Published:Updated:

``மகனே பேரனாகப் பிறந்து வந்துட்டார்!''- நடிகர் சேதுராமனின் அப்பா உருக்கம்

நடிகர் சேதுராமன் - அவருடைய அப்பா விஸ்வநாதன்

" 'மனசுக்குப் பிடிச்ச ஒரு வேலையை ட்ரை பண்ணிப் பார்க்கிறேனே...’னு சொல்லிட்டு சினிமாவுல நடிக்க வந்தார். சேது மல்ட்டி டேலன்ட்டட் என்பதால, `நல்லா பண்ணுங்க தம்பி’னு சொல்லிட்டேன்."

``மகனே பேரனாகப் பிறந்து வந்துட்டார்!''- நடிகர் சேதுராமனின் அப்பா உருக்கம்

" 'மனசுக்குப் பிடிச்ச ஒரு வேலையை ட்ரை பண்ணிப் பார்க்கிறேனே...’னு சொல்லிட்டு சினிமாவுல நடிக்க வந்தார். சேது மல்ட்டி டேலன்ட்டட் என்பதால, `நல்லா பண்ணுங்க தம்பி’னு சொல்லிட்டேன்."

Published:Updated:
நடிகர் சேதுராமன் - அவருடைய அப்பா விஸ்வநாதன்

சில மாதங்களுக்கு முன் மறைந்த நடிகர், டாக்டர் சேதுராமனுக்கு சில தினங்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. மகன் சேதுராமன் பற்றியும் பிறந்திருக்கிற பேரன் பற்றியும், சேதுராமனின் தந்தையும் மருத்துவருமான விஸ்வநாதனிடம் பேசினோம். மகன் மீது உயிரையே வைத்திருந்த தான், பேரனால் மீண்டு வருவதைப்பற்றி உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார்.

சேதுராமன் அப்பா டாக்டர் விஸ்வநாதன்
சேதுராமன் அப்பா டாக்டர் விஸ்வநாதன்

"சேது ஒரு சுயம்பு. 36 வயசுலேயே அவர் உலகத்தைவிட்டு மறைஞ்சுட்டாலும், ஓர் அப்பாவா நான் அவருக்கு குருவா இருந்ததைப்போலவே, அவரும் எனக்கு குருவா இருந்திருக்கார். `எல்லா விஷயங்கள்லேயும் உண்மையா இருக்கணும்ப்பா’ என்பார். உண்மையில்லைன்னா, எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும் வேஸ்ட்ங்கிறதுதான் சேதுவோட பாலிசி. `நியாயமில்லாம சம்பாதிச்சா தூக்கம்கூட வராதுப்பா’னு சொல்வார். அதனாலதான், சேதுவை நான் அவர், இவர்னு மரியாதையா பேசுவேன்’’ என்றவர் தொடர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’’எங்க குடும்பத்துல எல்லாருமே மருத்துவர்கள்தான். ஆனா, சேது தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவர். டெர்மெட்டாலஜி படிச்சார். ஐந்து வருடங்களுக்கு முன் அவருடைய சொந்த முயற்சியால ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். அதற்கு மூன்று கிளைகளையும் திறந்தார். தற்போது அந்த மருத்துவமனையை நானும் என் மருமகளும்தான் பார்த்துக்கிட்டிருக்கோம்.

டாக்டர் விஸ்வநாதன்
டாக்டர் விஸ்வநாதன்

பணத்தை பெரிய விஷயமாக நினைக்காதவர் சேது. `நமக்கு வீடு இருக்கு, கார் இருக்கு, இன்னும் என்ன வேணும்ப்பா? மனசுக்குப் பிடிச்ச ஒரு வேலையை ட்ரை பண்ணிப் பார்க்கிறேனே’னு சொல்லிட்டு சினிமாவில் நடிச்சார். சேது மல்ட்டி டேலன்ட்டட் என்பதால, `நல்லா பண்ணுங்க தம்பி’னு சொல்லிட்டேன். நடிச்சார். நல்ல பேரும் வாங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் சித்தி, சேதுவை யோகின்னு சொல்வாங்க. சேதுவோட சில ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்க்கிறப்போ அது உண்மைதானோன்னு எனக்கும் தோணியிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ‘ஒருவேளை இன்னும் ரெண்டு வருஷங்கள் நான் உயிரோடு இருந்தா...’னு ஒரு போஸ்ட் போட்டிருக்கார். இதை ஏன் சொல்றேன்னா, சேது அந்தளவுக்கு வாழ்க்கையை பயமில்லாம, எதார்த்தமா வாழ்ந்தார்.

