Published:Updated:

`அவர்களைப் பார்த்துதான் திருமணத்தின் மீது விருப்பம் வந்திருக்கிறது!' - கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் ( www.instagram.com/team_kangana_ranaut )

ஹிருத்திக் ரோஷன் உடனான காதல் முறிவுக்குப் பிறகு காதல், திருமணம் குறித்தான பேச்சுகளைத் தவிர்த்து வந்த கங்கனா, சமீபத்தில் தன் திருமணம் குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கங்கனா ரனாவத் என்றாலே போல்டு அண்ட் பியூட்டிஃபுல்தான். 'ஃபேஷன்', 'குயின்', 'மணிகர்ணிகா' என்று ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிப்பார், அரசியல் பேசுவார். சக நடிகையான தீபிகா படுகோனை, 'சபாக் படத்தில் நடித்ததற்கு நன்றி. என் சகோதரியும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்தான். அவள் வேதனையை அப்படியே திரையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்' என்று பாராட்டுவார். இப்படி, மனதிலிருப்பதை வெளிக்காட்டத் தயங்காதவர்.

Kangana Ranaut
Kangana Ranaut
www.instagram.com/team_kangana_ranaut

ஹிருத்திக் ரோஷன் உடனான காதல் முறிவுக்குப் பிறகு காதல், திருமணம் குறித்தான பேச்சுகளைத் தவிர்த்து வந்த கங்கனா, சமீபத்தில் தன் திருமணம் குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

''எனக்கும் என் எதிர்காலக் கணவருக்கும் கருத்து ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நபரைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவால் என்பதும் எனக்குத் தெரியும். அவர் என்னைப் போன்ற ஆளுமைப் பண்புகளுடன் இருக்க வேண்டும். என்னைவிட புத்திசாலியாக இருக்க வேண்டும். அழகிலும் திறமையிலும்கூட அவர் என்னை விஞ்சுபவராகத்தான் இருக்க வேண்டும்'' என்றவர், தனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை வந்ததன் பின்னணியையும் சொல்லியிருக்கிறார்.

கங்கனாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் 'பங்கா (Panga)'. கபடி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இது. படத்தை இயக்குபவர் அஷ்வினி ஐயர் திவாரி. இவரும் இவருடைய கணவர் நிதேஷ் திவாரியும்தான் கங்கனாவின் மனமாற்றத்துக்குக் காரணமானவர்கள்.

Ashwiny iyer and Nitesh Tiwari
Ashwiny iyer and Nitesh Tiwari
instagram.com/niteshtiwari22

''அஷ்வினியும் நிதேஷூம் கணவன், மனைவி உறவைத்தாண்டி மிகுந்த நட்புடன் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமிடையே இருக்கிற அன்பைப் பார்த்த பிறகு, திருமணம் குறித்த என் எண்ணங்கள் மாறிவிட்டன. நிதேஷ் தன் மனைவியின் அத்தனை செயல்பாடுகளையும் முழு மனதுடன் ஆதரிக்கிறார். இதுபோன்ற இயல்புகளைக் கொண்ட ஓர் ஆணை என் வாழ்வில் சந்தித்தால், நானும் திருமணம் செய்துகொள்வேன்'' என்றிருக்கிறார்.

உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் `தலைவி'!

அடுத்த கட்டுரைக்கு