷன்ல இருக்கா’ன்னு சொன்னப்போ, ’நாங்க உயிரைக் காப்பாத்துறதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும்’னு சொல்லிட்டாரு.

லாக்டௌனில் குடிநோயாளிகளை எப்படிக் கையாள்வது? - குடும்பத்தினருக்கு நிபுணர் கைடன்ஸ்

மறுபடியும் ஏப்ரல் 12-ம் தேதி ஆன்லைன்ல பாஸ் அப்ளை பண்ணினேன். ரெண்டு நாள் கழிச்சு பாஸ் கிடைச்சுது. விஷயத்தை அக்காகிட்ட சொன்னப்போ நம்பவே இல்லை. ’நான் இங்கேயேதான் இருக்கணும். அது என் தலையெழுத்து. விடு’ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா. அந்தளவுக்கு நம்பிக்கையில்லாம ஆயிட்டா. போலீஸ்காரங்க ’உங்க அக்காவைக் கூப்பிட வர்ற டிரைவர் நம்பிக்கையானவரா’ன்னு கேட்டாங்க. ’உங்க அக்காவை அவர்கூட தனியா அனுப்பலாமா’ன்னு கேட்டாங்க. உண்மையைச் சொல்லணும்னா நாங்க யாருமே அவரைப் பார்த்ததில்லை. அந்த என்.ஜி.ஓ வழியா வந்தவர் அவர். மரியாதையா பேசினாரு. அந்த ஒரே நம்பிக்கையிலதான் காத்திருந்தோம்.

கொரோனா
கொரோனா
மனநிறைவான நேரமே மனச்சோர்வுக்கு மருந்து... க்வாரன்டீன் நாள்களை சுறுசுறுப்பாக்கும் டிப்ஸ்! #StayHome

அக்கா தங்கியிருந்த இடத்துல இருந்து நம்ம மாநில பார்டர் வரைக்கும் அவர் கூட்டிட்டு வந்துவிட, அங்கிருந்து நாங்க அரேன்ஜ் பண்ண இன்னொரு வண்டியில ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தா. மொத்தம் 12 மணி நேரப் பயணம். பாத்ரூம் போகணும்னு சொல்லக்கூட கூச்சப்பட்டுட்டு அமைதியா வந்திருக்கா. நான் அவ வர்ற காரை டிராக் பண்ணிட்டே இருந்தேன். அப்போ அவகிட்ட பேசுறப்போதான் சொன்னா. அப்புறம் நான் டிரைவருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி, மை காட் ... அவ வீட்டுக்கு வந்து சேர்ந்தப்புறம்தான் எங்களுக்கு உயிரே வந்துச்சு. இப்போ நல்லா இருக்கா. ஆனா, அந்த அதிர்ச்சியில இருந்து அவ இன்னமும் வெளியே வரலை. தூங்கி எழுந்தா ‘நான் நம்ம வீட்லதான் இருக்கேனா’, ‘நேத்துதானே நான் அங்க இருந்தேன். அதுக்குள்ள இங்க வந்துட்டேனா’ன்னு கேட்கிறா. இன்னமும் அவ நிகழ்காலத்துக்கு வர முடியாம தவிச்சிட்டிருக்கா. நாங்க சமாதானம் சொல்லிக்கிட்டே இருக்கோம்’’ என்கிற அந்தச் சகோதரியின் குரலில், அவரின் அக்காவின் மன அழுத்தம் பிரதிபலிக்கிறது.

இதுவும் கடந்து போகும். மீண்டு வாருங்கள் சகோதரி!

அடுத்த கட்டுரைக்கு