பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் மற்றும் அபிஷேக் கூட்டணியில் வெளியான `பா' திரைப்படம் வெளிவந்து, நேற்றோடு பத்து ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி அப்பா அமிதாப் மற்றும் இயக்குநர் ஆர். பால்கியுடன் இணைந்து பணியாற்றியது குறித்து இன்ஸ்டாவில் பதிவொன்றை இட்டுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

அந்த போஸ்ட்டில், ``தந்தை மகனாகவும், மகன் தந்தையாகவும் மாறி இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இந்தத் திரைப்படத்துக்காக பால்கி என்னை அணுகியபோது, என்னுடைய அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேனா என்ற தயக்கம் எனக்கு இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Also Read
ஆனால், பால்கி என்னை விடுவதாக இல்லை. சொல்லப்போனால் பால்கியின் தொந்தரவு தாங்காமல், அவரை மேலும் பேசவிடக் கூடாது என்பதற்காகத்தான், இந்தப் படத்தில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார் அபிஷேக்.
மேலும், ``என் நன்றிகள் அனைத்துக்கும் ஏற்ற மற்றொரு நபர், என்னுடைய ஆரோவும் என்னுடைய பொக்கிஷமுமான என்னுடைய `ப்பா' அமிதாப் பச்சன்! என் நடிப்பின்மீதும், திறமையின்மீதும் அவர் வைத்த நம்பிக்கைதான், இன்றைக்கு என்னை இந்தளவுக்கு வெற்றி அடையவைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் கொடுத்த நம்பிக்கைதான் எல்லாத்துக்கும் காரணம். என் பொக்கிஷம் அவர்!அபிஷேக் பச்சன்
பா படத்தைப் பொறுத்தவரையில், புரொஃபஷனல் மகிழ்ச்சி என்னவெனில், நான் அப்பாவுக்கே அப்பாவாக நடித்ததுதான். பெர்சனலாகச் சொல்ல வேண்டுமென்றால், `அமிதாப்' போன்றொரு சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை தயாரித்துள்ளேன். அமிதாப்பச்சன் போன்றொரு மிகப்பெரிய நடிகரின் படத்தை தயாரிப்பதே சவால்தான்.
ஆனால், பாருங்கள்... என் முதல் தயாரிப்பே அப்பா அமிதாப்பின் படம்தான்! இதன் பின்னணியும் அப்பாதான்... அவர் கொடுத்த நம்பிக்கைதான் என்னை இவ்வளவு தூரம் தைரியமாகச் செயல்பட உந்தியுள்ளது!" பாசத்தில் நெகிழ்ந்திருக்கிறார் அபிஷேக்!