Published:Updated:

அஜித் பொண்ணு, ரிமோட் சண்டை, சேலை போட்டோஷுட்..! - அனிகா பெர்சனல்ஸ்

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

`திரையில் புடவையில் என்னைப் பார்த்த பிறகு எனக்கே ரொம்ப அழகாகத் தோன்றியது. இப்போதெல்லாம் அதிகம் புடவை உடுத்த தொடங்கிவிட்டேன்.’

"அப்பா...." என்ற உணர்ச்சிகரமான ஒற்றை வார்த்தை மூலம் `விஸ்வாசம்' படத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அஜித்தின் மகளாகத் தோன்றிய அனிகா சுரேந்திரன்.

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

தற்போது தமிழ், மலையாள சினிமாவில் "கண்ணான கண்ணேவாக" வலம் வந்துகொண்டிருக்கும் அனிகா. 2015-ல் `என்னை அறிந்தால்' படத்தில் `ஈஷா' கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு, 'நானும் ரௌடிதான்' படத்தில் சிறுவயது காதம்பரியாகவும், `மிருதனில்' அண்ணனுக்குப் பெண் தேடும் தங்கையாகவும், `விஸ்வாசத்தில்' பாசக்கார மகளாகவும் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் பயோகிராபியான `குயின்' என்ற வெப் சீரிஸில் பள்ளிப் பருவ ஜெயலலிதாவாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இவரின் மாடலிங் போட்டோக்களை பார்த்தவர்கள் "தூக்குத்துரை மகளா இவங்க?!" என்று வியக்கும் அளவுக்கு வேறு ஒரு லுக்கில் இருந்தார்.

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

படங்களில் துறுதுறு சகோதரியாகவும் பாசக்கார மகளாகவும் நடித்து வரும் இவர் நிஜ வாழ்க்கையிலும் தன் அண்ணனுடன் சண்டை போடும் குறும்புக்கார தங்கையாகவும், அப்பாவின் செல்ல மகளாகவும் இருக்கிறா.

`குயின்' அனிகா... லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

படிப்பு, படப்பிடிப்பு என்று பிஸியாக இருக்கும் அவரிடம் பேசினோம்.

1. உங்கள் குடும்பம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...

அனிகா குடும்பம்
அனிகா குடும்பம்

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில்தான். அப்பா, அம்மா, அண்ணா, நான் என்று அழகான குடும்பம். அப்பா சுரேந்திரன் பிசினஸ்மேன். அம்மா ரஜிதா. ஆசிரியை. அண்ணா பெயர் அங்கித். இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். படிப்பு, படப்பிடிப்பு காரணமாக இப்போதெல்லாம் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. ஆனால், சேர்ந்துவிட்டோம் என்றால் வேற லெவல் ஜாலிதான்.

2. மிருதனில் பாசக்கார தங்கையாகவும் குயினில் ஸ்ட்ரிக்டான அக்காவாகவும் வரும் நீங்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி?

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

உண்மையில் நானும் என் அண்ணனும் சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட நிறைய சண்டை போடுவோம். அண்ணன்- தங்கச்சி என்றாலே அடித்துக்கொள்வது இயல்புதானே. எங்களுக்குள் அதிகம் சண்டை வருவதே டிவி ரிமோட்டுக்காகத்தான். இருந்தாலும் அண்ணனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். முன்னாடி ஒரே வீட்டுல இருந்தபோது எங்களை சமாதானப்படுத்தவே அம்மாவுக்கு நேரம் போதாது. படிப்பு, ஷூட்டிங் போன்ற காரணங்களால் நானும் அம்மாவும் இப்போ மலப்புரத்துல இருக்கோம். அண்ணா கொஞ்சம் தூரத்துல வேற வீட்டுல இருக்குறதால அவனை ரொம்பவே மிஸ் பண்றேன். ஆனால், தினமும் அவனுக்கு போன் பண்ணிப் பேசிடுவேன். அவனை அவ்வளவு பிடிக்கும்.

`டயட்டில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை!' -காரணம் பகிரும் நடிகை மேகா ஆகாஷ்

3. `என்னை அறிந்தால்', `விஸ்வாசம்' போன்ற படங்களில் அப்பா-மகள் பாசத்துக்கு எடுத்துக்காட்டாக நடித்த நீங்கள் நிஜ வாழ்க்கையில் அப்பா செல்லமா, அம்மா செல்லமா?

அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே நான் செல்லம்தான். படங்களில் மட்டும் இல்ல, நிஜத்துலேயும் நான் அப்பா மேல அதிக பாசம் வச்சிருக்கிற மகள்தான். அப்பாவுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். இப்போ எல்லாம் அண்ணாவை மிஸ் பண்ற மாதிரி அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்றேன்.

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

4. உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்னென்ன?

என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூட நேரம் செலவிடப் பிடிக்கும். பிரியாணி என்றாலே ரொம்பப் பிடிக்கும். அதுவும் மலபார் பிரியாணி என்றால் எனக்கு உயிர். தமிழ்நாட்டு உணவுகளில் பொங்கலும் சாம்பாரும் என் ஃபேவரைட்ஸ். எனக்கு அழகாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் பிடிக்கும்.

5. படிப்பு, படப்பிடிப்பு இரண்டையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?

இரண்டுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கிச் செயல்படுவேன். இரண்டு விஷயத்திலுமே குடும்பத்தினரும் நண்பர்களும் அதிகம் உதவுவார்கள். ஷூட்டிங்கிலும் எல்லாரும் நன்றாகப் பழகுவார்கள், நிறைய உதவி செய்வார்கள். இப்போது நான் 10-ம் வகுப்பு படிப்பதால் அதிக படங்களில் கமிட் ஆகாமல் படிப்பில் கவனம் செலுத்துகிறேன்.

அனிகா சுரேந்திரன்
அனிகா சுரேந்திரன்

6. நீங்கள் முதன்முதலில் புடவை உடுத்திய அந்தத் தருணம் பற்றி..?

"குயின் சீரிஸில்தான் முதலில் புடவை கட்டினேன். ஆரம்பத்தில் புடவை அணிய எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற உடைகளை அணிவதுபோல வசதியாக இல்லை என்று கூறிக்கொண்டிருந்தேன். பிறகு, திரையில் புடவையில் என்னைப் பார்த்த பிறகு எனக்கே ரொம்ப அழகாகத் தோன்றியது. அதனால்தான் இப்போதெல்லாம் புடவை உடுத்த தொடங்கிவிட்டேன். எல்லோரும் நன்றாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு