Published:Updated:

`திருமலை' விஜய் செய்தது காதலா? #AllAboutLove - 3

உங்களிடம் ஒருவர் தன் காதலைப் பகிர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒகே. ஒருவர் மேல் காதல் வந்துவிட்டது. அது க்ரஷும் இல்லை, இன்ஃபாச்சுவேஷனும் இல்லையென்றாகிவிட்டது.

காதலை அவரிடம் சொல்ல வேண்டும்?

எப்படிச் சொல்லலாம்?

எப்படிச் சொல்லக்கூடாது?

நம்மை ஒருவர் காதலிப்பதாகச் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்?

எந்த பதிலென்றாலும் அதை எப்படிச் சொல்ல வேண்டும்?

இவையெல்லாமே முக்கியமானவை. நீங்கள் ஆணோ பெண்ணோ... காதலிப்பவரோ அல்லது காதலிக்கப்படுகிறவரோ... இதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

அதற்கு முன் ஒரேயொரு நினைவூட்டல். நாம் வாழ்வது இந்தியாவில்; தமிழகத்தில். அதனால், ஃப்ரெஞ்சு நாட்டு விஷயங்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. 

காதலைச் சொல்வதை `புரபோஸ் செய்கிறோம்' என்றே சொல்கிறோம். முதலில் `புரபோஸல்' என்ற சொல்லிலேயே எனக்கு உடன்பாடில்லை. இதற்கு `முன்மொழிதல்' என்றுதான் பொருள். காதலை அப்படியெல்லாம் மொழிய முடியாது; கூடாது. நம் காதலைச் சொல்வதென்பது ஷேரிங்தானே? நம் உணர்வைப் பகிர்கிறோம். அதனால் அந்தச் சொல்லையே இனி நான் இங்கு பயன்படுத்தப்போவதில்லை. நினைவில் கொள்க, நாம் காதலை `புரபோஸ்' செய்யவில்லை. ஷேர் செய்கிறோம். அன்பையும் உணர்வையும் பகிர்கிறோம்.

love
love
proposal

அடுத்து, யார் காதலைச் சொல்வதென்பதைப் பார்க்கலாம். இங்கே ஒரு பெண் காதலைச் சொல்லிவிட்டால் கெத்தாக எதையோ செய்துவிட்டது போல பார்க்கிறோம். செய்யக்கூடாத அல்ல; செய்ய நிறைய தைரியம் தேவையான ஒன்றைச் செய்ததைப் போல ஆச்சர்யப்படுகிறோம். அதே சமயம், ஓர் ஆண் தன் காதலைச் சொன்னாலே சில ஆண்டுகள் முன்புவரை அதை ஒரு பொறுக்கித்தனமான விஷயமாகவே பார்த்து வந்தது நம் சமூகம். இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், இன்னமும் ஒரு பெண் தன் காதலை முதலில் சொல்வதை ஏற்க ஆண்களின் மனம் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுதான் நிதர்சனம். அது சமூகம் சார்ந்த பிரச்னை. நாம் அதற்குள் தலையைக் கொடுக்க வேண்டாம். நான் சொல்வதெல்லாம், எப்படி காதல் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதோ அதே போல அதைச் சொல்வதிலும் இருவரும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல.

அடுத்து, காதலைச் சொல்லும் அந்த நிகழ்வு.

இதைச் சுற்றி ஏகப்பட்ட ஜிகினாக்களைச் சுற்றி வைத்திருக்கிறார்கள். இதற்கு சினிமாவில் வந்த உதாரணமெல்லாம் தேவையில்லை. சோஷியல் மீடியாவில் வைரல் ஆன விஷயங்களையே சொல்லலாம்.

ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால். அங்கே ஆக்டிவிட்டி நடத்த நடுவில் கொஞ்சம் இடமிருக்குமே… அங்கே நிற்கிறாள் ஒரு பெண். கூட வந்தவன் திடீரென காணாமல் போகிறான். அந்தப் பெண் அவரைத் தேட, அப்போது ஒரு சிறுவன் வந்து அவளிடம் ஒரு பூ கொடுக்கிறான். உடனே ஒரு பாடல் ஒலிக்கிறது. அந்தப் பாடல் கேட்ட அடுத்த நொடி அந்தப் பெண்ணின் முகம் பரவசமடைகிறது. அவளுக்குப் பிடித்த பாடல் போல. கூட்டத்தில் இருந்து இரண்டு பேர் முன்னால் வந்து ஒரு ஸ்டெப் போடுகிறார்கள். அந்தப் பெண் ஆச்சர்யமடைகிறாள். ஆடியவர்கள் இன்னும் இரண்டு பூக்களை அவளிடம் கொடுக்க, மாலில் இருக்கும் மொத்த கூட்டமும் அவளைப் பார்க்கிறது. அந்த அட்டென்ஷனும், பூக்களும், பாடலும் அந்தப் பெண்ணை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்கிறது. என்ன நடக்கிறது, யார் செய்கிறார், எதற்காகச் செய்கிறார்கள் என்றெல்லாம் அவள் யோசிக்கவேயில்லை. நடப்பதை ரசிக்கிறாள். இரண்டு பேர் என்பது எட்டாகிறது. ஒரு ஃப்ளாஷ் மாப் அங்கே நடக்கிறது. பாடல் முடியப் போகிறது. அந்தப் பெண்ணுடன் வந்தவன், அப்போது எங்கிருந்தோ தரையில் முட்டிபோட்டு, வழுக்கிக்கொண்டே அந்தப் பெண்ணின் முன்னால் வருகிறான். பாடல் முடிகிறது. இப்போது கொஞ்சம் அமைதி நிலவுகிறது. உலக அழகி பட்டம் வென்றவரைப் போல அந்தப் பெண்ணின் முகத்தில் உணர்ச்சிகள் பொங்குகின்றன. அவர் கையிலிருக்கும் பூக்களைக் கீழே வைக்கிறார். இப்போது பாடல் வந்த இடத்தில் ஒரு குரல்..

``Jessy… i love you.. I love you to the moon and back”

அது அந்த முட்டிப்போட்டிருப்பவனின் குரல்தான் என அந்தப் பெண்ணிற்குப் புரிகிறது. அவன் தரும் பொக்கேவை வாங்கிக் கொள்ள, அவன் எழுந்து நிற்கிறான். அந்தப் பெண் அவனை அணைத்துக் கொள்கிறாள். ஓர் உன்னதமான ரொமான்ட்டிக் படத்தை நேரில் பார்த்ததைப் போல கூட்டத்தில் சிலரின் கண்களின் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அத்தனை பேரின் மொபைலும் இதைப் படம் பிடிக்கிறது. அந்தப் பெண் அதைப் பெருமையுடன் பார்க்கிறாள். தன் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதென மகிழ்கிறான் அந்த இளைஞன்.

இங்கே எனக்கொரு கேள்வி. அந்தப் பெண்ணை மகிழ்ச்சியாக்கியது அந்த இளைஞனின் காதலா அல்லது ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அந்தப் பெண்ணுக்குக் கிடைத்த ஸ்பெஷல் அட்டென்ஷனா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி ஆரம்பமே மாஸாக, அசத்தலாக, உச்சபட்ச சிரத்தையெடுத்து தொடங்க காதல் என்ன கமர்ஷியல் படமா? இப்படி தன் காதலைச் சொன்னவன், அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த நாளை இப்படிக் கொண்டாடமால் போகும் வாய்ப்பிருக்கிறது. அப்போது அந்தப் பெண்ணின் மனம் என்ன ஆகும்? நிச்சயம் அவள் எதிர்பார்ப்பாள். அதில் தவறுமில்லை. காரணம், நம் ஹீரோ செட் செய்த அதீத எதிர்பார்ப்புகள். மேலே சொன்ன உதாரணம்தான் அதீதம் என்றில்லை. ரத்தத்தில் கடிதமெழுதுவது, தன் சக்திக்கு மீறிய பணத்தில் எதாவது வாங்கி வருவது போல எல்லாமே அதீதம்தான். யோசித்துப் பாருங்கள். புரபோஸ் (வேறு வழியில்லை. பயன்படுத்திவிட்டேன்) செய்பவனுக்குதான் இந்த ஜிகினாக்கள் தேவை. தன் காதலைப் பகிர நினைப்பவர்களுக்கு இவையெல்லாம் தேவைப்படாது. அவர்கள் பெரிதாகத் திட்டமிடுவதில்லை. என்ன செய்து தன் காதலன்/காதலியை ஒகே சொல்ல வைக்க முடியுமென பிரயத்தனப்படுவதில்லை. ஷேரிங்தானே நம் தேவை? சர்ப்ரைஸ் பண்ணுவது இல்லைதானே..

love proposal
love proposal
Surprise Machi
காதல் செய்வது எப்படி? #AllAboutLove ❤️ - புதிய தொடர் - 1

திருமலை படம் பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் `க்ரிஞ்ச்'தான். அதில் விஜய்க்கு ஜோதிகா மீது காதல். அவள் வீட்டுக்கேச் சென்று காதலைச் சொல்லிவிடுவார். ஜோதிகாவுக்கு விஜய்யைப் பிடிக்காது. ஆள் வைத்து அடிப்பார்; அசிங்கப்படுத்துவார். ஆனால் விஜய் தொடர்ந்து காதலிக்கிறேன் என்றே சொல்வார். ஒரு கட்டத்தில் ஜோதிகாவின் தோழி காதலிப்பதாகப் பொய் சொல்ல சொல்வார். ஜோதிகாவும் சொல்ல, அவ்வளவுதான். `நீ என்னை அவ்ளோ கஷ்டப்படுத்திருக்க.. உனக்கு என் மேல காதல் வந்தா... அந்த நொடி இப்ப சொன்னியே.. ஐ லவ் யூ. அப்படிச் சொல்ல வார்த்தை வராது. ஓ...ன்னு அழுகைதான் வரும்” என்பார். அந்த அழுகைதானே காதல்? அந்த உணர்வுதானே காதல்? க்ரீட்டிங் கார்டில் எழுதி நீட்டுவதா காதல்? ஆனால், விஜய் காதலைச் சொல்லிய விதமும் தவறுதான். ஒரு பெண்ணை எந்த அளவுக்குத் தொந்தரவு செய்ய முடியுமோ, எங்கெல்லாம் எல்லை மீற முடியுமோ அத்தனையையும் செய்வார். கல்லூரி, வீடு, யோகா மையம் என ஜோதிகா செல்லும் இடங்கள் அனைத்துக்கும் எல்லை மீறி செல்வார். அது தவறு.

உங்களிடம் ஒருவர் தன் காதலைப் பகிர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? முதலில் யோசியுங்கள். அவர் அப்படிச் சொல்ல நீங்கள் ஏதேனும் வகையில் காரணமாக இருந்திருக்கிறீர்களா என யோசியுங்கள். அப்படி ஒரு நம்பிக்கையைத் தரும்படி நீங்கள் நடந்திருந்தாலும் தவறில்லை. உங்கள் மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். அவர் நேர்மையாகத் தன் காதலைச் சொல்லியிருக்கிறார். நீங்களும் நேர்மையாக என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள். முடிந்தவரை அவர் ஈகோ பாதிக்காதபடி எடுத்துச் சொல்லுங்கள். அது நமக்கும் ஒரு விதத்தில் பாதுகாப்பான நடவடிக்கை என்பதை உணருங்கள். எந்தச் சூழலிலும், ``உன் ஸ்டேட்டஸ் என்ன என் ஸ்டேட்டஸ் என்ன?”, ``உன் அழகென்ன என் அழகென்ன?’ போன்ற எதிர்வினைகளை தவிருங்கள். சக மனிதன் மீதான அன்பில்தான் இந்த உலகமே இயங்குகிறது. போலவே காதலும் அந்த ஈர்ப்பும் இயல்பானது. அதைத் தவறாக நினைக்க ஏதுமில்லை. அதே சமயம் ஒருவர் தன் காதலைப் பகிர்வதால் அங்கே `நோ' சொல்லக்கூடாது என்ற கட்டாயமுமில்லை.

