Published:Updated:

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் மகளின் பாடல்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

அஜித்தின் மகள் அனோஷ்கா நேற்று தன் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

நடிகர் அஜித்தின் குடும்பம்
நடிகர் அஜித்தின் குடும்பம் ( facebook.com )

வருடத்தின் இறுதியில் வரும் விழா என்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்போதும் ஸ்பெஷல்தான். நேற்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

ஷாலினி, அனோஷ்கா
ஷாலினி, அனோஷ்கா
facebook.com

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் ட்ரீ வைத்து, அந்த அலங்காரங்களையும் கொண்டாட்டங்களையும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.

விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்ற திரைப் பிரபலங்களின் குழந்தைகள் என்ன செய்தாலும் அதை `ஸோ ஸ்வீட்' என்று ரசிகர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பகிரும் விஷயம் பாலிவுட்டில் அதிகம் நடந்து வருகிறது. இந்தப் பழக்கம் தற்போது கோலிவுட்டிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.

அண்மையில், நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக், ஒரு பொம்மைக் கடையில் தன் அம்மா ஷாலினியிடம் கார் பொம்மை கேட்டு அடம் பிடிக்கும்போது அதை யாரோ வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் வைரலானது.

``No CAA... No NRC" - கவனம் ஈர்த்த கேரள காதல் ஜோடியின் போட்டோ ஷூட்  போராட்டம்

இதுபோல், அஜித்தின் மகள் அனோஷ்கா நேற்று தன் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இதை வீடியோவாக எடுத்த ரசிகர் ஒருவர் இதையும் இணையத்தில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அனோஷ்கா, ஆத்விக்
அனோஷ்கா, ஆத்விக்
facebook.com

11 வயதான அனோஷ்கா படிப்பில் மட்டுமல்லாமல் நடனம், பாடல் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரும் நடிகர் சூர்யா-ஜோதிகாவின் மகளான தியாவும் நெருங்கிய தோழிகளாம். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ மூலம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் அனோஷ்கா.