Published:Updated:

தாம்பத்திய உறவுக்கு செக்ஸ் டாய்ஸ் ஓகேதானா? |காமத்துக்கு மரியாதை S 2 E 29

காமத்துக்கு மரியாதை

``கணவர் வெளிநாட்டில் இருந்தால், இன்டர்நெட் வழியாகக் கணவனும் மனைவியும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி உறவு வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு கொண்ட திருப்தியையும் செக்ஸ் டாய்ஸ் தரும். ஆனால், இதில் சில சிக்கல்களும் உள்ளன.''

தாம்பத்திய உறவுக்கு செக்ஸ் டாய்ஸ் ஓகேதானா? |காமத்துக்கு மரியாதை S 2 E 29

``கணவர் வெளிநாட்டில் இருந்தால், இன்டர்நெட் வழியாகக் கணவனும் மனைவியும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி உறவு வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு கொண்ட திருப்தியையும் செக்ஸ் டாய்ஸ் தரும். ஆனால், இதில் சில சிக்கல்களும் உள்ளன.''

Published:Updated:
காமத்துக்கு மரியாதை

செக்ஸ் டாய்ஸுடன் உறவு கொள்ளுதல் குறித்த செய்திகளும் வீடியோக்களும் அவ்வப்போது நம் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. அந்தளவுக்கு செக்ஸ் டாய்ஸ் இயல்பான விஷயங்களில் ஒன்றாகிக்கொண்டிருக்கிறது. மேஜரான அனைவருமே செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தலாமா; அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன? விளக்குகிறார், பாலியர் மருத்துவர் காமராஜ்...

``செக்ஸ் டாய்ஸ் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது. கத்தியைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்து ஓர் உயிரைப் பிழைக்கவும் வைக்கலாம்; ஓர் உயிரை எடுக்கவும் செய்யலாம். அந்த உபகரணம் யாரிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் அமையும். செக்ஸ் டாய்ஸின் நிலையும் இதுபோன்றதுதான். முதலில் இதன் பாசிட்டிவ் பக்கங்களைச் சொல்லிவிடுகிறேன்'' என்றவர் தொடர்ந்தார்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

``திருமணம் செய்துகொள்ளும் வயதில் இருப்பவர்கள்; திருமணமாகாதவர்கள்; திருமணமானவர்கள் என அனைவரும் விருப்பம் இருக்கும்பட்சத்தில் செக்ஸ் டாய்ஸை பயன்படுத்தலாம். அதனால், அவர்களுக்கு உடல்ரீதியில் எந்தக் கெடுதலும் ஏற்படாது.

திருமணமானவர்களைப் பொறுத்தவரை, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைய ஆரம்பிக்கிறது என்றால், செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தலாம். இதன் மூலம் கிடைக்கிற வித்தியாச உணர்வால் தம்பதியருக்குள் கிளர்ச்சி அதிகரிக்கும். உறவின் எண்ணிக்கை கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கணவர் வெளிநாட்டில் இருந்தால், இன்டர்நெட் வழியாக கணவனும் மனைவியும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி உறவு வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு கொண்ட திருப்தியையும் செக்ஸ் டாய்ஸ் தரும்.

பாலியர் நிபுணர் காமராஜ்
பாலியர் நிபுணர் காமராஜ்

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைவது மிகமிக சிரமம் என்பது தற்போது அனைவருக்குமே தெரியும். ஆண் சில நிமிடங்களில் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். ஆனால், பெண்ணுக்கோ அதற்கு 10 நிமிடங்களுக்கும் மேல் தூண்டுதல் தேவைப்படும்.

இந்தத் தூண்டுதல் குறித்த விழிப்புணர்வு கணவர்களுக்கு இல்லாதபோது அல்லது கணவரால் வெகு நேரம் தூண்ட முடியாமல் போகும்போதும் வைப்ரேட்டர் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை; அதனால் ஆரோக்கியத்துக்கு எந்தக் கெடுதலுமில்லை'' என்றவர் செக்ஸ் டாய்ஸால் தம்பதியர் இடையே என்ன சிக்கல்கள் வரலாம் என்பது பற்றி விளக்க ஆரம்பித்தார்.

``கணவனும் மனைவியும் வழக்கமான முறையில் தாம்பத்திய உறவு கொள்ளாமல் செக்ஸ் டாய்ஸை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தால், இருவரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ `இவர்/இவள் என்னைத் தவிர்க்கத்தான் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணம் வந்துவிடலாம். அது சில மனக்கஷ்டங்களை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடலாம். இதனால், உண்மையான தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படலாம்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

தனக்குப் பதிலாக செக்ஸ் டாய்ஸ் என்பதை சிலரால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதுவும் ஒருவகையான பொசசிவ்னெஸ் தான். ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பதே நல்லது. இருவருக்கும் சம்மதம், இதனால் உறவு கொள்வதில் ஈடுபாடு அதிகரிக்கிறது என்றால் ஓகேதான்.

ஒரு செக்ஸ் டாயை பலர் பயன்படுத்தினால், ஹெச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், அதைத் தவிர்த்துவிடுங்கள்'' என்ற எச்சரிக்கையுடன் முடித்தார் டாக்டர் காமராஜ்.