இன்னொரு போஸ்ட்ல, ‘மை ஃபாதர் இஸ் மை ஹீரோ’னு எழுதியிருந்தார். உண்மையில் அவர்தான் என்னுடைய ஹீரோ. அவர் நடிக்க ஆரம்பிச்சப்போ, ‘அப்பா என்னோட ஹாஸ்பிட்டல்களை நீங்க பார்த்துக்கோங்க. அதுக்காக காஸ்மெட்டாலஜி பத்தின கோர்ஸை நீங்க படிக்கணும்'னு சொன்னார். என் பிள்ளை சொல்பேச்சைக் கேட்டு நானும் படிச்சேன். தகப்பனுக்குப் பாடம் சொல்ற பிள்ளைகள் கிடைக்கிறது அபூர்வம். தான் வாழ்ந்த கொஞ்ச காலத்துலேயே அந்த சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்த பிள்ளை அவர்’’ என்பவரின் குரலில் கண்ணீரின் ஈரம் தெறிக்கிறது.

என் மகனிடம் செலுத்த முடியாம மிச்சம் வெச்சிட்டிருக்க அத்தனை அன்பையும் என் பேரன் மேல காட்டக் காத்திட்டிருக்கேன்.
நடிகர் சேதுராமனின் அப்பா விஸ்வாதன்

"சேது எங்களை விட்டுட்டுப் போனப்போ, அவரோட ஃபிரெண்ட்ஸ் பல பேரு, `அப்பா, எங்களை உங்க சேதுவா நினைச்சுக்கோங்க’னு அழுதுட்டே சொன்னாங்க. அந்தளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதிச்சு வெச்சிருந்தார்.

'உங்களுக்குப் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க'னு சொன்னேன். ஆனா, ’நீங்க எந்தப் பொண்ணை எனக்கு மனைவியா செலக்ட் பண்ணினாலும் சரி’ன்னு சொல்லிட்டார். நாங்க பார்த்த பொண்ணுங்கள்ல அவருக்குப் பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிவெச்சோம். மகனை மாதிரியே ரொம்ப அருமையான மருமகளும் கிடைச்சாங்க. பேத்தி பிறந்தா!

சேதுராமன்
சேதுராமன்

சேது எங்களை விட்டுப்போனப்போ, மருமகள் நாலு மாசம் கர்ப்பமாக இருந்தாங்க. டெலிவரி தேதிக்கு மூணு வாரம் முன்னாடியே ஆகஸ்ட் 3-ம் தேதி பேரன் பிறந்துட்டான். நார்மல் டெலிவரி. தாய்-சேய் ரெண்டு பேருமே ஆரோக்கியமா இருக்காங்க. குழந்தை மூணு வாரம் முன்னாடியே பிறந்ததால மருத்துவமனையிலேயே கூடுதலா சில நாள்கள் வெச்சு எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.

பேரன் பிறந்த செய்தி வெளியே தெரிஞ்சதும் கடந்த ரெண்டு நாளா, ‘சின்ன சேது நல்லா இருக்கானா’னு ஆயிரக்கணக்கான போன் கால் விசாரிப்புகள். சேதுவோட சின்ன பாட்டிதான் எங்க குடும்பத்தோட சீனியர் மெம்பர். எனக்குப் பேரன் பிறந்ததும் அவங்க சொன்ன முதல் வார்த்தை, ’சேது மறுபடியும் பிறந்து வந்துட்டான். அவன் நம்மளைவிட்டு எங்கேயும் போக மாட்டான்’னு சொல்லி கண்ணீர் விட்டாங்க. என் மகனிடம் செலுத்த முடியாம மிச்சம் வெச்சிருக்குற அத்தனை அன்பையும் என் பேரன் மேல காட்டக் காத்திட்டிருக்கேன்’’ என்பவரின் குரல், பேரன் வருகையால் மகனின் இழப்பிலிருந்து மெள்ள மெள்ள மீண்டுகொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism