Published:Updated:

`என் குரலை ஒடுக்காத புதிய உலகம்...' பள்ளியில் `கெத்து' காட்டிய ஆராத்யா பச்சன்!

ஆராத்யா

அந்த உலகத்தில் நான் மிகவும் பாதுகாப்பாகவும் சிரிப்போடும், மரியாதையோடும் இருப்பேன்.

`என் குரலை ஒடுக்காத புதிய உலகம்...' பள்ளியில் `கெத்து' காட்டிய ஆராத்யா பச்சன்!

அந்த உலகத்தில் நான் மிகவும் பாதுகாப்பாகவும் சிரிப்போடும், மரியாதையோடும் இருப்பேன்.

Published:Updated:
ஆராத்யா

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சனுக்கு தற்போது 8 வயது. அண்மையில் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் மேடையில் புடவையில் தோன்றி, ஓர் ஆற்றல்மிகு உரையை ஆற்றியிருக்கிறார் ஆராத்யா.

புடவையில் ஆராத்யா
புடவையில் ஆராத்யா

அந்த உரையில் தான் ஒரு புதிய உலகில் கண் விழிக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், "நான் தான் கனவு. புதிய உலகில் புதிய காலத்தில் விழித்தெழ வைக்கும் கனவு. அந்த உலகத்தில் நான் மிகவும் பாதுகாப்பாகவும் சிரிப்போடும், மரியாதையோடும் இருப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த உலகத்தில் என் குரல் ஆணவத்தால் ஒடுக்கப்படாது. உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஞானத்தோடு என் குரல் அங்கே ஒலிக்கும். அந்த உலகத்தில் மனிநேயமிக்க வாழ்க்கை என்ற புத்தகத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம்" என்றெல்லாம் பேசியிருக்கிறார் ஆராத்யா.

Bachchan family
Bachchan family

அந்தக் குழந்தையின் பேச்சு அங்கிருந்தவர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருபக்கம் ஆராத்யா மேடையில் தோன்றி உரையாற்ற, மற்றொரு பக்கம் ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் பூரிப்போடு மகளின் பேச்சுத்திறனை ரசித்தும் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் சமூகவதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

ஆராத்யா
ஆராத்யா

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism