Published:Updated:

6 வருடம் கழித்து, புத்தாண்டில் குடும்பத்துடன் இணைந்த கேதர்நாத் கூலித்தொழிலாளி! #KedarnathDisaster

குடும்பத்துடன், ஜமில் அஹமது அன்சாரி
குடும்பத்துடன், ஜமில் அஹமது அன்சாரி

வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, தன் நினைவுகளை இழந்து, உத்தரகாண்ட்டின் சமோலி என்ற பகுதியில் வாழ்ந்துள்ளார் ஜமில்!

கடந்த 2013-ம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதர்நாத் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கில் ஏறத்தாழ 4,000 மக்கள் உயிரிழந்திருந்தனர். வெள்ளப்பெருக்கில் இறந்தவர்களைவிடவும், காணாமல் போனவர்களே அதிகம் எனக்கூறி, காணாமல் போனவர்களைக் கண்டறியத் தனிக் குழு அமைத்து, அதற்கு `ஆபரேஷன் ஸ்மைல்' எனப் பெயரிட்டு, தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது, அன்றைய உத்தரகாண்ட் அரசு.

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு

இந்த ஆபரேஷன் ஸ்மைல் குழுவினர், இன்னமும்கூட தங்களின் தேடுதல் பணியைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

அந்தவகையில், வெள்ளப்பெருக்கின்போது காணாமல் போன கூலித்தொழிலாளி ஜமில் அஹமது அன்சாரியை கடந்த வாரத்தில் கண்டறிந்துள்ளனர் அவர்கள். வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, தன் நினைவுகளை இழந்து, உத்தரகாண்ட்டின் சமோலி என்ற பகுதியில் வாழ்ந்துள்ளார் ஜமில்.

 ஜமில் அஹமது அன்சாரி - கேதர்நாத்  வெள்ளப்பெருக்கு
ஜமில் அஹமது அன்சாரி - கேதர்நாத் வெள்ளப்பெருக்கு

ஆதரவற்று வாழ்ந்துவந்த ஜமிலின் புகைப்படத்தை, சந்தேகத்துடன் சமூகவலைதளங்களில் பகிர்ந்து அவரின் உண்மையான இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர் ஆபரேஷன் ஸ்மைல் அதிகாரிகள்.

Vikatan

65 வயது மதிக்கத்தக்க ஜமிலின் மனைவி மொபின், வெள்ளப்பெருக்கின்போதே தன் கணவர் இறந்துவிட்டதாக எண்ணி, இத்தனை வருடங்களாகக் கைம்பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். ஜமிலை அடையாளம் கண்டுகொண்ட மறுகணமே, அதிகாரிகள் அவரின் மனைவிக்கு வீடியோ கால் செய்து, செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கேதர்நாத்
கேதர்நாத்

ஆறு வருட தனிமைக்குப் பிறகு, சரியாக 2020-ம் ஆண்டின் முதல் நாளில், தனது குடும்பத்துடன் இணைந்திருக்கிறார் ஜமில்!

நம் எல்லோரையும்விட, ஜமிலின் குடும்பத்துக்கே இது ஹேப்பி ஹேப்பி நியூ இயர்!!!

அடுத்த கட்டுரைக்கு