Published:Updated:

`எங்களின் பிரார்த்தனைக்குக் கிடைத்த பரிசு!' - மகளின் வரவால் நெகிழும் ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

``இதயம் கனிந்த நன்றியுடன் எங்கள் குட்டி தேவதை சமிஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று பதிவிட்டிருந்தார் ஷில்பா ஷெட்டி.

பாலிவுட்டின் பியூட்டி குயினான ஷில்பா ஷெட்டிக்குக் கடந்த 15-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை ஷில்பா ஷெட்டியும் அவரின் கணவரான ராஜ் குந்த்ராவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இன்று பகிர்ந்துள்ளனர்.

ஷில்பாவின் குடும்பம்
ஷில்பாவின் குடும்பம்

பாலிவுட், கோலிவுட் என அனைத்து இடங்களிலும் தனது நடிப்பாலும் அழகாலும் தடம் பதித்திருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை 2009-ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் வியான் ராஜ் குந்த்ரா என்று ஓர் ஆண் குழந்தை இருக்கிறது.

இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்த இவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் இந்தக் குழந்தையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவதையின் வருகையை சிவராத்திரி நாளன்று அறிவிக்க வேண்டும் என்பதும் ஷில்பா- ராஜ் குந்த்ராவின் திட்டமாம்.

குழந்தை
குழந்தை

ஷில்பா ஷெட்டி இந்தத் தகவலை தன் இன்ஸ்டாகிராமில் குழந்தை தன் கையைப் பிடித்திருக்கும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், `எங்களின் பிரார்த்தனைகளுக்கு ஓர் அதிசயம் பதிலாகக் கிடைத்துள்ளது. இதயம் கனிந்த நன்றியுடன் எங்கள் குட்டி தேவதை சமிஷா ஷெட்டி குந்த்ராவின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.

``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா?" - மகப்பேறு மருத்துவரின்  விளக்கம்

மேலும், 'சமிஷா' என்ற பெயரில் `ச' என்றால் சம்ஸ்கிருதத்தில் என்பது `வேண்டும்' என்று அர்த்தம். `மிஷா' என்றால் `கடவுளைப் போன்றவர்' என்று பொருள். கடவுளைப் போன்ற ஒருவரை நாங்கள் பெற்றுள்ளோம்.

View this post on Instagram

||Om Shri Ganeshaya Namah|| Our prayers have been answered with a miracle... With gratitude in our hearts, we are thrilled to announce the arrival of our little Angel, 🧿𝐒𝐚𝐦𝐢𝐬𝐡𝐚 𝐒𝐡𝐞𝐭𝐭𝐲 𝐊𝐮𝐧𝐝𝐫𝐚🧿 Born: February 15, 2020 Junior SSK in the house😇 ‘Sa’ in Sanskrit is “to have”, and ‘Misha’ in Russian stands for “someone like God”. You personify this name - our Goddess Laxmi, and complete our family. ⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ ⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ ⠀⠀⠀⠀⠀⠀ ~ Please bestow our angel with all your love and blessings🙏🏻❤ ~ Ecstatic parents: Raj and Shilpa Shetty Kundra Overjoyed brother: Viaan-Raj Kundra . . . . . . . . . #SamishaShettyKundra🧿 #gratitude #blessed #MahaShivratri #daughter #family #love

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

இவள் எங்கள் வீட்டின் லட்சுமி தேவி. உங்களின் ஆசீர்வாதங்களை எங்கள் தேவதைக்கு வழங்குங்கள்' என்றும் அதில் மகிழ்ச்சியுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் தம்பதியர்.

வெல்கம் பேபி!

அடுத்த கட்டுரைக்கு