Published:Updated:

`நீங்கள் கொஞ்சுவதை ரொம்பவே மிஸ் செய்கிறேன்!'-சோனம் கபூரின் லவ்வபிள் இன்ஸ்டா போஸ்ட்

Sonam kapoor and her family
Sonam kapoor and her family ( www.instagram.com/sonamkapoor )

``என்னையும் ஆனந்தையும் உங்கள் அன்பாலும் சுவையான உணவுகளாலும் பராமரிப்பதற்கு நன்றி. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம்.''

நடிகை சோனம் கபூரையும் அவரின் மாமியாரையும் முதன்முதலாகப் பார்ப்பவர்கள், அம்மா - மகள் என்றே நினைப்பார்கள். அந்தளவுக்கு இரண்டு பேரும் ரொம்பவே நெருக்கம். சோனம் கபூரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களே அதற்கு லவ்வபிள் சாட்சி.

Sonam Kapoor and her mother-in-law
Sonam Kapoor and her mother-in-law
www.instagram.com/sonamkapoor

2018- மே மாதம் தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்துக் கரம்பிடித்தார் சோனம். ஆனந்தும் சோனமும் சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஃபேஸ்புக், ஸ்நாப் சாட், போன் உரையாடல் என்று நட்பு பாராட்ட ஆரம்பித்தவர்கள், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துதான் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள்.

`27.5 மில்லியன் வியூவ்ஸ் வைரல் வீடியோ..!' - செயினில் மாட்டிய மனைவியின் கேசத்தை விடுவிக்கும் ஹாரி

``எங்களுடைய முதல் டேட்டிங் லண்டனில் நடந்தது. அன்றைய தினம், ஆனந்த் இதுவரை பார்க்காத அளவுக்கு மிக மோசமான ஸ்னீக்கர்ஸ் ஷூவை அணிந்திருந்தேன். அதையும் மீறி அவர் என்னிடம் தன் காதலைச் சொன்னார். அன்றைய லண்டன் தெருக்களில் நாங்களிருவரும் நடந்தபடியே பேசினோம். என் வாழ்க்கையின் மொத்தக் காதலும் ஆனந்த் தான்'' என உற்சாகத்தை வெளிப்படுத்திய சோனம், கணவரின் அம்மாவைப் பற்றி பேசுகையில், ``இந்த உலகத்தின் சிறந்த நபர் நீங்கள்தான். நான் வீட்டை விட்டுப் பிரிந்து படப்பிடிப்பில் இருக்கும்போதெல்லாம் நீங்கள் என்னைக் கொஞ்சுவதை மிஸ் செய்கிறேன்'' என்கிறார்.

Sonam kapoor and her family
Sonam kapoor and her family
www.instagram.com/sonamkapoor
`அலைபாயுதே' கார்த்திக்-சக்தி முதல் `96' ராம்-ஜானு வரை... காதலில் கற்றுக்கொள்ள வேண்டிய 14 விஷயங்கள்!

நேற்றைய தினம் சோனம் கபூரின் மாமியார் பிரியா அகுஜாவுக்கு பிறந்த தினம். மாமியாரும் தானும் அணைத்தபடி இருக்கிற புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவேற்றிய சோனம் கபூர், ``எனக்குத் தெரிந்த அளவுக்கு மிகவும் அன்பான, நேர்த்தியான, கருணையான நபர் நீங்கள்தான். என்னையும் ஆனந்தையும் உங்கள் அன்பாலும் சுவையான உணவுகளாலும் பராமரிப்பதற்கு நன்றி. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். உலகத்தின் இளமையான அம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று தன் பதிவின் வழி பாசத்தைக் கொட்டியிருக்கிறார்.

ஹேப்பி ஃபேமிலி!

அடுத்த கட்டுரைக்கு