thirumalai vijay
thirumalai vijay

சரி. காதலைச் சொல்ல விரும்புவர்கள் யோசிக்க ஒன்றுமில்லையா? இருக்கிறது. நிறையவே இருக்கிறது. காதலைப் பகிர போகிறவருக்கு அது முக்கியமான தருணம். அதற்கு அவர் முழுமையாகத் தயாராகியிருப்பார். ஆனால், அதைக் கேட்கப் போகிறவரின் மனநிலை நமக்குத் தெரியாது. வேலையில் பாஸிடம் திட்டு வாங்கிவிட்டு வெளியே காட்டாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கலாம். அவருக்குத் தெரிந்த யாரேனும் மரணமடைந்திருக்கலாம்; தற்கொலைகூட செய்திருக்கலாம். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலிருக்கலாம்.

அவருக்கு யார் மேலேனும் காதல் வந்து அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். இந்த மனக்குழப்பங்கள் அத்தனையையும் அவர் இன்னொருவருக்குச் சொல்லியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே, உங்கள் காதலை நீங்கள் சொல்லும் தருணம் அவரும் அதே போல மகிழ்ச்சியடைய வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை உணருங்கள். சிலருக்கு உடனே ஏற்க சில தடைகள் இருக்கலாம். அதற்காகக் காதலே இல்லை என்றாகிவிடாது. அவருக்கு யோசிக்க நேரம் தேவைப்படலாம். எது எப்படியோ, காதலைப் பகிர்பவர்கள் பதிலை எதிர்பார்த்து பகிராதீர்கள். உங்கள் காதலைச் சொல்லிவிட்டால் போதும். எப்படியும் எதாவது ஒருவகையில் சில நாள்களில் அவர் எண்ணத்தைச் சொல்லிவிடுவார். இங்கே, காத்திருப்பதுதான் உங்கள் காதலுக்கு செய்யும் நியாயம்.

#AllAboutLove
#AllAboutLove
இந்த மூணுல உங்க காதல் எந்த வகை?! - #AllAboutLove - 2

முன்பின் தெரியாத பெண்ணிடம் திடிரென அலாவுதீன் பூதம் போல முன்னால் தோன்றி லெட்டர் நீட்டுபவர்களையோ, லவ் பண்ணலைன்னா பிளேடால கையை அறுத்துப்பேன் என்பவர்களையோ இங்கே சொல்லவில்லை. எது காதல் எது க்ரஷ் என்பதையெல்லாம் முந்தைய அத்தியாயத்திலே சொல்லியாகிவிட்டது. இது காதல் என்ற ஒன்றைப் பகிர்பவர்களைப் பற்றிதான். 

கடைசி விஷயம். ஆனால் முக்கியமான விஷயம். காதல் என்பது திருமணத்திலோ அல்லது வாழ்நாள் முழுமையாகத் தொடர்தலோ மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதற்காக காதல் என்பதைத் திருமணம் பற்றிய உத்தரவாதமாகப் பார்க்கத் தேவையில்லை. நட்பு காதலாக மாறலாம். ஒரு காதல் திருமண உறவாக மாறலாம். காதலைச் சொல்பவரிடம் அது பற்றி நிச்சயம் உரையாடலாம். கலந்தாலோசிக்கலாம். ஆனால், `லவ் பண்றேன்’ என்பவரிடம் `கல்யாணம் பண்ணிப்பன்னு சத்தியம் பண்ணு’ எனக் கேட்பது காதலாகாது. 

``இவன் என்னடா இப்படி சொல்றான். அப்ப காதலிச்சா கல்யாணம் பண்ன தேவையில்லையா?” எனக் கோபப்பட வேண்டாம். காதலின் அடுத்தடுத்த நிலைகள் பற்றி இனி பேசுவோம்.

- காதலிப்போம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு